FTC என்னும் மூன்றெழுத்தில்
நட்பு என்னும் மூன்றெழுத்து
பூக்கும்
FTC முகமில்லா நட்பின்
முகவரியானது
நேரில் கைகுலுக்காமல்,
ஹாய் என்னும் வார்தையினூடே
மனதிற்குள் நுழைகிறார்கள்
மெல்ல மெல்ல விரியும் பூ போல
மெல்ல மெல்ல விரிகிறது இங்கு நட்புக்கள்
சிலர் பெயர் மட்டும்
சிலர் அது கூட இல்லை
புகைப்படமோ தேவையுமில்லை
ஆனால் வார்த்தைகள் மட்டும்
வானில் மின்னும் நட்சத்திரம் போல
இங்கும் பகலிலும் ஒளிர்கின்றன.
முதலில் "ஹாய்..."
பின்னர் “எப்படி இருக்கீங்க?”,
அதன்பின் “நீங்க இல்லாமே
இன்று சிறிது வெறுமையா இருக்கு…”
பேச்சுகள் வேராக முளைத்து
பாசமாய் பழகுகின்றன.
"BRB" கூட நெருக்கத்தின்
இடைவெளியாய்
ஏனோ சிலர் இதில் விதிவிலக்காக
மெய்யாக வாழ்ந்துவிடுகின்றனர்
நகைச்சுவைகள்
பரஸ்பரம்
பரிமாறிக்கொள்ள படுகின்றன
கவிதைகள் கூடு கட்டுகின்றன
ஒவ்வொருவரின் திறமைகள்
இங்கு விண்ணை எட்டுகின்றன
அவர்களின் சிரிப்பு சத்தமல்ல
ஆனால் அந்த emoji 😄
நம்மை சிரிக்க வைக்கிறது,
நம் அடுத்துள்ளவர்கள் உணராத
நமது உணர்வுகளை
பார்க்காமலே உணர கூடியவர்கள்
உண்மையானதா,
உண்மையில்லாததா
என ஆழம் தேடாமல்
உணர்வு இருந்தால் போதும் என்று
பயணிக்கும் உறவுகள்
நண்பா, நண்பி,மச்சா,அண்ணா,தங்கை என
இங்கும் உண்டு உறவுகள் ஆயிரம்
மாயை ஆன இவ்வுலகில்
மெய்யான உறவுகள் உண்டு
மனதின் விரிசல்கள் இருந்தாலும்
இங்கே யாரோ ஒரு "நண்பன்"
நம்மை நாமாக இருக்க வைக்கிறார்.
இணையத்தில் இணைந்து
இதயத்தில் நுழைந்து
இணைந்து வாழும்
புதிய உறவுமுறை!
[/color]***************************
FTC 15ம் ஆண்டு கால் பதிக்கிறான் வீர நடை போட்டு
பல பல நல்ல நல்ல நினைவுகளை எங்களுக்கு தந்து
நட்பாய், உறவுகளாய் எங்களையும் சுமந்து
இன்னும் பயணிப்போம் வெகுதூரம்
வெற்றி நடை போட்டு வா வா தோழா
THANK YOU FTC
****JOKER****