புல்லை
உண்ணும் பூச்சி,
பூச்சியை
உண்ணும் தவளை,
தவளையை
உண்ணும் பாம்பு,
பாம்பினை
உண்ணும் கழுகு,
கழுகைச்
செரிக்கும் மண்,
மண்ணில்
விழும் விதை என...
மீண்டும்,
தொடங்கும் சுழற்சி
அனைத்தையும்,
கொல்லும் நாம்...
உண்ணப்படுதலுக்கும்,
கொல்லப்
படுதலுக்குமிடையே
ஊடாடும்
இப் பூமியில்
நம் வாழ்நாள்...