9 மே 2013
தின பலன்
ராசி குணங்கள்
மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களுடன் விரிசல் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்
ராசி குணங்கள்
மிதுனம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா
ராசி குணங்கள்
கடகம்
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்
ராசி குணங்கள்
சிம்மம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்
ராசி குணங்கள்
தனுசு
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை
ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை
ராசி குணங்கள்
கும்பம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக் குறியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசி குணங்கள்
மீனம்
இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை