Author Topic: விலைமதிப்பில்லா மகள் !  (Read 779 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1858
  • Total likes: 5730
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
விலைமதிப்பில்லா மகள் !
« on: March 06, 2025, 07:34:20 PM »
பல ஆண்களின்
மோக வெறி இட்சைக்கு
பிச்சை போடுவாள்

பல பெண்களின்
மானம் காக்க
உடலை விற்றிடுவாள்

இவள் செய்யும் தியாகத்திற்கு
உலகம் தரும் பட்டம் வேசி

உடல் பார்க்க ஆசை படும்
மிருகங்கள் மத்தியில்
இதயம் எங்கே தென்படபோகிறது

இருட்டில் வாழும்
இவளது தியாகம்

அறியாதவர்களுக்கு இவள்
விலைமகள்

அறிந்தவர்களுக்கு இவள்

விலைமதிப்பில்லா மகள் !

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1230
  • Total likes: 4162
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: விலைமதிப்பில்லா மகள் !
« Reply #1 on: March 08, 2025, 12:37:25 PM »
மச்சி  அருமை


மேகம் இல்லா வானம்
யாரும் ரசிப்பதில்லை
மோகம் இல்லா மனிதன்
யாரும் ஊரில் வசிப்பதுமில்லை

அரசின் விலையில்லா
பொருள் என்றால் ஆசையில்
துடிக்கும் மனம்
விலைமாது என்றால்
வெறுத்து ஒதுக்கும்

திருநங்கை ,
விலைமாது
பெயரில் தான் எத்தனை
அழகு
அவர்களை ஒதுக்கும்
இந்த சமூகத்தில் தான்
எத்தனை அழுக்கு

சக மனிதர்களை
மதிக்கும் சமூகம்
உருவாக வேண்டும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1858
  • Total likes: 5730
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: விலைமதிப்பில்லா மகள் !
« Reply #2 on: March 08, 2025, 04:15:54 PM »
நன்றி மச்சி, சமத்துவம் பழகுவோம்.