Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 387  (Read 72 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 387

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Thenmozhi

             நீயும் நானுமாய்!

இறைவனுடைய விதிப்படி இன்றைய மாங்கல்ய திருநாள் நமதே!
இரு மனங்களும் காதலித்து காத்திருந்து ஒருமனதாய் சேரும் நாளும் இதுவே!
இனிய காலைப்பொழுதினில் இன்னிசை மேள,தாளங்களுடன் ஆரம்பித்தது எங்கள் திருமணமே!

மணமகனாய் அலங்கரிக்கப்பட்டு மணமேடையில் எனக்காக காத்திருந்தாய்!
மலர்மாலையினை அன்னநடையில் என் கரங்களில் ஏந்தி,  உன் கழுத்தினில் அணிவித்தேன்!
மணகளாய் உன் அருகில் அமர்ந்த என்னை உன் ஓரப்பார்வையினால் இரசித்தாய்!
மலர்ந்த புன்னகையுடன் நாணத்தில் நான் தலை குனிந்தேன்!

மந்திரங்கள் ஓதி ஐயர் அக்கினி வளர்க்க !
மங்கள இசை "மாங்கல்யம் தந்துணானே " என ஒலிக்க !
மனதார வாழ்த்த உற்றார் ,உறவினர்கள் நம்மை சூழ்ந்திருக்க!
மகிழ்வுடன் மாங்கல்யத்தை உன் கையில் ஏந்தி ,என் கழுத்தில் முடிச்சிட்டாய்!
மலர்ந்த உன் இதழினால் என் பிறை நுதலில் அன்பாக முத்தம் இட்டாய்!

என் காதினில் செல்லமாக "I love you பொண்டாட்டி" என்றாய்!
எல்லாம் மறந்து உன் வசம் ஆகி விட்டேன் அத்தருணத்தில்!
என் பட்டுச்சேலை முந்தானையில் உன் பட்டு வேக்ஷ்டி தலைப்பு முடிக்கப்பட்டன இணைபிரியாமல்!
என் கையினை உன் கரத்தினால் இறுகப் பற்றிக்கொண்டாய் மூச்சு உள்ளவரை உன்னை விடமாட்டேன் என்று!

அக்கினியை மும்முறை வலம் வந்தோம் வாழ்க்கை உறுதிமொழி எடுத்தவாறே!
அம்மி மிதித்த என் பாத விரல்களை பிடித்து மெட்டி போட்டு ,தலை நிமிர்ந்து நோக்கினாய் என்னை!
அருந்ததி பார்த்து பெற்றோர், உற்றார் ஆசி பெற்றோம் எங்கள் இல்வாழ்க்கைக்கு!
அன்று நடந்த நீர் பானைக்குள் கணையாழி எடுக்கும் போட்டியில் விட்டுக்கொடுத்து மகிழ்ந்தோம்!

இத்திருமண நாள் கனவுகளுடன் தேன்மொழி இங்கே!
இத்தனைக்கும் சொந்தமான என்னவன் எங்கே!
இந்த ஆசை கனவு நனவாக நீயும் நானுமாய்!



« Last Edit: Today at 05:01:01 AM by Thenmozhi »

Offline Yazhini

அழகான காதல் ஓவியம்
நம் திருமண நிழற்படம்...
உன் கரம்பற்றிய நினைவுகளை
மீண்டும் ஒருமுறை புரட்டி பார்க்கிறேன்...

தங்கு தடையில்லாமல் அழகாக
தொடங்கியது நம் காதல் கதை.
உன்னை விட்டு விலகிவிலகி சென்ற போதும்
விரட்டி விரட்டி காதல் செய்தாய்
உன் அதீத அன்பினால் வசிகரித்தாய்..

கடல் தேடி பாயும் நதிபோல்
உன்னை தேடி வர செய்தாய்
சுற்றம் மறந்து முற்றும் மறந்து
உன்னில் தஞ்சம் கொண்டது பேதையுள்ளம்..
உன் நினைவுகளில் மூழ்கிய
என்னை மீட்க - உன்னில்
புதைய சித்தமானேன்....

சித்திரை பூக்களின் மணமுடன்
திருமணத்தில் மனமும் மணக்க...
வற்றா ஜீவஊற்றாய் அன்பும் வழிந்தோட
இரு உயிர்களின் முக்காலத்தையும்
ஒன்றாக பிணைக்கும் மூன்று முடிச்சு
முடிவடையா உணர்வுகளின் நீர் ஊற்று.

உன் கைப்பிடிக்குள் அன்னையின்
கதகதப்பை உணர்ந்திட
மகிழ்ச்சியில் புன்னகையுடன் கண்ணீரும்
சிறிது கலந்து உறவாடியது...
நீயே என் பாதி
என மனமும் மண்டியிட்டது...

எண்ணிலடங்கா நினைவுகளின் பொக்கிஷம்
நாம் அன்பால் இணைந்த திருமண புகைப்படம்... 💜 💜 💜
« Last Edit: Today at 05:11:16 AM by Yazhini »