Author Topic: கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு  (Read 642 times)

Offline thamilan

கவலைகள் என்ன‌
கைவிரல் நகமா
உதிராமல் போவதற்கு

அவை
நம் ஆடையின்
தூசுகளே
தட்டி விட்டால் 
உதிர்ந்து விடும்

மூலையில் அமர்ந்து
கவலையெனும்
முகமூடிக்குள் முகத்தை
புதைத்துக் கொண்டால்
பகல் கூட‌
இரவாகத்தான் தெரியும்

அழுது கொண்டே
வாழ்வதை விட‌
சிரித்துக் கொண்டே
சாவது சுகமானது

விளக்கு
வீட்டில் எரிவதைக் காட்டிலும்
உன் இதயத்தில்
எரியட்டும்
பிறகு பார்
இருட்டும் உன்
பாதங்களை வணங்கி
வழிகாட்டும்

சோகப்பட்டவன்
வீணையக் கூட‌
விறகாக்கி விடுகிறான்

மகிழ்ச்சியில் இருப்பவனோ
மண்பானையையும்
வாத்தியமாக‌
வாசித்துக் காட்டுகிறான்

நேற்று என்பது
சருகு
தூக்கி எறி
நாளை என்பது
அரும்பு
மலருவதற்கு முன்பு
மடிவதும் உண்டு
கனவுகளை கலை
இன்று என்பதோ
பூத்துக் குலுங்கும்
புஸ்பங்கள்
பொழுதை வீணாக்காமல்
பூவை ரசி
தேனை ருசி

Offline Global Angel

Quote
வாழ்வதை விட‌
சிரித்துக் கொண்டே
சாவது சுகமானது

விளக்கு
வீட்டில் எரிவதைக் காட்டிலும்
உன் இதயத்தில்
எரியட்டும்


உண்மைதான் தமிழன் அழகான வரிகள் ....