Author Topic: FTC பதினான்காம் ஆண்டு நிறைவு விழா - சிறப்பு கவிதை நிகழ்ச்சி  (Read 2539 times)

Offline Forum

நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் பதினான்காம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் ..

எதிர்வரும் ஜூலை 29 ஆம்  தேதிக்கு  முன்பாக
உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் பதினான்காம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்களை வந்தடையும்.

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1241
  • Total likes: 4254
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
FTC என்னும் மூன்றெழுத்தில்
நட்பு என்னும் மூன்றெழுத்து
பூக்கும்

FTC  முகமில்லா நட்பின்
முகவரியானது

நேரில் கைகுலுக்காமல்,
ஹாய் என்னும் வார்தையினூடே
மனதிற்குள் நுழைகிறார்கள்

மெல்ல மெல்ல விரியும் பூ போல
மெல்ல மெல்ல விரிகிறது இங்கு நட்புக்கள்

சிலர் பெயர் மட்டும்
சிலர் அது கூட இல்லை
புகைப்படமோ தேவையுமில்லை
ஆனால் வார்த்தைகள் மட்டும்
வானில் மின்னும் நட்சத்திரம் போல
இங்கும் பகலிலும் ஒளிர்கின்றன.

முதலில் "ஹாய்..."
பின்னர் “எப்படி இருக்கீங்க?”,
அதன்பின் “நீங்க இல்லாமே
இன்று சிறிது வெறுமையா இருக்கு…”
பேச்சுகள் வேராக முளைத்து
பாசமாய் பழகுகின்றன.
"BRB" கூட நெருக்கத்தின்
இடைவெளியாய்
ஏனோ சிலர் இதில் விதிவிலக்காக
மெய்யாக வாழ்ந்துவிடுகின்றனர்

நகைச்சுவைகள்
பரஸ்பரம்
பரிமாறிக்கொள்ள படுகின்றன
கவிதைகள் கூடு கட்டுகின்றன
ஒவ்வொருவரின் திறமைகள்
இங்கு விண்ணை எட்டுகின்றன

அவர்களின் சிரிப்பு சத்தமல்ல
ஆனால் அந்த emoji 😄
நம்மை சிரிக்க வைக்கிறது,

நம் அடுத்துள்ளவர்கள் உணராத
நமது உணர்வுகளை
பார்க்காமலே உணர கூடியவர்கள்

உண்மையானதா,
உண்மையில்லாததா
என ஆழம் தேடாமல்
உணர்வு இருந்தால் போதும் என்று
பயணிக்கும் உறவுகள்

நண்பா, நண்பி,மச்சா,அண்ணா,தங்கை என
இங்கும் உண்டு உறவுகள் ஆயிரம்

மாயை ஆன இவ்வுலகில்
மெய்யான உறவுகள் உண்டு
மனதின் விரிசல்கள் இருந்தாலும்
இங்கே யாரோ ஒரு "நண்பன்"
நம்மை நாமாக இருக்க வைக்கிறார்.

இணையத்தில் இணைந்து
இதயத்தில் நுழைந்து
இணைந்து வாழும்
புதிய உறவுமுறை!

[/color]***************************

FTC 15ம் ஆண்டு கால் பதிக்கிறான் வீர நடை போட்டு
பல பல நல்ல நல்ல நினைவுகளை எங்களுக்கு தந்து
நட்பாய், உறவுகளாய் எங்களையும் சுமந்து 
இன்னும் பயணிப்போம் வெகுதூரம்
வெற்றி நடை போட்டு வா வா தோழா


THANK YOU FTC


****JOKER****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1826
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
அடேங்கப்பா FTC அரங்கம் !!!

சுவர் இல்லா உலகம், பந்தம் இல்லாத சொந்தங்கள் கூடும் இடம்...
அர்த்தம் இல்லாத வார்த்தைகளின் சங்கமம்,
வயதில்லை, விதியில்லை சிரிப்பால் நிரம்பிய அரங்கம்...

