Author Topic: உன்னை சேராத கடிதம்  (Read 1647 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னை சேராத கடிதம்
« on: September 21, 2012, 03:00:39 PM »
உன் மௌனங்களை தேடியே
மரணித்து விழுகிறது எண்ண திவலைகள்
உன் எச்சங்கள் எல்லாம்
மிச்சமாய் நின்று
என் விரதத்தை மிரட்டுகின்றது

நாசி துவரதுள் புகும்
உன் நினைவு சுமந்த
தென்றல் காற்றும்
ஊசியாய் உள் புகுந்து
என் சுவாசப் பையை
சல்லடைகளாய் துளைத்து செல்கிறது

இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது ..

என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...
                    

Offline Gotham

Re: உன்னை சேராத கடிதம்
« Reply #1 on: September 21, 2012, 03:26:55 PM »
சேராத கடிதமென்றில்லை
மனதுள் ஏறாத
கடிதமாயிருக்கலாம்..


சுவாச பெருமூச்சுக்களுக்கிடையே
தொலைந்து போன
ஞாபக அலைகள்


மன்னவனிடம் சீக்கிரமே சேரும்
கவலையேன்?!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #2 on: September 21, 2012, 03:32:36 PM »
நன்றிகள் கோதம்  ஹிஹிஹீ   PVT வர காணல.. இதுல எரிட்டாலும் மனசுல >:( >:( :o :o ::) ::) ;D
                    

Offline Gotham

Re: உன்னை சேராத கடிதம்
« Reply #3 on: September 21, 2012, 03:35:34 PM »
வந்தேனே நீங்க தான் பதில் சொல்லல..  :-[

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #4 on: September 21, 2012, 03:38:17 PM »
வந்துட்டு நான் திரும்பி பாக்குறதுக்குள்ள ஓட்டம் ...  >:( ;D
                    

Offline Gotham

Re: உன்னை சேராத கடிதம்
« Reply #5 on: September 21, 2012, 03:40:34 PM »
உங்க கையெழுத்துல இருக்க படத்த விட நீங்க லேட்டா திரும்பினா நான் என்ன பண்றது?  :(

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #6 on: September 21, 2012, 04:06:04 PM »
hahahahahaa  ;D funy
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #7 on: September 22, 2012, 03:03:02 AM »
//இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது ..//

உணர்வுகளின் அருமையான வெளிப்பாடு, வார்த்தை கோர்ப்புகளும் சிறப்பு

இறுக்கி தளர்த்தி எதிர்ப்பதங்களை ஒன்றாக்கியமை மிக நன்று

//என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...//

சில கடிதங்கள் கடவுளின் காலடிக்கு போல பிராத்தனை துண்டு மாதிரி ஏரிட்டு கூட பார்க்கப்படுவதில்லை, எனினும் நமக்கு ஒரு நம்பிக்கை அது என்றைக்காவது திறக்கப்படுமென‌

அதனால்தான் இது போன்ற கடிதங்கள் திரும்ப திரும்ப எழுதப்படுகின்றன‌

பாராட்டுக்கள்ங்க‌
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #8 on: September 25, 2012, 12:46:00 AM »
இப்படி நிறைய கடிதங்கள் எழுதபடாமலே இருக்கிறது ... நன்றி ஆதி 
                    

Offline Anu

Re: உன்னை சேராத கடிதம்
« Reply #9 on: September 25, 2012, 06:38:56 AM »

இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது

என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று

indha varigal enaku romba pidichi iruku rose dear..


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #10 on: September 25, 2012, 01:01:45 PM »
எனக்கும் பிடித்த வரிகள் அனும்மா நன்றிகள் அனும்மா   :-*
                    

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #11 on: September 25, 2012, 01:49:23 PM »
என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...//


இருக்கும் காலங்கள் கிடைக்கும் நேரங்களும்  மிக குறைவு குளோபல் .எழுத நினைக்கும் கடிதங்களை எழுதிவிடு .சிலரால் மட்டும் தான் மனதின் உணர்சிகளை கவிதையில் வெளி கொணர முடியும் .தொடர்ந்து  எழுது குளோபல் வாழ்த்துக்கள்
« Last Edit: September 25, 2012, 01:51:17 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னை சேராத கடிதம்
« Reply #12 on: September 25, 2012, 02:09:16 PM »
ஹஹா பாவி .. ம்ம் ஆனா நாம எழுதுறது  அவங்கள பொறுதவர குப்பைல போடுற ஒண்ணுதான் என்ரப்போ எழுத மனம் வருமா என்ன .. பின்னூட்டத்துக்கு நன்றிகள் பாவி