Author Topic: அம்பேத்கர் நினைவு நாள் !  (Read 21 times)

Offline சாக்ரடீஸ்



தொட்டவுடன் தீட்டென்று
தீண்டாமை சொன்னவர்கள் முன்னே 
தலை நிமிர்ந்து நின்று
புத்தியைத் தீட்டியவர். 

கல்வியால் கண்களைத்
திறந்து வைத்தார் 
அதிகாரத்தால் அடிமைச்
சங்கிலியை உடைத்தார். 

“என் உரிமை என் கையில்” என்று
உரத்துச் சொன்னார்.
மானிடனுக்கு மானம்
தந்த மகான் அம்பேத்கர். 

அவர் தந்த பாதையில்
நடக்கிறோம் இன்று
அவரொரு நட்சத்திரம்
நாமோ அவரது வெளிச்சம்.

அம்பேத்கர் நினைவு நாளில்
அவர் பெற்ற உரிமையைப் பயன்படுத்துவோம்
அவர் கனவு கண்ட சமத்துவத்தை வாழ்வோம்

ஜெய் பீம் !