Author Topic: 🖊️ எதற்காக கவிதை 🖋️  (Read 782 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 298
  • Total likes: 1179
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
🖊️ எதற்காக கவிதை 🖋️
« on: June 15, 2025, 10:23:17 AM »
எதற்காக கவிதை....
பிறரின் ரசனைக்காகவா???
பிறரின் விருப்பத்திற்காவா???
பிறர் என்பதே இல்லை - இது சுயத்தின் சாயல்.

சுயகருத்தை தெரிவிக்கும் சுதந்திரம்.
மாற்றமுடியாத நினைவுகளின் கோப்பு.
அவ்வப்போது அருந்தப்படும் மதுக்கோப்பை.
"அச்சோ" தேவைப்படாத புலம்பல்.
இனிமையான பக்கங்களைப் புரட்டி
பார்க்கும் திறவுக்கோல்.

கசப்பான உண்மைகளை மூலைக்கு
அடித்து சொல்லும் நினைவூட்டி.
கட்டி அணைத்து எழுத்துகளில்
ஆறுதல் தேடும் தேடல்.
கண்ணீர் துளிகளின் பரிணாமம்.
மனவெழுச்சியைத் தாங்கும் சுமைதாங்கி.
இனிமையான தருணங்களின் பெட்டகம்.

எப்பொருளிலும் சுயத்தைப்
பொருத்தி பார்க்கும் பின்னூட்டு.
விடையறியா கேள்விகளின் தொகுப்பு
உடைந்து போன சுயத்தின் பிம்பம்.
அதை ஒட்ட வைக்கும் பசை
தெளிய வைக்கும் போதை🍷

அவ்வப்போது சமூகத்தின் மீதுள்ள
ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அறிக்கை.
இயற்கையில் இணைக்கும் பிணைப்பு.
உணர்வுகளை வெளிக்கொணரும் சக்தி...
« Last Edit: September 08, 2025, 06:41:57 AM by Yazhini »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1454
  • Total likes: 3106
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #1 on: June 16, 2025, 01:04:31 PM »
Super da... Unarvugalin pirathibimbam ♥️ kavithaigal

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1241
  • Total likes: 4254
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #2 on: June 16, 2025, 01:39:45 PM »
எதற்காகவோ நீங்க எழுதுங்க Sis
நாங்க படிச்சி ரசிச்சிக்கிறோம் 
 :) :) :) :)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #3 on: June 16, 2025, 08:06:51 PM »
கவிதை  எதற்காகவும் எழுதலாமே
சிலருக்கு  மருந்து பலருக்கு நிம்மதி
சிலருக்கு  தோழன்  பலருக்கு ஆசான்
அன்பை  பரிமாறும்  பாசத்தை ஊட்டும்
அழகான வார்த்தைகளின்  கோர்ப்பு 
ஆழமான   கருத்துக்களின்  புதையல்
கற்பனைகளின்   அபார  சக்தி
படிப்பவர்க்கு மட்டுமல்ல
எழுதுபவர்களுக்கும்  ஒரு உந்துசக்தி அல்லவா?
யாழினி  நீங்கள் எழுதுங்கள்  நங்கள் படிப்போம்
கவிதை அழகு
 
« Last Edit: June 17, 2025, 12:45:51 AM by SweeTie »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1881
  • Total likes: 5835
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: 🖊️ எதற்காக கவிதை 🖋️
« Reply #4 on: June 17, 2025, 01:06:40 PM »
கவிதை ஏன் பிறக்கிறது என்ற கேள்விக்கு
உணர்வுகள் தான் பதிலாக வருகின்றன
நொடி தோறும் மனம் காணும் விசித்திரத்தில்
கவிதைதான் சொற்களாய் மலர்கிறது...!

யாழினி கவிதை அருமை NK 🍀