கண் பார்க்க முடியாமல் போனாலும் _உன்னை
காதலித்து விட கனாக் கண்டேன்
என்னை நீ அறியாமல் போனாலும் _ உனை நான்
அறிந்துவிடக் கனாக் கண்டேன்
என்றேனும் ஒர் விடியலிலே _ நீ
எனைத் தேடிவிடக் கனாக் கண்டேன்
நீ செல்லும் பாதையில் பின்பற்றி _உன்
நிழலாகி விட கனாக் கண்டேன்
உனக்காக உருகுகின்ற என் மனதை _ நீ
ஒரு நாள் உணர்ந்திட கனாக் கண்டேன்
உன்னோடு ஒர்நாளில் _ நான்
உறவாகிவிட கனாக் கண்டேன்
சூரியனாக நீயெனை சுட்டாலும் _ உன்
சொந்தமாகிவிட கனாக் கண்டேன்
நீயெனை விடு விலகினாலும் _ நான்
நிழலாகி விட கனாக் கண்டேன்
மனதினை ஜெய்பவனே_உன்
மனதை ஜெயித்து விட கனாக் கண்டேன்