அறிமுகமில்லா உறவுகள் பல, நாட்கள் சென்றாலும் விட்டு பிரிய தவிக்கும் மனம்...
சத்தியமும் பொய்யும் கூட இந்த அரங்கத்தில் நகைச்சுவை தானா???

சோகத்தை துரத்தி.. சிரிப்பை வரவேற்கும் அரங்கம் FTC...
பத்தே நிமிஷம் என்று ஆரம்பித்த பேச்சு, பல மணி நேரம் சென்றும் சலிக்கவில்லையே..

வெல்கம் இல் ஆரம்பித்து டாடா சொல்லி வழி அனுப்பும் உறவுகளின் முன்னாள் அனைவரும் சமமே...

ஒரே அறை ஆனாலும் உலகம் சுற்றும் அறை...
சொற்களில் சிரிப்பும் கண்ணீரும் கலக்கிறது...
திட்டமின்றி தொடங்கும் பேச்சு...விசிறி போல சுழலும் gifs...

எண்ணற்ற மறக்க முடியாத நாட்களையும் உறவுகளையும் தந்துள்ளது இவ்வரங்கம்...

இதுதான் இப்படிதான் என்று இல்லாமல் எல்லா கோணங்களிலும் ஒரே மாதிரி யோசிக்க கூடிய உறவுகள் கிடைப்பது அரிது...

இத்தனை உறவுகளுக்கு மத்தியில் எனக்கு மிகவும் நெருக்கமான உறவுகளை நாள்தோறும் என்னுடன் சேர்ந்து பயணம் செய்ய வாய்ப்பளித்த FTC ku நன்றி...

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நிகழ்ச்சிகள்...அதில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது சொந்தங்களே...

தமிழுக்கு மரியாதை கொடுக்கும் மேடை...திறமைக்கு வாய்ப்பு கிடைக்கும் அரங்கம்...நமது FTC அரங்கம்...


இது நம்ம FTC, நண்பர்களால்...நண்பர்களுக்காக...
« Last Edit: July 26, 2025, 01:49:02 PM by Lakshya »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 298
  • Total likes: 1179
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
FTC ❤️❤️❤️

புத்தகத்தைப் படிப்பது எளிது
மனிதர்களைப் படிப்பது கடினம்...
கடினமான பகுதியின் சிறு பாடசாலையே !
அனைத்து விதமான மனிதர்களின் சங்கமமே !
விலகி செல்லவும் கையாளவும்
கற்று தரும் அனுபவகூடமே !
இயந்திரத்தனமான வாழ்வின்
சிறு தேநீர் இடைவேளையே !

மந்திர புன்னகையைத் தெளிக்கும்
முகமறியா நட்புகளின் அறிமுகம்
இனிமையான சில மனிதர்களின்
அற்புதமான சிந்தனைகள்
மனதை இலகுவாக்கும்
பலவகை இசைப்பாடல்களின் தொகுப்பு
அற்புதமான பல படைப்புகளைக்
கொண்ட தமிழ்ப் பூங்கா
சிறுசிறு விளையாட்டுகள் மூலம்
வெளிவந்த குழந்தைத்தனம்
இவை அனைத்தும் உன்னால்
நான் பெற்றவை....

வாழ்வில் அனைத்துமே ஒருநாள்
கடந்துசெல்லும் மேக கூட்டங்களே !
நீயும் ஒருநாள் என் வாழ்வின்
கடந்து செல்லும் கார்மேகமே !
ஆனால் உன் நகர்வு
பலகால மழைப்பொழிவாய் இருந்திடும்...
என்னுள் புதைந்துகிடந்த என்னை
வெளிகொணர்வதில் உனது பங்கும் அலாதியே ...
நன்றிகள் பல❤️❤️❤️

மேலும் நீ செழுத்திடு ...
பலகால உறவாய் இணைந்திடு🫂🫂🫂...
« Last Edit: July 26, 2025, 05:09:24 PM by Yazhini »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 79
  • Total likes: 542
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நண்பர்களின் தமிழ் அரட்டை அரங்கம்(FTC)

பதினான்கு ஆண்டுகள் கடந்து செல்லும் - என்
பண்பான அன்பான நண்பனே FTC
பல்லாண்டு காலம் உன் சேவை தொடர-நம்மை
படைத்த இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன் !

