கீதையில் தத்துவம் நீ
நீ மெய்ஞானி
விதையின் விருட்ச்சம் நீ
நீ விஞ்ஞானி
உலகை ஆள்பவன் நீ
நீ முதலாளி
எவர்க்கும் உதவுவதால் நீ
நீ பரோபகாரி
நோய்களைத் தீர்ப்பதால் நீ
நீ மருத்துவன்
சட்டங்களை உருவாக்கியவன் நீ
நீ வழக்கறிஞன்
புரியாத கணக்குகளை போடுபவன் நீ
நீ ஆடிட்டர்
நம்ப முடியாததையும் நடத்திக் காட்டுபவன் நீ
நீ மந்திரவாதி
எது நடந்தாலும் நியாயப்படுத்துபவன் நீ
நீ அரசியல்வாதி
ஆசை காட்டி மோசம் செய்பவன் நீ
நீ நயவஞ்சகன்
நிஜமான பக்தருக்கு கேட்டதை கொடுப்பவன் நீ
நீ கொடையாளி
உனக்கு வேண்டியதை
நாள் தவறாமல் வசூல் செய்பவன் நீ
நீ கந்துவட்டிக்காரன்
இத்தனையாய் இருக்கிற
உலக மகா நாயகனே இறைவா நீ
நல்லவனா கெட்டவனா