Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 382  (Read 155 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 382

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Lakshya

வானத்தில் பறக்கும் ராகங்கள் !!!

மெளனமாய் நின்ற இரவின் நிழலில்,
நட்சத்திரங்கள் கீதம் பாடுகின்றன...
காற்றின் ஓசையிலும் இசை உண்டு,
மழையின் துளிகளிலும் தாளம் உண்டு...

ஒரு தாளம் ஒலிக்கும் நேரம், புதிய கனவுகள் மலர தொடங்குகிறது !!!
ஆன்மாவின் ஆழத்தில் உண்டாகும் ஒளியாய் பாடல் பிறக்கிறது...

மெளனத்தில் பிறக்கும் மெல்லிசை,
வேதங்களில் ஓங்கும் ராகம்,
அதுதான் Classical இசை...

பியானோ, கிட்டார், டிரம்ஸ் ஒலியில்
இதயத்தை ஆட்டும் ரிதம்,
அதுதான் Modern இசை...

உயிரின் நரம்புகளைக் கூட
நாதமாய் நெஞ்சில் பிணைக்கும் குரல்,
மருந்தாகும் மெட்டுகள்,
மனமகிழ்க்கும் தாளங்கள்...

சங்கீதம் பிறந்தது மனிதன் பிறக்கும் முன்பே,
பிரபஞ்சம் உருவான முதல் நொடியே
ஒலி தோன்றியது...

சொல்லத் தெரியாத நெஞ்சங்களின் குரல்,
விளக்க முடியாத உணர்வின் மொழிபெயர்ப்பு....

இசை வெறும் ஒலி மட்டும் அல்ல, இதயம் பேசும் மொழியும் ஆகும்...
இசை கற்றவர் பாடகர் மட்டும் அல்ல மருத்துவரும் என்பதே உண்மை!!!

உலகம் முழுதும் மௌனமாக இருந்தாலும்,
இசை மட்டும் பேசும்…
அது சொல்லும் வார்த்தை ஒன்று தான் –
"நீ ஒருபோதும் தனியாக இல்லை"


"ஒவ்வொரு இதயமும் ஒரே தாளத்தில் தான் துடிக்கிறது"
« Last Edit: September 15, 2025, 10:12:16 PM by Lakshya »

Offline Clown King

என் உயிரை உன் இசையால் வசப்படுத்தியவளே
என்னை மீண்டும் பிறக்கச் செய்தாய் இன்னிசைக் கொண்டு என் மனமே என் மனமே என்று


திக்கு தெரியாத காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்த என்னை உன் இசையால் அடிமைப்படுத்தியவளே வெட்கப்படவில்லை அடிமையாய் இருப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன் உன்  இசைக்கு அடிமையாக இருப்பதற்கு

வாழ்க்கை எனும் சக்கரத்தில் சிக்கி சின்னா பின்னமான எண்ணெய் மீட்டெடுத்தது உன் இசை என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் நீ அல்லவோ

என் அழகியே உன் குரல் வளத்தை கேட்டபின் மீண்டும் உயிர் வாழ ஆசைப்பட்டேன் துவண்டு கிடந்திருந்து பல சமயங்களில் என்னை  உயிர்த்தெழுப்பியது உன் இசையே காத்துக் கிடப்பேன் பல மணி நேரங்கள் வள்ளலாய் வருவாய் நீயும் உன் இசை அமுதத்தை எனக்கு அளிக்க காத்துக்கிடப்பதிலும் சுகம் உண்டு என்று அப்போது அறிந்தேன்

இசைக்கும் அழகுக்கும் சம்பந்தம் உண்டோ  உண்டு என்பதே என் கூற்று அவள் பாடியதால் தான் அந்தப் பாடலும்  அழகு பெற்றது பாடல்களில் இடம் பெற்ற ஒவ்வொரு வார்த்தையும் உயிர் பெற்றது அவள் உச்சரித்ததால் தான்
அதற்காகவே அவ் வார்த்தைகளும் பிறந்தது போல



இசையை மருந்தாகிய துண்டு என்று கேள்விப்பட்டதுண்டு ஆனால் உன் இசையோ என்னை உயிர்ப்பிக்கவும் செய்தது வாழ்க்கையை வாழவும் செய்தது

இசையால் மனம் வயப்படும் மனம் வயப்பட்டால் காதல் தோன்றும் காதல் தோன்றின் உறவு கொள்ள தோணும் உறவு கொள்ள வேண்டாமடி என் அழகியே உயிர் வாழ்ந்தால் போதும் என்றும் உன் இசையை கேட்டுக் கொண்டு என் ஆயுள் முழுவதும் ......CLO
WN KING 🤡


[/b][/b][/color][/color][/color][/color][/b]
« Last Edit: Today at 12:04:58 AM by Clown King »

Offline Thenmozhi

        என் ஆருயிர் இசையே!