தனிமையும்,சோம்பலும் என்னை வாட்டி வதைத்த போது!
தளங்களை தேட ஆரம்பித்தேன் வலைத்தளத்தில்!
தடங்கல் எதுவுமின்றி தத்தெடுத்தாய் என்னை உன் நண்பியாக !

விருந்தாளியாக உன் வீட்டினுள் நுழைந்தேன்!
விட்டுச் செல்ல மனமில்லாமல்-இப்போ
உன் குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டேன்!

உன் வீடு ரொம்ப அழகானது!
உன் வீட்டை தனி ,பொது தளங்களாக பிரித்து வைத்தது அத விட அழகு!
உன் வீட்டில் இருக்கும் அங்கத்தவர் பெயர்களுக்கு கொடுத்திருக்கும் நிறங்கள் கண்களை கவர்கின்றன !

உன் பெற்றோர் உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்!
உன் சகோதரர்கள் உன்னை நன்றாக பராமரிக்கிறார்கள்!
உன் வீட்டில் உள்ளவர்கள் அன்பாகவும்,நட்பாகவும் பழகுகிறார்கள்!

உன் வீட்டில் நிறைய பொழுதுபோக்குகள், இரசனையான நிகழ்வுகள் உண்டு!
நண்பர்கள் அரட்டை அடிக்கலாம் பொது,தனித் தளங்களில்!
forum இல் கவிதை எழுதலாம்!
கலாட்டா பண்ணலாம்!
ftc fm இல் இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம்!
இசைத்தென்றல் கேட்டு இசை அறிவை வளர்க்கலாம்!
ஓவியம் பார்த்து கவிதை வரையலாம்!
உங்கள் சாய்ஸ் நிகழ்வில் நமக்கு பிடித்த பாடல்களைக் கேட்டு மகிழலாம்!
quiz ஊடாக உலக அறிவை வளர்க்கலாம்!

வெவ்வேறு நாடுகளில் இருக்கும் நண்பர்களை உன் தளத்தில் ஒன்றிணைக்கின்றாய்!
தமிழுக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவம் தமிழினத்துக்கு பெருமையே!
உன் வீட்டுக்கு வந்து அன்பான ,முத்தான நண்பர்களை பெற்றுள்ளேன் நான்!
நிறைய அறிவை வளர்த்து,அனுபவங்களைப் பெற்றுள்ளேன் நான்!

 
ftc உன் வீட்டில் நிறைய நண்பர்கள்,சகோதர்கள், காதலர்கள் என பல உறவுகள் உதிக்கின்றன!
உன் வீட்டில் நீ நல்ல அங்கத்தவர்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றாய்!
தீய எண்ணத்தில் வருபவர்களை வெளியேற்றுவது உன் சிறப்பு!
தொடர்ந்து உன் கூட நண்பியாக பயணிக்க ஆசைப்படும் அன்பு தோழி தேன்மொழி!

« Last Edit: July 27, 2025, 11:07:24 AM by Thenmozhi »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1881
  • Total likes: 5835
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀


நினைவுகள் அகழ்ந்து 
கவிதைகள் தவழ்ந்து 
உன் பிறந்தநாளில் 
வாழ்த்துகள் மலர்கிறேன் 

தமிழின் கடலாக 
நட்பின் புதையலாக 
நீ ஒளிர்ந்திட 
எங்கள் உள்ளம் மகிழ்ந்திட 

சிரிப்பில் இன்பம் 
காற்றில் நினைவு 
நீ தந்த பரிசுகள் 
நன்றியால் நிறைகிறோம் 

மகிழ்ச்சி சுமந்து 
கவலை மறந்து 
அன்பால் அணைத்தாய் 
நட்பின் நூலால் 
நம்மைப் பிணைத்தாய் 

