//இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது ..//
உணர்வுகளின் அருமையான வெளிப்பாடு, வார்த்தை கோர்ப்புகளும் சிறப்பு
இறுக்கி தளர்த்தி எதிர்ப்பதங்களை ஒன்றாக்கியமை மிக நன்று
//என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...//
சில கடிதங்கள் கடவுளின் காலடிக்கு போல பிராத்தனை துண்டு மாதிரி ஏரிட்டு கூட பார்க்கப்படுவதில்லை, எனினும் நமக்கு ஒரு நம்பிக்கை அது என்றைக்காவது திறக்கப்படுமென
அதனால்தான் இது போன்ற கடிதங்கள் திரும்ப திரும்ப எழுதப்படுகின்றன
பாராட்டுக்கள்ங்க