என் ஆருயிர் இசையே!
எண்ணில் அடங்காது உன் புகழ் சொல்ல!
என் அன்னை கருவில் உன்னை முதல் ரசித்தேன்!
என் அம்மா பாடிய தாலாட்டு என் மனதில் அடி எடுத்து வைத்தது உன்னை நேசிப்பதற்கு!
என் குடும்ப,உறவினர் பரிசளித்த விளையாட்டுப் பொருட்கள் இசை கருவிகளின் இரசனையை என் மனதில் எழுப்பியதே!

பாடசாலையில் இசை கல்வி அறிவினை குருவிடம் கற்றறிந்தேன்!
பாடும் பாடகர் பாடல்களை இடை விடாது இரசித்தேன்!
பாடல்கள் பல பாடும் என் தாத்தா இசையை வியந்து கேட்டேன்!
பாடும் குருவியாய் பட்டாம்பூச்சியாய் குழந்தை பருவத்தில் பறந்து  திரிந்தேன்!

என் துன்பத்திலும் ,இன்பத்திலும் கூட இருந்தாய் இசையே!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு ஆறுதலாய் எப்போதும் இருக்கின்றாய் இசையே!
என் தனிமையை தள்ளிப்போடுவதும் நீ அல்லவா என் ஆருயிர் இசையே!

இசையே உன் மாதா " சுருதி" , பிதா "லயம்" உன்கூட எப்போதும் இருப்பதால் நீ இன்னிசை ஆகின்றாய்!
இசையே நீ இன்னிசை, மெல்லிசை,பண்ணிசை,துள்ளல் இசை,பறை இசை,கானா இசை,ரீமிக் இசை என்ற பெயர்களில் பாடல்களை தாங்கி வருகின்றாய்!
இசையே படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை நீ சந்தோசப்படுத்துகின்றாய்!

கருவில் இருந்து கல்லறை வரை மனித வாழ்வில் நீ முக்கியமானவளே!
கடவுளுக்கு கூட உன்னைப் பிடித்ததனால் ,அவர்கள் கைகளில் இசைக்கருவிகள் இருக்கின்றனவோ!
கல்யாண வீடுகளில் வாசிக்கும் மங்கள வாத்திய இசையில் மயங்கிய நாட்கள் எத்தனையோ!
கருமாரி வீடுகளில் வாசிக்கும் பறை இசை கூட ஆட வைத்து கவலைகளை மறக்க வைக்கின்றனவே!

இன,மத ,மொழி பேதமற்றவள் நீயடி!
இவ்வுலகில் எந்த தேசத்தில் இருந்தாலும் உன்னை ரசிக்கலாம்!
இன்னிசையே உன்னை ரசிக்க மொழி முக்கியம் இல்லையடி!
இசைக் கருவிகளில் பல்வேறு இசைக் கானமாய் காற்றில் தவழ்ந்து வருவாயடி!
இசையால் வசமாகாத இதயம் ஏதடி!

எங்கும் இசை எதிலும் இசை நீயே இருப்பாயடி!
எல்லா இணைச்செயற்பாடுகளிலும்,இயற்கையிலும் நீ தானே இருக்கிறாயடி!
இளம்பருவம் முதல் முதுமைப் பருவம் வரை உன்னை ரசிப்பேனடி!
இன்னிசையாக நான் ரசிப்பதற்காக பண்பலையில் பாடல்களாக நீ வருவாயடி!

எத்தனை உறவுகள் இருந்தாலும்,நான் தேடும் ஆனந்தம் தருவது இசை நீயடி!
என் சோகம்,வலிகளை மறக்க உணர்வளித்தாயடி!
என் தனிமை நேரத்தில் துணை தோழி நீயடி!
என் வெற்றி,புகழில் கூட நீ இருப்பாயடி!
என் மனதின் மாமருந்து இசை நீயடி!

அதிகாலை, அந்திமாலை என்று நேரம் பாராமல் உன்னை ரசிக்கும் ரசிகை நானடி!
அசைந்து ஆடி உன்னை ரசித்தபடி உணவு சமைத்து நான் உணவருந்துவேனடி!
அசந்து நான் தூங்கும் போது என் தாலாட்டு நீயடி!
அயராது நான் வேலை பார்ப்பதற்கு நீ எந்தன் ஊன்றுகோல் நீதானடி இசையே!