தமிழின் ஒளிக்கதிரில் 
எங்களை ஒன்றிணைத்தாய் 
அரட்டையின் பூமியில் 
நீயே பூந்தோட்டமாக மலர்ந்தாய் 

மைண்ட் ஜர்னலிங் கனிவோடு 
மூளைக்கு விருந்தாய் விளங்க 
விடுகதை உலகத்தின் 
வித்தைக்காரனாய் நீ வந்தாய் 

இரவின் அமைதியில் 
கவிதை பொக்கிஷங்கள் பிறந்தன 
கிறுக்கலான மனதின் கதவுகளை 
நீ மெதுவாகத் திறந்தாய் 

இசைத் தென்றலாய் வந்து 
ஓவியம் உயிராகிறதாய் நிலைத்து 
உங்கள் சாய்ஸாய் மிளிர்ந்து 
எம்மை ஒளிரச் செய்தாய் 

ஹரிஹரனின் மென்மை 
அனிருத்தின் ஆவேசம் 
ஜேசுதாஸின் தேனிசையில் 
நெஞ்சை நனைக்கச் செய்தாய் 
பண்பலை நண்பா 
நீயொரு மாயவனாய் நின்றாய் 

மன அழுத்தத்தை கரைத்து 
அன்பை இணைத்தாய் 
தமிழின் மையத்திலே 
எங்களைக் கட்டிப் பிடித்தாய் 

வேறுபாடுகள் கடந்தும் 
அன்பின் பாலமாக நின்றாய் 
தொலை தூரங்களில் தோளாக 
நம் வாழ்க்கையைத் தாங்கினாய் 

எத்தனைத் தடைகள் வந்தாலும் 
துரோகங்கள் துணிந்தாலும் 
கம்பீரமான நடையோடு 
வெற்றியை வென்றுவிடுவாய் 

என் வாழ்த்து உனக்கு மாலைகளாய்
உன் பயணம் கடலென நீங்கா 
அன்பின் ஆழத்தில் நீந்தி 
பெருமிதம் கொள்வாய்

FTC நண்பா நீ எங்கள் பெருமை 
Gab, Alea, Vaseegaran,
Kanmani,  Snickers, Samyuktha,
Breeze, Paulwalker,  Dora,
Fairy, Joker, Agalya, 
Vethanisha, Caesar 

போன்ற பாச வட்டத்தை 
என் வாழ்வில் நுழைத்த FTCக்கு நன்றி ! 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
« Last Edit: July 26, 2025, 05:57:54 PM by சாக்ரடீஸ் »

Offline SaiMithran

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
தொட்டு விடும் தூரம் தான் என்று ஒரு பொது மொழி உண்டு இன்று நான் தொட்டு தொட்டு பேசும் ஒரு இடம் நமது FTC. அந்த நட்பின் இடம் பற்றிய எனது சிறு கவிதை ❤️
 “உலகத்தை கைக்குள் வைத்தாய்
கண்முன்னே கனவுகளை தந்து
   அந்த கனவுகளையும்
உன் வசம் படைதாய்
    உறவுகள் இல்லாத தனிமையை
தவிடுபொடி ஆக்கினாய்
     அன்பான உறவுகளை அல்ல அல்ல
குறையாத அச்சயா பாத்திரம் போல
      தந்தாய்
கவிதை, காதல், நட்பு, ஆடல், பாடல்
  என அனைத்தையும் கொடுத்தாய்
ஊர் இல்ல உறவுகள்,
   உலகத்தில் எந்த மூலையிலும்  எனக்காக
காத்திருக்கும் என் அன்பு தோழி,தோழர்களே
   நமக்கான குடும்பம் நமதுFTC நம் குடும்பம் ❤️💐
வாழ்த்துக்கள் 14th anniversary ❤️💐
 என்றும் உங்கள் அன்பின் ❤️சாய் மித்ரன் ❤️
Saimithran 😄😄😄

