Author Topic: இராவணன் போல நேசிப்பது நல்லது !  (Read 2191 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1941
  • Total likes: 6046
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

இராவணன் போல நேசிப்பது நல்லது.

இன்னும் எத்தனை
ராமன்கள் இருக்கிறார்கள்
இந்த உலகத்தில்?
அவர்கள் எல்லாம்
தனக்கொரு சீதையைத்
தேடுகிறார்கள்.
ஆனால்…
அவளையே அக்கினியில்
நிறுத்துகிறார்கள்.

அவள்
சிரித்தால் சந்தேகம்,
அவள்
மௌனமெனில் குற்றம்.
அவள்
நிமிர்த்து நடந்தால்  திமிரு,
சிறு தடுமாற்றத்திற்கு
கூட பெரிய தண்டனை.

அவள் ஒரு பெண்,
அவளும் ஒரு மனுஷி.
பாசமும் கோபமும்
அவளுக்குள்ளும் இருக்கிறது.

அவள் கண்ணீருக்கு
விலை இல்லை,
அவள் அமைதிக்கு
இடமில்லை.

பாசத்தை ஏன் சோதிக்க வேண்டும்?

"உண்மை என்றால் நெருப்பில்
அவளை எரிக்காதே"
என்று
பழமொழி போலப் பேசாமல்
புதிய பாதையைத் தேடுவோம்!

சீதைக்கு நெருப்பு வேண்டாம்
தன்னை ராமன் என்று எண்ணி சிலர்
அக்னிக்குள் தள்ளுகிறார்கள்
சீதை போன்ற பெண்களை

உணர்வின் வழியில்
தீர்வு தேடுவோம்,
ராமனாய் இருப்பதை விட
இராவணன் போல
நேசிப்பது நல்லது.
« Last Edit: May 13, 2025, 05:09:56 PM by சாக்ரடீஸ் »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1468
  • Total likes: 3181
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
பாசத்தை ஏன் சோதிக்க வேண்டும்?

 Nacchunu oru kelvi mappie.. 👏👏👏

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1277
  • Total likes: 4408
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
மச்சி

கொக்கு
குளத்தின் அழகை
இரசிக்க வேண்டி நின்று கொண்டிருப்பதாய்
நினைக்கும்
மனம் எதுவோ
அதுவே
அறியாமை

காதலின் சின்னம் தாஜ்மஹால்
என்று கற்பிக்கப்படுகிறது

உலகம் ரசிக்க கட்டினால் தான்
காதல் நம்பப்படுகிறது இவ்வுலகில்

நமக்காய் வாழ
என்று பழகுகிறோமோ
அன்றே வாழ்வு அழகாகும்


இதை எதற்கு சொல்றேன்னா  ;D ;D :)
நான் ராமனும் இல்ல
ராவணனும் இல்ல
மனுஷனா இருக்க முயற்சிக்கிறேன்

« Last Edit: May 13, 2025, 02:16:52 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1941
  • Total likes: 6046
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
பாசத்தை ஏன் சோதிக்க வேண்டும்?

 Nacchunu oru kelvi mappie.. 👏👏👏



வேதனிஷா மாப்பி  ;D
அன்பு என்றும் இலவசமாய் கிடைப்பதால்தான், எப்போதும் அது சோதிக்கப்படுகிறது.


மச்சி

கொக்கு
குளத்தின் அழகை
இரசிக்க வேண்டி நின்று கொண்டிருப்பதாய்
நினைக்கும்
மனம் எதுவோ
அதுவே
அறியாமை

காதலின் சின்னம் தாஜ்மஹால்
என்று கற்பிக்கப்படுகிறது

உலகம் ரசிக்க கட்டினால் தான்
காதல் நம்பப்படுகிறது இவ்வுலகில்

நமக்காய் வாழ
என்று பழகுகிறோமோ
அன்றே வாழ்வு அழகாகும்


இதை எதற்கு சொல்றேன்னா  ;D ;D :)
நான் ராமனும் இல்ல
ராவணனும் இல்ல
மனுஷனா இருக்க முயற்சிக்கிறேன்



ஜோக்கர் மச்சி  ;D
ராமாயணம் கதை தான் இருந்தாலும் அதுல ராவணன் மனுஷனா நடந்துகிட்டான் அதனால தான் ராவணன் போல் காதல் செய்வது நல்லதுனு சொல்லி இருந்தேன்.

Online Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 333
  • Total likes: 1373
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
இன்று தன் சீதையை மட்டுமல்ல பிறரின் சீதைகாகளையும் அக்னி பிரவேசத்தில் பலர் தள்ளுகின்றனர். அவள்
சிரித்தால் சந்தேகம்,
அவள்
மௌனமெனில் குற்றம்.
அவள்
நிமிர்த்து நடந்தால்  திமிரு,
சிறு தடுமாற்றத்திற்கு
கூட பெரிய தண்டனை.  சீதைக்கு இங்கு வாழ்வில்லை...
 NK👏👏👏