இன்றைய ராசி பலன்கள் -03/07/2013
மேஷம்: இன்று, வாழ்வில் கூடுதல் வளம் பெற, தேவையான பணிபுரிவீர்கள். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் உதவுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில், அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: இன்று, உங்களின் எதார்த்த பேச்சு, பிறர் மனதை சங்கடப்படுத்தலாம். கவனம் தேவை. கூடுதல் உழைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். பணவரவை விட குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். கூர்மையான பொருட்களை, கவனமுடன் பயன்படுத்தவும். அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகலாம்.
மிதுனம்: இன்று, உங்கள் செயல்களில் மதிநுட்பம் நிறைந்திருக்கும். நற்குணம் உள்ளவர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும்.
கடகம்: இன்று, மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். தாமதமான பணி ஒன்றை, மாற்றும் உபாயம் பின்பற்றி நிறைவேற்றுவீர்கள். தொழில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். நண்பருடன் விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
சிம்மம்: இன்று, உங்கள் உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும். பொது இடத்தில், அதிக நேரம் வேடிக்கை பார்க்கக் கூடாது. தொழிலில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி, விற்பனை எதிர்பார்த்ததை விட குறையலாம். காலக்கெடு தவறிய உணவுப்பொருள், கவனக்குறைவால் வாங்க நேரிடலாம்.
கன்னி: இன்று, சுயலாபம் பெற ஒருவர், உங்களை புகழ்ந்து பேசுவார். தகுதிக்கு மீறிய அளவில், வாக்குறுதி தரவேண்டாம். தொழிலில் உருவாகிற குளறுபடி சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். வெளியூர் பயணத்திட்டத்தில், மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
துலாம்: இன்று, உங்கள் மனதில் கலைரசனை அதிகரிக்கும். பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தொழில் உற்பத்தி, விற்பனையின் அளவு குறித்த காலத்தில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: இன்று, மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். வாழ்வில் எதிர்மறையாக உள்ள செயல்களை பலமிழக்கச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, சமரச பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு வந்து சேரும்.
தனுசு: இன்று, அடுத்தவரிடம் நீங்கள் கொண்ட நம்பிக்கை குறைவு படலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய அதிகம் பணிபுரிவீர்கள். சராசரி அளவில், பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை, கவனமுடன் பாதுகாக்கவும். புத்திரரின் நற்செயல், பெருமை தேடித்தரும்.
மகரம்: இன்று, எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்வது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். பணவரவை விட குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். உடல் நலத்திற்கு, ஒவ்வாத உணவு வகை உண்ணவேண்டாம். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
கும்பம்: இன்று, செயல்களில் அனுபவ ஞானம் பரிமளிக்கும். தாமதமான பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து மனதில் மகிழ்வைத் தரும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.
மீனம்: இன்று, மனதில் இனம் புரியாத பதற்றம் ஏற்படலாம். பெற்றோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழிலில் உருவாகிற இடையூறு சரி செய்வீர்கள். அடுத்தவர் பார்வையில் தெரியும் படி, அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டாம். ஒவ்வாத உணவு வகை உண்பதை தவிர்க்கவும்.