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1454
  • Total likes: 3106
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
புது  நட்புகளின்   
பிறப்பிடம்
பல திறமைகளின்
அறிமுகம்
சோகங்களைத் தீர்க்கும்
மருந்தகம்
உணர்வுகள் ஊடே
புது உறவுகளை நான்
கண்ட இடம்
இன்று என் வாழ்க்கையின்
ஒரு அங்கம்
Ftc  யின் இந்த
பொதுமன்றம் ;
அரட்டை  அரங்கம்  😉

தேசங்கள் தாண்டி வாழும்
எங்களைத்
இணைத்தது தமிழ்தான்
பூட்டி கிடந்த பல ஆற்றலை
 திறந்தது  என் தமிழ்தான்

ஒருவர் படைப்பை மற்றொருவர்
 பாராட்டி மகிழ்ந்தோம்
பல கிறுக்கல்களின்
கருத்துகளில்
மனம் மகிழ்ந்து
ஆமோதித்தும் செல்வோம்

இங்கே

ஓவியங்கள் பல
உயிர்  பெற்றன
எழுத்துக்களால் !
அந்த எழுத்துகள்
பலர் இதயம் தொட்டன
மங்கைகளின் வசீகர குரலால் ♥️

விருப்பப் பாடல்கள் பல
பகிர படுகின்றன
இசை தென்றலாய் !
அதையும் தொகுத்து வழங்கி
மகிழ்விப்பனர் நம் நண்பர்கள்
 காந்த குரலால் ❤️

 என் குழந்தைத்தனத்தை
மீட்டு தந்தது
அன்பை மட்டும்
மூலதனமாய் கொண்டு
உருவானது பல நட்பு
அகநக நட்பு ❤️

என்னை போல் சிலர்
எனக்காய் சிலர்
 என்னுடன் பலர்
பயணிக்கும் இந்த
FTC அரங்கில்
இன்பம் மட்டும் சூழ்ந்து
நன்மை மட்டும் பெறுக
மனமார வாழ்த்தி மகிழ்கிறேன்🥳

இது
 நண்பர்களால் நபர்களுக்காக ஒரு அரங்கம்
பெறுக உன் புகழ் இனி எங்கும் ..
« Last Edit: July 28, 2025, 06:06:17 AM by Vethanisha »

Offline Clown King

தனிமை எனும் பாலைவனம் சூழ்ந்த பலரது நெஞ்சங்களைநிழல் தர விருட்சமாகஅமைந்தாயே
நிழல் மற்றும் தாராது உன் அருகே ஒரு ஓடையும் ஓட செய்தாய் (forum) ஓடையை மட்டுமில்லாத விருட்சத்தில்கண்களுக்கு  குளிர்ச்சி தரும்[c.மலர்களையும் தந்தாய் வளர்கள் மட்டுமா தந்தாய் சுவைப்பதற்கு இனிய பழங்களையும் தந்தாய் அதுவும் விதம் விதமாய் இசைத்தென்றலாய் உங்கள் விருப்பமாய் ஓவியம் உயிராகிறதாய் இன்னும் பற்பல விதங்களில் பழங்களை ருசிக்க செய்தாய் பழங்கள் என்றாலே குயில் கூட்டத்தையும் கிளி கூட்டத்தையும் ஈர்க்கத்தானே செய்யும் பாடவா பாடவா நிகழ்ச்சி மூலம் கானக்குயில்களின் இசையையும் கிளி போன்ற பேச்சுக்களை உடைய நமது ஆர் ஜேக்களின் பேச்சுத் திறமையும் சேர்த்துக் கொண்டாய் உன்னிடம் இது தானா சேர்ந்த கூட்டம் கூட்டம் என்று  வந்து விட்டாலே  பாதுகாப்பு அரண் மிக அவசியம் இந்தக் கூட்டத்தின் ஆறனாக Gab Spike Tinu Venmathi Megha Different Evil 7 வண்ணங்கள் நம்மளை காக்கின்றன இவர்கள் அதிசய பிறவியும் கூட இவ்வுலகத்தில் ஏழு அதிசயங்களை போல வள்ளுவனின் ஒரு குரலில் நான் எவ்வளவு செல்வங்கள் சேர்த்தாலும் நண்பன் என்று ஒரு செல்வத்தை சேர்த்தால் நாம் பெற்று செல்வத்தை விட நண்பன் என்ற செல்வமே சிறந்தது என்றும் அழியாதது நண்பர்களால் நண்பர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த அரட்டை அரங்கம் 14 அகவையை எட்டுவது கண்டு வாழ்த்துக்கள் மட்டும் போதாது அடித்தளமாய் விளங்கிய இந்த அரட்டை அரங்கம் பல்வேறு பரிமாணங்களை எடுத்து மேலும் வளர வாழ்த்துகிறோம்
உங்களில் ஒருவனாய்
clown kimg 🤡...

Offline Kavii

அவசரமும் அழுத்தமும் சூழ்ந்த நாட்களில்,
அலைபேசியின் திரையில் ஒரு சிறு சாளரம் வழியே
விரிந்தது FTC என்னும் நட்பு வலை!
மௌனத்தில் மூடிய மனதில் வீசியது அன்பின் அலை!

“Hi”  என ஒரு வரி 😊 என ஒரு Emoji!
தயக்கத்துடன் ஆரம்பித்தது முதல் உரையாடல்!
வார்த்தைகளில் பிரதிபலித்தது நட்பின் தேடல்!
தினமும் தொடர்ந்தது கலந்துரையாடல்!

முகம் அறியா உயிர்களிடையே உணர்வுகள் அறிந்தோம்!
நம்பிக்கையுடன் நட்பை பகிர்ந்தோம்!
tagல் வந்த Every smile என் Healing Therapy ஆனது!
கவலைகளும் மறந்தே போனது!

இரவுகளை விழித்தவையாக்கிய உரையாடல்கள்1
சோகங்களை மாற்றியது சுவையான நிமிடங்களாக!
இங்கே நான் பக்குவமடைந்தேன் Open & bold ஆக
என்னுள் என்னைக் கண்டேன் முழுதாக!

கதைகள் பேசினோம் விடிய விடிய !
கருத்துக்களும் காரணமும் தெரிந்துகொண்டோம்  புதிய பல
நாடு கடந்து மொழி கடந்து வயது வித்தியாசமில்லாமல் நட்பில் கலந்தோம்!
சாப்பிட்டாயா என்ற ஒற்றை வார்த்தையில் தாய்மையை கண்டோம்!
நட்பின் துணையால் தனிமையை வென்றோம்!

இங்கு கவிதைகள் ரசித்தோம்! இசையைக் கொண்டாடினோம்!
பிறந்தநாள் வாழ்த்துக்களில் கண்கள் ஈரமடைந்தது!
கேம்களில் குழந்தையாய் மாறினோம்!
FM-ல் ஒலித்த குரல்களில் மனம் மயங்கினோம்!

responsible green colour,
Helpful pink colours,
Friendly ah pesum all colours என
Colour colour ஆ எல்லாரிடமும் பேசி  நட்பை வளர்த்துக்கொண்டோம்.
உறவுகளுக்கும் மேலே உயிரானோம்!
 
FTC என்பது வெறும் ஒரு வலைதளமல்ல
இது என் மனதின் உணர்வுகளோடு பிணைந்தது
இங்குள்ள ஒவ்வொரு நபரும்  நினைவும்
நினைவாக என் இதயத்தை நனைத்தது!

எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும்
அதே அன்பும், தோழமையும்!
புது முகம் கண்டாலும் அகம் திறந்து வரவேற்கும்
எங்கு கிடைக்கும் இந்த சொந்தங்கள்!
நெஞ்சில் என்றும் நீங்கா பந்தங்;கள்!

FTC சிலருக்கும் தனிமை போக்கும் மருந்து
சிலருக்கு இசை விருந்து
சிலருக்கோ நட்பின் தேடல் களம்
இன்னும் சிலருக்கோ திறமை கொணரும் கலை கூடாரம் என
பலருக்கு Stress Buster என
எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி கூடு.

இந்த கூட்டில் நானும் ஒரு பறவையாய் பயணிப்பதில் பெருமை கொள்கிறேன்!
வெகு நீண்ட காலம் இப்பயணம் தொடர விழைகிறேன்!
நம் உறவுகள் என்றும் தொடரட்டும்!
FTC என்றும் நிலைக்கட்டும்!
வுhழ்க FTC! வளர்க நம் நண்பர்கள்!

Offline TiNu



உன் கைப்பற்றிய அந்த முதல் நாள் 
என் வாழ்வின் பொருள் அறிந்தேன்.

பல நாட்கள்.. நூலறுந்த பட்டம்
போல எங்கெங்கோ பறந்தேன்..

உன் பார்வை என் மீது பட்ட நாள் முதல்..
நான் யாரென...  நானே உணர்ந்தேன்..

முதன் முதலில் உன்னை நான் உணர்ந்தது ..
பண்பலையின் தமிழ் பாடல்கள்தான்..

எல்லா பண்பலை போல, கடந்து போகவிடாமல்  - உன்னை
திரும்பி பார்க்க வைத்தது.. பிறந்தநாள் team wish தான்.

யாரிடமும் பேசிப்பழக விருப்பமின்றி 
சிறிய வட்டத்துக்குள் மகிழ்ந்திருந்த நான் ..

ஒருநாள், ஏதோ ஓர் நினைவில்.. தவறுதலாக
FTC-Chat க்குள் நுழைந்து விட்டேன்..

அங்கே நான் பார்த்த காட்சிகளால்..மிரண்டு..
வியப்பிலும் பயத்திலும் .. விழித்து நின்றேன்

ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவினை
கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருந்தார், 

எனக்கான பிறந்த நாள் விழா போல கற்பனையில் - மிதந்தேன்
ஏனெனில்.. அன்று தான் என்னுடைய பிறந்தநாளும்...
 
பல நாட்கள்... பயனாளரின் கள்ளமில்லா கலாட்டாக்களையும்
பண்பலையின் பாடல்களை ரசிக்கவே வந்துபோனேன்.
 
மெதுமெதுவாக என் தயக்கம் நீக்கி என்னையும்
பேசவைத்து.. அவ்வுலகத்தில்  இணைத்து கொண்டார்கள்..

முதன் முதலில் எனை ஈர்த்தது FTC FM-ன்  இசையே ..
ஆனால் என்னை முழுமையாக ஆட்கொண்டது தமிழே...

இங்கே, நண்பர்களின் கனிவான.. அன்பான பேச்சும்
நேர்மையான நடத்தையும் எனை கட்டிப்போட்டது.

நிறைய விஷயங்களை இங்கே நான் கற்றுக்கொன்டேன்..
ஒவ்வொன்றாக, பட்டியலிட்டு சொல்லுகிறேன் கேளுங்கள்..

செந்தமிழை பேசவும் எழுதவும்(கவிதைகள்) கற்றுக்கொண்டேன்
வழக்காடு மாற்றத்தில் பேச கற்றுக்கொண்டேன்.

பள்ளி மதில்சுவருக்குள் மட்டுமே ஒலித்த என் குரல் - இன்று
படவா படவா நிகழ்ச்சியின் மூலம் பண்பலையில் கேட்கின்றேன்.

கலைநிகழ்ச்சியில் தைரியமாக கலந்துகொள்கிறேன்.-மேலும் 
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் கற்றுக்கொன்டேன்.

தெரித்தவர்களிடேமே பேச தயங்கிய நான் இன்று  - முன்பின்
அறிமுகம் இல்லாதவர்களிடமும் பேச கற்றுக்கொண்டேன்

தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைத்த ஒரு பெண்ணாக
மாற்றியது நம்ம "நண்பர்கள் தமிழ் அரட்டைஅரங்கமே" 

தேசம், இனம், மொழிகளையே எல்லாம் தாண்டி - தமிழால்
இணைந்த நல்ல உள்ளங்களுக்கு இடையில் நான்..

நண்பர்களால்... நண்பர்களுக்கு... நம்ம FTC..

« Last Edit: July 29, 2025, 02:06:47 AM by TiNu »