எதற்காக கவிதை....
பிறரின் ரசனைக்காகவா???
பிறரின் விருப்பத்திற்காவா???
பிறர் என்பதே இல்லை - இது சுயத்தின் சாயல்.
சுயகருத்தை தெரிவிக்கும் சுதந்திரம்.
மாற்றமுடியாத நினைவுகளின் கோப்பு.
அவ்வப்போது அருந்தப்படும் மதுக்கோப்பை.
"அச்சோ" தேவைப்படாத புலம்பல்.
இனிமையான பக்கங்களைப் புரட்டி
பார்க்கும் திறவுக்கோல்.
கசப்பான உண்மைகளை மூலைக்கு
அடித்து சொல்லும் நினைவூட்டி.
கட்டி அணைத்து எழுத்துகளில்
ஆறுதல் தேடும் தேடல்.
கண்ணீர் துளிகளின் பரிணாமம்.
மனவெழுச்சியைத் தாங்கும் சுமைதாங்கி.
இனிமையான தருணங்களின் பெட்டகம்.
எப்பொருளிலும் சுயத்தைப்
பொருத்தி பார்க்கும் பின்னூட்டு.
விடையறியா கேள்விகளின் தொகுப்பு
உடைந்து போன சுயத்தின் பிம்பம்.
அதை ஒட்ட வைக்கும் பசை
தெளிய வைக்கும் போதை🍷
அவ்வப்போது சமூகத்தின் மீதுள்ள
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அறிக்கை.
இயற்கையில் இணைக்கும் பிணைப்பு.
உணர்வுகளை வெளிக்கொணரும் சக்தி...