Author Topic: 🌀தொலைந்து போகிறோம்  (Read 38 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 320
  • Total likes: 1279
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
🌀தொலைந்து போகிறோம்
« on: February 16, 2026, 04:14:13 PM »
ஒற்றை குறுஞ்செய்திக்காக பலமுறை
பார்க்கப்படும் அலைப்பேசி உணர்த்துகிறது...
காய்ந்த சறுகில் பூத்த மலராயினும்
அதன் ஆயுட்காலம் குறைவு தானே...
நினைவுகளை மாற்றும் நிஜமாயினும்
இவையும் நாளைய நினைவுகள் தானே...
இன்று கண்கள் தேடும் கனவாகினும்
இவையும் நாளைய காணல்நீர் தானே...
தீரா காதல் பிம்பங்களும்
நாளை கலைந்து போகும் கனவுகள் தானே...
காலோட்டத்தில் எழும் உணர்வுகள் எல்லாம்
நாளை வற்றி போகும் ஓடை தானே..
இதில் நீயும் நானும்
மட்டும் விதி விலக்கா???
தேடப்படும் ஒவ்வொரு தேடலிலும்
ஏனோ தொலைந்து போகிறோம்...
« Last Edit: February 16, 2026, 05:44:39 PM by Yazhini »

Offline அனோத்

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 383
  • Total likes: 1364
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !
Re: 🌀தொலைந்து போகிறேன்🌀
« Reply #1 on: February 16, 2026, 05:27:19 PM »
உங்கள் கவிதை ஆழமான சிந்தனையையும்
உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு வரியும் வாழ்க்கையின்
நிலையற்ற தன்மையை நுட்பமாக பிரதிபலிக்கிறது.
மிகவும் பாராட்டத்தக்கது.

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1265
  • Total likes: 4329
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: 🌀தொலைந்து போகிறோம்
« Reply #2 on: Today at 12:28:47 PM »
அழகான கவிதை
ஆழமான கருத்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
தொலைந்து போகாமல் இருக்கட்டும்
நம் எழுத்துக்களும்
சிந்தனைகளும்
அனுபவங்களும்  :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "