கோரிக்கை முன் வைத்திருக்கும் காரிகையே !
கவிதை களம் செழிக்க செய்யும் கார்த்திகையே !
உன் இருப்பு இருக்கும் வரை , எழில் நிறைந்த
புனித தமிழுக்கும் ,இனிமை கவிதைக்கும் சிறிதே ஆனாலும்
கொஞ்சும் அழகான உன் கோரிக்கைக்கும் ,இவை எல்லாவற்றையும் விட
படிக்க துடிக்கும் உன் (பொன் ) மனது வருத்தப்படாமல் இருப்பதற்கும்
அன்பே !
பணிவே !
பண்பே !
கனிவே !
நிச்சயம் இனி நான் பொறுப்பு !