Author Topic: காதலும் ,தேநீர் கோப்பையும்!  (Read 122 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1265
  • Total likes: 4329
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

மாலை வெயிலின்
பொன்னிற கீறல் மெல்ல
ஜன்னல் சீலைத் தாண்டி
அறையின் தரையில் விழும் வேளையில்

என் கைகளில்
ஒரு தேநீர் கோப்பை
உன் நினைவுகள் அதிலே
கரைந்து நிற்கின்றன

தேநீரின் வாசனை
மழைக்குப் பிறகு
மணக்கும் மண்ணின் வாசனைபோல்
மனதை நனைக்கிறது;

தேநீரின் சூடு கைகளில் பட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளின் சூடு என
உணர்கிறேன்

காதல் என்பது
ஒரு தேநீர் ஊற்றுவது போலதான் என்று
யாரோ சொன்னதுண்டு
அதிகமாகக் கொதித்தால் கசக்கும்,
அதிக நேரம் காத்தால் சுவை மாறும்,
சரியான தருணத்தில்
சரியான அளவு இனிப்போடு
சரியாக கலந்து விட்டால்
இதயம் வரை இறங்கும்

நீயும் நானும்
ஒரே மேசையின் இருபுறமும் அமர்ந்து
தேநீரை பகிர்ந்த நாட்கள்
கண்முன் வர
கோப்பையின் விளிம்பில்
உன் உதட்டுச் சுவடு இருந்தது
அதைப் பார்த்தவுடன்
என் உள்ளத்தில் அலை எழுந்தது

ஒரு சின்ன புன்னகை
சர்க்கரையாக கரைந்து
அதை உருகச் செய்தது.

கோப்பையின் அடியில்
சிறிது தங்கியிருக்கும் தேநீர் போல
சில நினைவுகள் எப்போதும்
முடிவில் தங்கிவிடும்

தேநீரின் கடைசி மிடறு
தொண்டையை நனைத்து
முழு மாலையையும் நிரப்பும்

நீ இல்லாத மாலைகளில் கூட
தேநீர் தயாராகிறது;
நீரின் கொதிப்பு
உன் பெயரைச் சொல்கிறது;
பாலின் வெண்மை
உன் மென்மையை நினைவூட்டுகிறது;
சர்க்கரையின் கரைவு
உன் சிரிப்பின் சத்தம் போல.

ஒரு நாள்
கோப்பை உடைந்தாலும்
தேநீரின் வாசனை
அறையில் சில நொடிகள் தங்கும்
அப்படியே
ஒரு நாள் நாம் பிரிந்தாலும்
காதல் என்ற நீராவி  இந்த
பிரபஞ்சத்தில் நீண்ட நேரம் தங்கும்.

காதல்
ஒரு சிறிய கோப்பையில் அடங்கிய
ஒரு பெரிய உலகம்
தேநீர்
ஒரு சாதாரண பானமல்ல,
நினைவுகளின் இசை.

காதலும் தேநீர் கோப்பையும்
இரண்டும் ஒரே மாதிரி
இரண்டின் சுவை உணர்ந்தபின்
விட்டு விலகுதல் என்பது
எளிதல்ல


***Joker***

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1924
  • Total likes: 5984
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: காதலும் ,தேநீர் கோப்பையும்!
« Reply #1 on: February 17, 2026, 12:59:59 PM »
மச்சி 🤩 நேத்து நைட்டு தான் உங்க கவிதையை படிச்சேன் செம சூப்பர்... ஒவ்வொரு லைன்லையும் டீ யோட வாசனையும் சூடும் தூக்கலா இருந்துச்சு... இந்த கவிதையை படிக்கும்போது எனக்கு ஓவியம் உயிராகிறது ப்ரோக்ராம் ல நான் எழுதுன ஒரு கவிதை தான் ஞாபகம் வந்துச்சு

https://friendstamilchat.in/forum/index.php?topic=54134.0

ஜோக்கர் மச்சி 🍀உங்க கவிதை
ஒரு அழகான எழுத்து
ஒரு அழுத்தமான உணர்வு
ஒரு அழியாத சுவை 😋
Posi(tea)ivity 🤩

« Last Edit: February 17, 2026, 01:07:23 PM by சாக்ரடீஸ் »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1265
  • Total likes: 4329
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
தேநீருக்கு மேலும் சுவை சேர்த்தது
உங்கள் கருத்துக்கள்
நன்றி மச்சி  :) :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "