நீயும் நானுமாய்!
இறைவனுடைய விதிப்படி இன்றைய மாங்கல்ய திருநாள் நமதே!
இரு மனங்களும் காதலித்து காத்திருந்து ஒருமனதாய் சேரும் நாளும் இதுவே!
இனிய காலைப்பொழுதினில் இன்னிசை மேள,தாளங்களுடன் ஆரம்பித்தது எங்கள் திருமணமே!
மணமகனாய் அலங்கரிக்கப்பட்டு மணமேடையில் எனக்காக காத்திருந்தாய்!
மலர்மாலையினை அன்னநடையில் என் கரங்களில் ஏந்தி, உன் கழுத்தினில் அணிவித்தேன்!
மணகளாய் உன் அருகில் அமர்ந்த என்னை உன் ஓரப்பார்வையினால் இரசித்தாய்!
மலர்ந்த புன்னகையுடன் நாணத்தில் நான் தலை குனிந்தேன்!
மந்திரங்கள் ஓதி ஐயர் அக்கினி வளர்க்க !
மங்கள இசை "மாங்கல்யம் தந்துணானே " என ஒலிக்க !
மனதார வாழ்த்த உற்றார் ,உறவினர்கள் நம்மை சூழ்ந்திருக்க!
மகிழ்வுடன் மாங்கல்யத்தை உன் கையில் ஏந்தி ,என் கழுத்தில் முடிச்சிட்டாய்!
மலர்ந்த உன் இதழினால் என் பிறை நுதலில் அன்பாக முத்தம் இட்டாய்!
என் காதினில் செல்லமாக "I love you பொண்டாட்டி" என்றாய்!
எல்லாம் மறந்து உன் வசம் ஆகி விட்டேன் அத்தருணத்தில்!
என் பட்டுச்சேலை முந்தானையில் உன் பட்டு வேக்ஷ்டி தலைப்பு முடிக்கப்பட்டன இணைபிரியாமல்!
என் கையினை உன் கரத்தினால் இறுகப் பற்றிக்கொண்டாய் மூச்சு உள்ளவரை உன்னை விடமாட்டேன் என்று!
அக்கினியை மும்முறை வலம் வந்தோம் வாழ்க்கை உறுதிமொழி எடுத்தவாறே!
அம்மி மிதித்த என் பாத விரல்களை பிடித்து மெட்டி போட்டு ,தலை நிமிர்ந்து நோக்கினாய் என்னை!
அருந்ததி பார்த்து பெற்றோர், உற்றார் ஆசி பெற்றோம் எங்கள் இல்வாழ்க்கைக்கு!
அன்று நடந்த நீர் பானைக்குள் கணையாழி எடுக்கும் போட்டியில் விட்டுக்கொடுத்து மகிழ்ந்தோம்!
இத்திருமண நாள் கனவுகளுடன் தேன்மொழி இங்கே!
இத்தனைக்கும் சொந்தமான என்னவன் எங்கே!
இந்த ஆசை கனவு நனவாக நீயும் நானுமாய்!