Author Topic: ஏன் இந்த நாடகம்?  (Read 1291 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஏன் இந்த நாடகம்?
« on: October 17, 2012, 06:36:55 AM »
மிருகத்தில் இருந்து
மனிதன் பிறந்தவன் தான்...
ஏற்றுகொள்ளாத மனம்
ஒத்துக் கொண்ட நேரமிது...

சுயநல மிருகம் உள் வர
பொய்க்  குடியேறியது..
பாழாய்ப்போன  பதவியாசை
பலவற்றிலும் பார்த்து
நொந்து போன நேரமிது...

பொறாமை மிருகங்களினால்
பொறுமை இழந்து
மனம் தவிக்கிறது..

முதன்மை தேடி அலையும் மிருகம்
தன் மதிப்பை இழந்து
கடைசியை கைப்பற்றுகிறது
நல் உள்ளங்களில்...

பலநேரங்களில் உண்மை
நிலைப்பதில்லை
எல்லாநேரங்களிலும் பொய்
ஜெயிப்பதில்லை...
ஏன் இந்த நாடகம்?

அற்ப விஷயங்களில்
நாட்டம் கொள்ளும் மனமே
உணமையாய்  ஒரு நாள்
உன்னிலையில் வாழ்வாயா??...
சுயநலமாய் நடித்து நடித்து
உன்னிலை நீ மறப்பாயா?? :-X
« Last Edit: October 17, 2012, 02:57:38 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #1 on: October 17, 2012, 02:39:56 PM »
கவிதை நன்று .. சொந்த அனுபவமாய் இருந்தால்  மனவருத்தங்கள் ..


Quote
பொறாமையில்லா
மிருகங்களினால்
பொறுமை இழந்து
மனம் தவிக்கிறது..


இதன் அர்த்தம் என்னவென்று சரியாக புலப்படவில்லை தெளிவு படுத்த முடிமா
Quote
முதன்மை தேடி அலையும் மிருகம்
தன் மதிப்பை இழந்து
கடைசியை கைப்பற்றுகிறது
நல் உள்ளங்களில்...


ரசித்த வரிகள் ... நன்று


                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #2 on: October 17, 2012, 03:00:02 PM »
கவிதை நன்று .. சொந்த அனுபவமாய் இருந்தால்  மனவருத்தங்கள் ..


Quote
பொறாமையில்லா
மிருகங்களினால்
பொறுமை இழந்து
மனம் தவிக்கிறது..


இதன் அர்த்தம் என்னவென்று சரியாக புலப்படவில்லை தெளிவு படுத்த முடிமா
Quote
முதன்மை தேடி அலையும் மிருகம்
தன் மதிப்பை இழந்து
கடைசியை கைப்பற்றுகிறது
நல் உள்ளங்களில்...


ரசித்த வரிகள் ... நன்று




நன்றிகள் ரோஸ்..

பொறமை என்று அங்கு வரவேண்டும்

சொந்த அனுபவம் தானே கவிதையாக வரும் பல நேரங்களில்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Aadava

  • Guest
Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #3 on: October 17, 2012, 09:51:54 PM »
சில பேர் இருக்கிறார்கள் ஸ்ருதி. நடிப்பு ஒன்றுதான் அவர்களின் வாழ்க்கையே.

முதலில் வரவேண்டும் என்று துடிப்பார்கள், அதற்கு எல்லா குறுக்குவழியையும் அடைய முயற்சிப்பார்கள்.. சுயநல மிருகங்கள் என்ற சொல்கூட அவர்களுக்குப் பொருந்தாது.. மிருகங்களுக்கும் சில நல்லுணர்வுகள் உண்டே.

நல்ல கவிதை. அனுபவம் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தமாதிரி கயவர்களிடமிருந்து தள்ளியே இருங்கள். அல்லது போட்டு தள்ளிவிடுங்கள்!! :)

அன்புடன்
ஆதவா.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #4 on: October 18, 2012, 04:46:05 PM »
மனித வாழ்கையே இயந்திர  மயமாகி  போய்டுச்சி  ஸ்ருதி அப்போ நாடகமா தான்  மனிதர்கள்  பல நேரம் வாழ்கிறார்கள் நல்லா எழுதி இருக்க ஸ்ருதி  :-*
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Anu

Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #5 on: October 19, 2012, 10:33:40 AM »

பலநேரங்களில் உண்மை
நிலைப்பதில்லை
எல்லாநேரங்களிலும் பொய்
ஜெயிப்பதில்லை...

அற்ப விஷயங்களில்
நாட்டம் கொள்ளும் மனமே
உணமையாய்  ஒரு நாள்
உன்னிலையில் வாழ்வாயா??...

nice kavithai..
nice lines cuty  :)


Offline kanmani

Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #6 on: October 25, 2012, 01:58:23 AM »
Quote
பலநேரங்களில் உண்மை
நிலைப்பதில்லை
எல்லாநேரங்களிலும் பொய்
ஜெயிப்பதில்லை...

nice lines shruthi

Offline Dong லீ

Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #7 on: October 28, 2012, 03:34:04 PM »
அருமையான கவிதை

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #8 on: October 29, 2012, 12:53:32 AM »
remba arumai machal nalla karuthai solli iruka keep wirte more ;D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ! SabriNa !

Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #9 on: October 29, 2012, 04:14:24 PM »
பொறாமை மிருகங்களினால்
பொறுமை இழந்து
மனம் தவிக்கிறது..


thithi sis...lol

nice try sis..keep on going ♥...
« Last Edit: October 29, 2012, 04:15:57 PM by Sharmi »


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ஏன் இந்த நாடகம்?
« Reply #10 on: October 30, 2012, 12:32:12 PM »
எல்லோருக்கும் நன்றிகள்....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்