தனிமையில் உன்னை ரசித்தேன நான்-அப்போதெல்லாம்
தமிழ் அரட்டை அரங்க நண்பர்களுடன் பண்பலையில் ரசிக்கிறேன் - இப்போதெல்லாம்
தருகின்றனர் பாடகர்கள், இசையமைப்பாளர் கள்,பாடலாசிரியர்கள் சிறந்த பாடல்களாக உன் இசையில்!
தந்தணத்தோம் தாளம் போட்டு என்னை ஆட வைக்கின்றதே இசை உன்னை ரசிக்கும் போதினிலே!
தரணியை விட்டு என்னுயிர் போகும் தருணத்தில் கூட,ஆருயிர் இசையே உன்னை பிரியாத வரம் வேண்டும் எனக்கு!

மங்கையே ஒலிவாங்கியை கரங்களில் ஏந்திவிட்டாய்!
மனதார இசைத்திடு உந்தன் இசைக்கானத்தினை!
மன மகிழ்வோடு ரசிப்பதற்காக காத்திருக்கின்றாள் அன்புத்தோழி தேன்மொழி!
மன நிறைவுடன் வாழ்த்துகின்றேன் என் ஆருயிர் இசையே ,நீ இன்னும் வளர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று!








 
« Last Edit: September 15, 2025, 10:05:21 PM by Thenmozhi »

Offline Yazhini

இசையே! மயக்கும் மாயாவியே!!!
மனக்காயங்களின் அருமருந்தே!
உயிர்தாகத்தின் நீர் ஊற்றே!
சிதறும் சிந்தனையின் கடிவாளமே!
தனிமையின் உயிர் தோழனே!

உனது ஆதி தான் என்ன?
வரையறை தான் என்ன??
அல்லது வடிவம் தான் என்ன???
உலகம் உருவாகும் முன்னரே பிறந்திருப்பாயா?
அல்லது உயிர்களின் உயிராக தரித்திருப்பாயா??
மதம் கடந்து மொழி கடந்து
நாடு கடந்து அனைவரையும்
ஆட்கொள்ளும் இசையே!!!
உன்னை நண்பன் என்பதா?
துணைவன் என்பதா?? அல்லது
இறைவனின் மொழி என்பதா???

கருவறை தொட்டு கல்லறை வரை
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்
ஒவ்வொரு வடிவம் ஏற்கிறாய்...
சிலநேரங்களில் மனதை உலுக்கி
பித்தாகவும் மாற்றுகிறாய்...
தாலாட்டில் தவழ்ந்து
அம்மானையில் விளையாடி
காதல்கவியில் உணர்வாகி
வாழ்வின் பலமாறுதல்களில் தத்துவமாக உருபெற்று
இறுதியில் ஒப்பாரியோடு மனிதவாழ்வு
இசையோட்டத்தில் நிறைவுற...
நீயோ...

நுரைத்து பாயும் நதியின் சலசலப்பு
மரக்கிளை அசைவின் ஒலி
பல கதைகள் பேசும்
கடலலையின் ஆர்ப்பரிக்கும் ஓசை...
காலை துயில் கலைக்கும் புள்ளினங்களின் அமுத காணம்
இடி முழக்கத்துடன் பூமியை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கும் மழையின்
இன்னிசை கச்சேரி...
கொட்டும் அருவியின் ஆரவாரம்...
என்று எங்கும் நிறைந்து நிற்கிறாய்...
எதிலும் கலந்து மயக்குகிறாய்...
இயற்கையில் லயித்து போக செய்கிறாய்....
முக்காலமும் உலகை ஆள்கிறாய்...
இறையன்பு பணி செய்கிறாய்...
எங்கும் வியாபித்து இருக்கின்றாய்🎶🎵🎶
« Last Edit: September 15, 2025, 10:35:10 PM by Yazhini »

Offline Evil

இசை ஒவ்வொரு உயிர்களின் ஓசை !

இசை மழலையின் அம்மா என்ற முதல் சொல் அம்மாவிற்கு இசை போன்று ஒலிக்கும் !


