Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 361  (Read 3115 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 361

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Minaaz

  • Jr. Member
  • *
  • Posts: 55
  • Total likes: 353
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
அத்திவாரம் முதல் அண்டவெளி தொட்டிட  துடிக்கும் கூரை வரை அழகிய கற்பனைகள் மூலம் அலங்கரித்திடும் சிறிய கோட்டை...

இன்று சில் வண்டுகளின் சங்கீதமும் சிறுத்தை, புலி, நரிகளின் ஓசைகளுமாய் தவித்து தனித்து விடப்பட்டிட்ரு...

பாதைகள் வகுத்து வாசற்படி தவமிருந்திரும் பொழுதுகளில்
அண்டை வீட்டார்களின் அரவணைப்புகளும், அள்ளித்தெளித்திடும் அன்புகளும் அடங்கியிருந்திருக்குமோ..? என்ற மனதில் மோதல்களாய் பல கேள்விகள்...

திரைப்படங்களில் கைவிடப்பட்ட நிலங்களை கலையாக்க முயற்சிப்பதை விட காரணமே இல்லாமல் குடி இருக்கும் பேய்கள் என்பதை கற்பனையாக காட்டிடும் கதைகளில் இன்றும் சிறியோர் முதல் பெரியோர் வரை ஈடுபாட்டுடன் ஒத்துக்கொண்டு நகர்வதும் அரங்கேரத்தான் செய்கின்றன...


நிலா வெளிச்சத்தில் நிழற்படங்களாய் அச்சமூட்டி எட்டி நிற்கும் காட்சிகள் கிலியூட்டினும்,, தெருவோரத்தை தன் வீடாய் தேர்ந்தெடுத்து தன் வாழ்க்கையை நடாத்திச் செல்லும் பலரது முகங்களும் எட்டித்தான் பார்க்கிறது..

பாலடைந்த பாலைவனங்களும் பருவம் வரும் வரை பலரின் பார்வைக்கு ஓர் பயன்பாடற்ற நிலம்தான்..
அது போல் யாரோ விட்டுச் செல்லும் சிறு துரும்பும் அதன் தேவை உணராத வரை அது வெற்றுப் பொருள்தான் என்பதில் மறுப்பேதுமில்லை...

Offline TiNu


அன்று ஓர் நாள் இரவு, முழு பௌர்ணமி நிலவு.
தன் முழு ஒளியையும்.. உமிழ்ந்து கொண்டிருந்தது..
அந்த நிலவின் ஒளியில்.. பார்ப்பவர் மனதை... 
சோகத்தில் மூழ்கடிக்கும்.. ஓர் அமானுஷா காட்சி..

பலவருடங்களாய்..  தண்ணீரையே.. காணாத பூமித்தாய். ..
நீர் வற்றிய பூமியில்.. பிளவுகள் பல.. பல்லை காட்டியது..
ஆளின்றி தனியே தவித்தது..  ஓர் அழகிய வீடு -அதன முன்னே
தன், பசும் இலைகளை இழந்து.. நின்று இருந்தன சில மரங்கள்..

இக்காட்சியை வெறித்து.. பார்த்துக்கொண்டிருந்தன.. சில கண்கள்...
இந்த மனையில், எந்நேரமும் எவ்ளோ சிரிப்பொலிகள் கேட்டன..
நமக்கு நாவிற்கு சுவையான உணவு, எவ்ளவு உண்ண  கிடைத்தன..
இன்றோ சத்தம் இன்றி.. உணவு.. ஏதுமின்றி இன்றி சூனியமானதே..

பகல் பொழுதில், புகை கக்கும் வாகனங்கள் நிறைந்து வழியுமே .
இரவுநேரம்,  வீடு முழுவதும் மின்விளக்குகள் பளிச்சிடுமே ..
மனை சுற்றிலும், கண்ணுக்கு குளிச்சிதரும் பசுமரங்கள் சிரிக்குமே..
இன்றோ ஆள் அருவமற்று.. ஒளி இழந்து.. வெறுமையானதே...
அங்கே ஏங்கி நின்ற பூனை,  தன்னை மறந்து பெருமூச்சு விட்டது...

நம் சொர்கமாக..  இருந்த நம் வீடு.. இன்று இப்படி மாறியது ஏனோ..
ஆடு,மாடு,கோழிகள் என்று.. வித விதமாக விருந்துணவு
அள்ளி கொடுத்த வீடு.. இன்று எதுவும் இல்லாது போனதே..
கண்களின் சோகங்கள் செறிய.. அழுது ஊளையிட்டது ஓநாய்...

இப்படி பலப்பல யோசனையோடு அந்த வீட்டை..
வெறித்து..  வெறித்து  பார்த்த பூனையையும் ஓநாயையும்
எலும்பு கூடாக மாறிய, அத்திமரத்தில் ஓய்யாரமாக
அமர்த்திருங்க கூகை.. இவர்களை பார்த்து.. மெல்ல சிரித்தது..

மறைந்து கொள்ள இடம் இன்றி அலைந்து திரிந்த
வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்தது அவ்வீடு..
தன் இனம் பெருக்க, இடமின்று தவித்து கரைந்த...
கரும் சிலந்திகளுக்கும், தேள்களுக்கும்.. புண்ணியபூமி அது..

நீரில்லா வறண்ட தரையின் அடியில்.. ஆயிரம் ஆயிரம் பூச்சிகள்..
இறந்த இலைகளில்... தஞ்சம் கொண்டிருக்கும்..நூறாயிர பூஞ்சைகள்..
பசுமையில்லா மர கட்டைகளில்.. களிநடமிடும்.. கோடி புழுக்கள்.. 
இப்பொழுதும்.. அவ்விடம் ஒரு சிலருக்கு சொர்க்கமே..

உனக்கு பயனளிக்கும் இடம் சொர்க்கமும் இல்லை..
உனக்கு உபயோகம் இல்லா இடம் நரகமும் இல்லை...
இவ்வுலகில்... யாருக்கும்..  எதுவும் நிரந்தரமில்லை..
இவையாவும் புரியாத.. சுயநல உயிர்கள்.. இவர்கள்..

கடவுளின் படைப்பின் சூட்சமம் புரிந்தவன்..
இவையகத்தில் கிடைப்பது.. கடினமே... என
மனதுக்குள் சிரித்து கொண்டே.. மரக்கிளையில் 
இருந்து.. பறந்து மறைந்தது  ஆந்தையுமே.. .




Offline Sankari

நிலா ஒளியில் கம்பீரமா நிற்கிறாய்,
உன்னை பாழடைந்த வீடு என்று சொல்கிறார்கள்,
உன் கதை தான் என்ன?


சிரிப்பு, வெளிச்சம், சந்தோஷம்
இது எல்லாவற்றும் நீயும் கண்டது தானே ?
உன் கதை தான் என்ன ?


நீ எவ்வளவு அழகா இருந்திருப்பாய் ?
நீ எவ்வளவு கலகலப்பா இருந்திருப்பாய் ?
நீ எவ்வளவு வெளிச்சமா இருந்திருப்பாய் ?
நரி, காக்கா, ஓநாய், உன் சொந்தம் ஆகியது...
மனிதர்கள் உன்னை விட்டு விலகி சென்றார்கள்...
உன் கதை தான் என்ன ?


எதற்கு இந்த அலங்கோலத்தில் நிற்கிறாய் ?
இரவு கொலுசு சத்தம் கேட்கிறது என்று சொல்கிறார்கள்,
மர்மமான சத்தமும் கேட்கிறது என்று சொல்கிறார்கள்,
உன்னைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்,
உன் கதை தான் என்ன ?


எந்த சோகம் உன்னில் வாழ்ந்த மனிதர்களை தாக்கியது ?
அவர் எதற்காக சாந்தி அடையாமல்,
இன்னும் இந்த பூமியில் உன் ஆதரவுடன் சுற்றுரார்கள் ?
உன் கதை தான் என்ன ?


பழிவாங்கும் உணர்வுகளா ?
அழியாத சோகமா ?
தாங்க முடியாத அநியாயமா ?
விசித்திரமாக இருக்கிறாய்... உன் கதை தான் என்ன ?

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1439
  • Total likes: 3012
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

கதை கேட்கும் கண்மணியே
காலங்கள் பல கடந்தாலும்
கலையா நினைவுகளில்
கட்டுண்டுடிருக்கும்
 'கரிகாலன் அரண்மனை' யின் கதை இது
என் கதை இது 🤫

கனவுகளின் பிறப்பிடமாய்
கலகலப்பின் உறைவிடமாய்
பௌர்ணமி வெளிச்சத்தில் - அழகே !
எனப்பலரும் போற்ற அகங்கரமாய்
வீற்றிருந்தேன் பல காலமாய் !

குயில்களின் கானம்
செல்ல பிராணிகளின் ஓசை

பெரியோர்களின் அனத்தல்
குழந்தைகளின் சிரிப்பொலி
 
கன்னிமான்களின் ஓயாத கொலுசொலி
வீணையின் நாதம்

தெவிட்டாத தேனாய்
கேட்டு வாழ்ந்தவன் நான் ஒய்யாரமாய் !

அன்பான முதலாளி
 சட்டென மறைந்தார்
 அகால மரணத்தால்

கூடி வாழ மறந்து
சொத்துக்கு சண்டை இட்டு
சிதறியது குடும்பம்
உறவினர்களின் சூட்சமத்தால் !

மகிழ்ச்சியின் கரை கலைந்தது
துரோகம் எனும் பெரும் வெள்ளத்தால்!
 
இதயம் இறுகியது
உறவுகள் அறுந்தன
சொந்தங்கள் பிரிந்தன
கருணை  மறைந்தன
கோபங்கள் குடிகொண்டன
மூட நம்பிக்கையின் மூர்க்கத்தால்
தனித்து விட பட்டேன் நான்
இந்த முன்கோபிகளால் !
 
இன்று அதே  நிலா ஒளியில்
அகத்தின் அழகு கோரமாய்
 இந்த முகத்தில் கொஞ்சம் தெரிய
காகமும் என்னை கண்டு கரைந்தது
கொஞ்சம் நகையாட
ஓநாய்களும் அதன் பங்குக்கு
ஊளை இட்டு தான் செல்ல
 
பளிங்கு மாளிகை
பாழடைந்த மாளிகையாய்
உள்வாங்கிய ஓசைகளை
வெளியிட்டேன்  எதிரொலியாய் !
மனிதனின் பகடி பேச்சுக்கு
உருமாறி நிற்கிறேன் நான் பாவமாய்  ..

மீதி கதையினை சொல்ல
உள்ளே அமர்ந்த்திருக்கும் 
முதலாளியை அழைக்கவா
கொஞ்சம் வேகமாய்
கேட்டு சொல் கண்மணியே !
 (சங்கரியே) 🤫🤫


« Last Edit: December 12, 2024, 03:50:49 PM by Vethanisha »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 232
  • Total likes: 560
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
பாழடைந்த இல்லமும், பகுத்தறிவில்லா உள்ளமும்!

பாழடைந்த வீடும், மனிதம் இல்லா மனதும் ஒன்றே!

பராமரிப்பு இல்லையேல் வீடு பாழடைந்து போகும், பக்குவம் இல்லாமல் போயின், மனம் மரக்கட்டயாய் மாறும்.

உறவுகளுடன் ஒன்றி வாழ்வின், வீடு வசந்த சோலைவனமாகும், உறவினில் வலிமை இல்லையேல் அது வறண்ட பாலைவனம் ஆகும்.

அதே போல் தான் மனித மனமும்.

மனிதம் என்ற மாணிக்கம் மதிப்பு பெற, பக்குவம் எனும் வைரம் மிகவும் அவசிசம் ஆனதே, மனதை வார்த்தெடுக்க.

உறவுகளே! பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில், இழைப்பாரும் சிறு நேரம் தான் வாழ்க்கை. 

இதில் ஏன் வன்மமும்,வஞ்சகமும் வசதியாய் வாழ்கின்றது?

சிறிதும் சிந்திக்க வேண்டாமா?

படைத்த இறைவன் கோடான கோடி படைப்பினங்களை படைத்திருப்பினும், மனித படைப்பை தான் சிறந்த படைப்பு என்று சொல்கின்றான் இறைவன்.

அதற்கு காரணம் நன்மை தீமையை பிரித்து ஆராய கூடிய அறிவை நமக்கு தந்தமையே...

உடல் அமைப்பு ஒன்றே, உணர்வுகள் ஒன்றே, உடலில் உருண்டோடும் குருதியும் ஒன்றே...

இதில் எங்கு கண்டாய் ஏற்ற, தாழ்வை?

தாய்மை என்பது ஒன்றே, தவிப்பு என்பதும் ஒன்றே. இதில் எங்கு கண்டாய் தராதரத்தை? 

பிறப்பும், இறப்பும் மனித குலத்தின் மீது மட்டும் அல்ல அணைத்து உயிர்களின் மீதும் படைத்த இறைவன் நிர்ணயித்து தீர்மானித்த விதி. இதில் மீண்டவன் யாரடா 🤨

படைத்ததவன் படைப்பை, பங்கிடும் உரிமையை கொடுத்தது எவனடா 🤨.

இப்பூவுலகம் படைத்த இறைவனால் படைக்க பட்ட கோடான கோடி ஜீவராசிகளுக்கும் சொந்தமானதே.

இங்கு உயர்ந்தவன், தாழ்தந்தவன் என்பது தூய்மையான, உள்ளத்தையும், துரோகம் செய்யா செயல்பாட்டினையும் கொண்டே தீர்மாணிக்க படவேண்டும், பிறப்பின் அடிப்படையில் அல்ல.

பிறப்பின் அடிப்படையில் பிரிவினை பார்க்கும் கூட்டமே, தாயின் வயிற்றில் இருந்து சேய் அது பிரிந்து வருவதில் என்ன மாற்றத்தை கண்டாய்?

படைத்த இறைவனின் பார்வையில் சிறந்தவர் யார் எனில்.

மக்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் உபயோகமான வாழ்க்கையை எவர் வாழ்வாரோ? அவரே சிறந்தவர், உயர்ந்தவர்...

எவர் இதை ஏர்பினும், மறுப்பினும் இதுவே நிதர்சனமான உண்மை......

எம் உள்ளம், பிரிவினையால் பாழடைந்த வீடாக கிடக்க வேண்டுமா? அல்லது பகுத்தறிவின் பெயரால் வெள்ளி மாளிகையாக ஜொலிக்க வேண்டுமா?
சிந்தியுங்கள் 🌹🌹🌹

உறவுகளே! அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தான் என்பதில் மாற்றம் இல்லை. சகோதர்களாய் வாழ்வோம், சகோதரத்துவத்துடன் வாழ்வோம் 🌹🌹🌹🌹.

இப்படிக்கு

வஞ்சிக்கப்படுவோரின் வாய்மை குரலாய். 
 𝘔𝘕 - 𝘈𝘏𝘈𝘔𝘌𝘋 𝘈𝘈𝘙𝘖𝘕...........
☝️என்னை பாதுகாக்க என் இறைவன் போதுமானவன் ☝️
« Last Edit: December 10, 2024, 08:38:08 PM by Unique Heart »

Offline mandakasayam

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 898
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாதும் ஊரே யாவரும் கேளீர்
  நள்ளிரவில் கடிகாரநொடிமுள் நகரும் சப்தம் இருண்ட வானம்  ஆள் நடமாட்டம் இல்லா பாழடைந்த வீடு,
 சூரைக்காற்றின் வேகத்ததால்  காய்ந்த இலைகள் இடம் நகர திகைத்துப்போனேன்,

மின்விளக்கு அனைந்து எரிய மர்ம நபரின் நடமாடும் உருவம்  வெறிச்சோடிய வாசல் திடீரென அழுகுரல் சத்தமும் நகைச்சுவை கலந்த சிரிப்பும்  யோரோ உதவிக்கு அழைக்க
அந்த மாயபிம்பத்தை என் மனம் நம்பியது

சிலந்திவலையில் சிக்கிய இரையை காப்பாற்ற நினைக்கும்  மனிதர்கள் ஏராளம் அல்லவா  .
ஆசைகள் நிறைவேறாத இறந்த ஆன்மாக்கள் மனிதர்களை பலிவாங்க கம்பளம் விரிக்கும்

அழகு நிறைந்த பெண் ஆசையாய் வரவேற்க சில நொடிகளில் தூக்கிலிடப்பட்ட சடலம் கண்விழித்து பார்க்க உடல் நடுங்கி உருகுலைந்தேன் ..

சற்றென்று மாயமாகி கோரமுகத்துடன் தோளில் சாய்ந்து புதிய குருதியை சுவைக்க போகும் ஆன்மாவை உதறிவிட்டு விழித்து பார்த்தேன்  விடியற்காலையில்
   
« Last Edit: December 10, 2024, 08:25:04 PM by mandakasayam »

Offline SweeTie

டாங் டாங்  என  அடித்த  மணி ஓசை
நடுநிசி  பன்னிரண்டை  காட்டியது
இதயம்   பக் பக்  என  அடிக்க தொடங்க
பயம் என்னை கவ்விக்கொண்டது
யன்னலூடே  என் கவனம்  இருந்தது

சற்று தூரத்த்தில்  தெரிந்தது  பேய்வீடு   
நாய்களின் ஊளை சத்தம் ஒரு புறம்
விட்டு விட்டு எரியும் மின்விளக்குகள்
பெண்ணின்  அழுகுரல்  இவையெல்லாம்
என்னை பீதி கொள்ள வைத்தன

அந்த வீட்டின்   சாளரக்  கதவு  காற்றின் வேகத்தில்
படார்  படார்  என்று அடித்துக்கொண்டிருக்க
யாரோ அங்கு நடமாடுவது  போல் தெரிகிறதே
யார்  அவர்கள் ?  மனிதர்களா  பேய்களா
என் பீதி இரு மடங்காயிற்று

பல வருஷமாகவே  பூட்டி கிடக்கும் வீடு
அங்கு யாரும் வாழ்வதாக தெரியவில்லை
எல்லோரும்   பேய்வீடு என்றே சொன்னார்கள் 
வீட்டை சுற்றிலும்   காய்ந்த  சருகுகளும்
காக்கை கூட்டமும்  காட்சியளிக்கும்

ஒரு  சீமாட்டி  வாழ்ந்த  வீடாம்  அது
எப்போதும்  ஆட்டம்  பாட்டமாக  இருந்த வீடாம்
சீமாட்டி  இறந்துபோக  பிள்ளைகளும்
வேறு நாடுகளில்  இடம் பெயர்ந்துவிட்டார்களாம்
களைஇழந்து  இப்போ  பாழடைந்து போனதாம்  வீடு

சீமாட்ட்டியின்  ஆவியின்  நடமாட்டம் 
தினம் தினம் நடக்கிறதாம்   அங்கு 
பௌர்ணமி நாட்களில்  பேய்களுக்கு விருந்து வைத்து
ஆட்டம்  பாட்டம் கொண்டாட்டம்  நடக்குமாம்

நவ நாகரிக   யுகத்தில்   அறிவியல் வளர்ந்தாலும்
இன்னும்  பேய்களின்  மாய உலகம்  மாறவில்லை
கற்பனைக் கதைகள்   என்று  தள்ளி  விடுவதா?
உண்மைச்  சம்பவங்கள்  என்று  ஏற்றுக்கொள்வதா?
வாழ்க்கையின்  பல பக்கங்களில்  இதுவும் ஒன்று .   

Offline Kavii

வெந்து தணிந்தது வீடு !... வேகாத  நிழல்கள் !

எரிந்த நினைவுகள் தழுவிய வீடு நான்!

நெருப்பின் நசுக்கலால் உடைந்த சுவர்கள்!
தூசிக்குள் மறைந்த மௌனக் கீதங்கள்!
எனது உறவுகளின் சிரிப்பெல்லாம் செங்கற்களுக்குள்ளும்
அழுகையெல்லாம் சாம்பளிலும் புதைந்து போன சோகங்கள்!

கதவுகள் முறிந்தாலும் கதைகள் நீடிக்கும்!
சிதறிய செங்கற்கள் கனவுகள் பேசி நிற்கும்!
எரிந்த மரத்தின் சுவாசம் இன்றும் காற்றில் வாசமாய்!
கோலமிட்ட வாசல் இன்று வறண்டு அலங்கோலமாய்!

குழந்தைகள் ஓடி விளையாடிய பாசத் தரையில்
காலொடிந்து கிடக்கிறது கனத்த காற்று!
சிரிப்புகள் சிதறிக் கிடந்த கூடத்தில் இன்று
விழித்திருந்து அழுகின்றன இரவுகள்.!
மூடிய ஜன்னல் கதவுகளின் வழியே கசியும் காற்று!
ஆள் அரவமற்று கிடக்கும் வீட்டை நிரப்பிக் கொண்டது !

அன்னமிட்ட கையைத்தேடி நித்தம் உலா வரும் காக்கைகளும், குருவிகளும்!
தன் எஜமானனின் வருகையை நோக்கி வாசலில் காத்திருக்கும்
நன்றி மறவா ஜீவனும்! எனது வரலாற்றின் சாட்சிகள் !
என்னில் வாழ்ந்த உயிர்களின் உறவுகள்!

இனி அழுதாலோ புரண்டாலோ உயிர்கள் மீண்டு வருமா ?
வராது ! என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் ஒரு
கட்டுக்கதையும் கட்டி விட்டார்கள் வாய் கூசாமல்!“
“இந்த வீட்டில் பேய்கள் உறங்குகின்றன” என்று  !
“என்னையும் என்னில் வாழ்ந்த உயிர்களையும் மறந்து”
விஞஞானம் வளர்ந்த காலத்திலும் பகுத்தறிவு வளராத இந்த ஊரார்கள்!

ஆனால் வீழ்ந்தாலும், அழிந்தாலும், மறைந்தாலும்,
நான் ஒரு வெறும் வீடு இல்லை – நான் உயிர்களின் சுவடு!
எரிந்த மரங்களில் எச்சமாய் இருக்கும் வேர்கள்,
புதிதாய் பூக்கும் பசுமையின் அடையாளங்கள்.
தீயின் கோபத்தையும் வென்று நிற்கும் என் கதை.
புதிதாய் எழும் உயிர்களின் அடையாளங்கள்!.

கனவுகளை மீட்டெடுக்க இயலாத நான்
நினைவுகளை மட்டும் தாங்கி நிற்கிறேன் !

வெந்து தணிந்தது வீடு !... வேகாத  நிழல்கள்!