Author Topic: ந‌ல்ல‌வ‌னா கெட்ட‌வ‌னா  (Read 761 times)

Offline thamilan

கீதையில் தத்துவம் நீ
நீ மெய்ஞானி

விதையின் விருட்ச்சம் நீ
நீ விஞ்ஞானி

உலகை ஆள்பவன் நீ
நீ முதலாளி

எவர்க்கும் உதவுவதால் நீ
நீ பரோபகாரி

நோய்களைத் தீர்ப்பதால் நீ
நீ மருத்துவன்

சட்டங்களை உருவாக்கியவன் நீ
நீ வழக்கறிஞன்

புரியாத கணக்குகளை போடுபவன் நீ
நீ ஆடிட்டர்

நம்ப முடியாததையும் நடத்திக் காட்டுபவன் நீ
நீ மந்திரவாதி

எது நட‌ந்தாலும் நியாயப்படுத்துபவன் நீ
நீ அரசியல்வாதி

ஆசை காட்டி மோச‌ம் செய்ப‌வ‌ன் நீ
நீ ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ன்

நிஜ‌மான‌ ப‌க்த‌ருக்கு கேட்ட‌தை கொடுப்ப‌வ‌ன் நீ
நீ கொடையாளி

உன‌க்கு வேண்டிய‌தை
நாள் த‌வ‌றாம‌ல் வ‌சூல் செய்ப‌வ‌ன் நீ
நீ க‌ந்துவ‌ட்டிக்கார‌ன்

இத்த‌னையாய் இருக்கிற‌
உல‌க‌ ம‌கா நாய‌க‌னே இறைவா நீ
ந‌ல்ல‌வ‌னா கெட்ட‌வ‌னா
« Last Edit: June 09, 2012, 10:20:35 PM by thamilan »

Offline Anu

Re: ந‌ல்ல‌வ‌னா கெட்ட‌வ‌னா
« Reply #1 on: June 09, 2012, 07:38:41 PM »


இத்த‌னையாய் இருக்கிற‌
உல‌க‌ ம‌கா நாய‌க‌னே இறைவா நீ
ந‌ல்ல‌வ‌னா கெட்ட‌வ‌னா

superb lines thamilan..
kadavul nallavarku nallavar kettavar kettavar:D
idhu thaane nidharsana maana unmai (F)(F)