இசை என்பது நமக்கு புத்துயிர் தருவது! இசை மனதை ஆறுதல் படுத்தி, காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவும் ,தனிமையில் யாரும் இல்லை என்று நினைக்கையில் நான் இருக்கிறேன்  என்று தோள் கொடுக்கும் தோழனாகவும் இருக்கிறதே !
இசை அணு தினமும் காலை முதல் மாலை வரை பயணிக்கும் வாழ்க்கையில்  ஒரு முக்கியா பங்கு வகிக்கிறதே !
இசை பயணத்தின் பொழுது  பயணிகளின் துணையாக செல்கிறதே!
இசை அவர்களின் பயண சோர்வையே போக்கி புத்துணர்வுடன் பயணம் மேற்கொள்ள வைக்கிறதே!

இசை நாட்டு பற்று பாடலாக ஒரு மனிதனின் சிறு வயது முதல் அவன் ஆயுள் வரை இசையின் ஒரு துளி சுவாசம் இல்லாமல் அவனின் வாழ்க்கை என்பது இருக்காது என்றாலும் மிகையாகாது!

முத்தமிழான  இயல் ,இசை, நாடகத்தில் இன்றி அமையாது இசை என்றால் அது மிகையாகாது !

 ஒரு கருத்தையோ ,ஒரு இனத்தின் புரட்சியையோ மக்களிடம் சேர்க்க இசையே சிறந்த கருவி !

அன்றே எமது கவி பாரதி இசையை கையில் எடுத்தார் வீரம் கொண்ட பாடல்கள் மூலம் மக்களிடையே இருந்த பிளவுகளை நீக்கி ஒற்றுமை கொண்டு வந்து போராடிட வித்திட்டவர் !
இவரே மக்களிடத்தில் இருந்த ஜாதி கொடுமைகளை தட்டி கேட்ட மகான்!
 ஓர் இசையினால் வந்த பாடலே "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற ஒற்றை வரியில் சிறுவயதினிலே ஜாதி என்பதனை இசையால் ஒழிக்க முடியும் என்பதனை புரிந்து இசையினால் இந்த உலகை ஆண்டா கவிஞர் இவரே

இசையை இரசிதிடுவோம் இன்பமாய் வாழ்ந்திடுவோம்!
« Last Edit: Today at 09:12:05 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline RajKumar

இரத்த நாளங்களில் கலந்து உண்ர்வுகளுடன் இணைந்து
செவியினுள் தேன் அமூதாய் ஒலிக்கும்
உணர்வே இசை
மயில் அகவலும் இசை
குயில் கூவலும் இசை
துள்ளும் சாரலும் இசை
வான இடியும் ஒரு இசை
ஓடை ஒலிப்பதும் இசை
ஆற்றின் சலனமும் இசை
மரக்கிளையில் அசைந்து ஆடும்
இலையின் அசைவும் இசை
வண்டுகள்  மது அருந்த பூவை சுற்றி
ரிங்காரம் இட்டுவதும் இசை
பறவைகளின் கூவலும் இசை
அருவி கொட்டுவதும் இசை
கடல் அலைகள் கரையுடன்
உறவாடுவதும் இசை
அலைகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதும் இசை
கடல் அலைகள் பாறையுடன் மோதுவதும் இசை
மின்னல் இடி முழக்கம் இசை
முங்கிலுடன் காற்று உறவாடுவதும் இசை
மெட்டி ஓசையும் இசை
ஜீமிக்கி ஆடுவதிசை
வளையல் குலுங்குவதும் இசை
கொலுசு சிணுங்குவதிசை
மனமகிழ்ச்சியில்  இசை
மனமுறிவிலும் இசை
அசை போடவும் இசை
உறங்க வைப்பதும் இசை
கிறங்க வைப்பதும் இசை

எத்தனை ஆனந்தம் என்னுள்
இசை கேட்டும் போது
என் மகிழ்ச்சி, சோகம், வலி,
இன்னும் எண்ணற்ற உணர்வுகளுக்கு
மகிழ்வான தீர்வைத் தருவது இசை
என் தனிமையை மறக்க செய்து
என்னை நித்திரை செய்ய வைப்பதும் இசை
இசையால் வசம் ஆகாத இதயம் ஏது
தாளத்துக்கு ஏற்ப தலையாட்ட வைப்பதும் இசை
இப்பரந்த உலகத்தில்
விரைந்த இயந்திர  வாழ்க்கை
ஒட்டி கொண்டு இருக்கும் நாம்
இசையைக் கொண்டு
நம் மனத்தின் பல காயங்களுக்கு
நல்ல மருந்தாய் ஆகுகிறதே  இசை
இசையால் இணைவோம்