Author Topic: இதயமானவளே ! உனக்காக !  (Read 727 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இதயமானவளே ! உனக்காக !
« on: May 28, 2012, 05:22:29 PM »
நான் இல்லா பொழுதுகளில்
நீ எப்படி உணர்ந்தாய்?
என்னவெல்லாம் உணர்ந்தாய் ??

என ஒரு சிறு கேள்வி எனை கேட்டால் .
வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு ரீதியில்
வெவ்வேறு விதமான நிலைகளின்  நிலைபாட்டை
விளக்கமாய் விளக்குவேன் !

நீ நீங்கிய நேரங்களில் என் நிலைகள்

மருத்துவ ரீதியில் சொல்வதானால்
சுயநினைவே இல்லாதிருந்தேன் !

ஆன்மீக ரீதியில் சொல்வதானால்
சபிக்கபட்டிருந்தேன் !

பொருளாதார ரீதியில் சொல்வதானால்
திவாலாகி இருந்தேன் !

அரசியல் ரீதியில் சொல்வதானால்
அதிரடியாய் பதவிநீக்கம் செய்யபட்டிருந்தேன் !

அலுவலக ரீதியில் சொல்வதானால்
தற்காலிக பணிநீக்கம் செய்யபட்டிருந்தேன் !

கவித்துவ ரீதியில் சொல்வதானால்
கற்பனைத்திறன் களவாடபட்டிருந்தேன் !

ஓர் மாவட்டத்தின் ஆட்சியாளர் ரீதியில் சொல்வதானால்
பிணை கைதியாய் கடத்தபட்டிருந்தேன் !

சென்னைவாசியின் ரீதியில்  சொல்வதானால்
200 *c   பாகை செல்சியஸ்  வெப்பத்தினை அனுபவித்திருந்தேன்

உன் இதயம் கவர்ந்தவன் எனும் ரீதியில் சொல்வதானால்
இதயத்துடிப்பையே நிறுத்தி வைத்திருந்தேன் !

இதயமானவளே ! உனக்காக !
« Last Edit: May 28, 2012, 06:46:09 PM by aasaiajiith »

Offline supernatural

Re: இதயமானவளே ! உனக்காக !
« Reply #1 on: May 28, 2012, 07:35:33 PM »
கவித்துவ ரீதியில் சொல்வதானால்
கற்பனைத்திறன் களவாடபட்டிருந்தேன்

பிரிவின் கொடுமையை எளிமையாய் ...அதே சமயம்
இனிமை சற்றும்  குறியாமல்..
அருமையாய் உரைக்கும் வரிகள்..



உன் இதயம் கவர்ந்தவன் எனும் ரீதியில் சொல்வதானால்
இதயத்துடிப்பையே நிறுத்தி வைத்திருந்தேன் !



அன்பின்  புனிதம்...
காதலின் உன்னதம்...
நேசத்தின் உச்சம்...
உச்சத்தின் உச்சத்தில் இவ்வரிகள்....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: இதயமானவளே ! உனக்காக !
« Reply #2 on: May 28, 2012, 10:43:22 PM »
நண்பா உன் கவிதை வரிகள் அனைத்தும்
என் இதயத்தை இதமாய் வருடுகின்றன
இந்த கவிதையை நான் வாசித்த போது
உணர்ந்தேன் சுயநினைவு ,சபிக்கப்படுதல்
திவால் ,பதவிநீக்கம் ,பணிநீக்கம்
கற்பனைத்திறன் களவாடப்படுதல்,
பிணைக்கைதி ,200*c வெப்பம்
இதயத்துடிப்பு  நிறுத்தம்
ஆனால் என் இனியவளுக்ககவா
அல்லது உன் கவிதைக்காகவா என்று
தெரியவில்லை !!!


nanba un kavithayil valiyayum valimayayum valiyura koori irukirirgal