Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 350  (Read 4608 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 350

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline BlueSea

  • Newbie
  • *
  • Posts: 25
  • Total likes: 66
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
br />


மனம் இங்கோ பிரிகிறதே :

                     ஓர் உறவில் என்றும் தேவை அசாதாரான நம்பிக்கை மற்றும் புரிதலின் மகத்துவம்!!!
                        மாற்றங்கள் வரக்கூடும், கசப்புகள் வரக்கூடும், அவ்வுறவில் ஓர் வெறுமையும் வரக்கூடும் ----- வரக்கூடாதே, அவ்வுறவில் அவநம்பிக்கை மட்டும் ! 😒❤️‍🩹💔😒
                          நட்பென்னும் பொக்கிஷ பயணத்தில் சிறு துளி சந்தேக பார்வை விழின் நீடிக்குமோ அந்நட்பு... 😒💔🥲
                          மனம் இரண்டும் பேசுகையில் வார்த்தைகள் கூட தேவையில்லை.... ஆனால், இன்றோ இரு மனங்களிலும் சிறு விரிசல்கள் ஏற்பட்டதோ...😒💔🥹
                           நேரில் சந்தித்து பேசுகையில் அனைத்தும் செரியாகும் என நினைத்தே சென்ற அவ்விரு மனங்களுக்கும் விலகல் எனும் முடிவை யார் தேர்ந்தெடுத்து கொடுத்தது...??? 💔
                          அன்பு, பாசம், நேசம், பற்றுதலின் பிணைப்பு, அரவணைப்பும் கூடிய அவ்வுறவில் காயங்கள் ஏற்பட்டால் விலகல் மட்டுமே விடையா...???  🥲💔🥹
                            என்னை விட்டு ஒரு காலும் உன் உறவு பிரியவும் நீங்கவும் கூடாது என்று கூறிய வார்த்தைகள் எல்லாம் அன்று பொய்யானதோ.... 💔💔               நான், உமை பிரிந்தலும் என் நினைவில் என்றுமே  நீ குடி கொண்டு தானே
 செல்கிறாய் என் கண்மணியே.... 💔❤️‍🩹
                          அனைவரும், அவரவர் இதயதுடிப்பின் கிரியாயூக்கியாக இருக்கின்ற அவர்தம் அன்பான துணையிடம் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசை... ஆசையாக கேட்பர்.... 😒
                          ஆனால், என்னிடமோ நீ கேட்டது பிரிதல் எனும் பரிசிலை என் அன்பே... 😒💔
                            ஒரு போதும் உமை விட்டு பிரியா வரம் வேண்டும் என்றேன் என் மனதை உன்னிடம் கொடுக்கையில் 💔 தந்தாயே....  என்றுமே எம் வாழ்வில் உமை மறக்கா நினைப்பை என்னுள்... 😒💔
                           என் நாட்கள் செல்கிறது வெறுமையால் நீயில்லா ஓர் பயணம் தனி மரமாகவே ❤️‍🩹🥲💔
                             எண்ணி எண்ணி எனக்குள் வெம்புகிறேன்.... அன்று,  உதிர்ந்த வார்த்தைகளின் கடுமை பரிசல் அளித்தது இவ்விரிசலை எமக்கு....💔
                              என் நினைப்பிலோ நீயே.... என் சிரிப்பிலோ நீயே... என் சிந்தனையிலோ நீயே... என் இன்பத்திலோ நீயே.... என் துயரிலோ நீயே.... என் அரவணைப்பிலோ நீயே... என் அன்பிலோ நீயே.... இன்று, என் வாழ்வின் தனிமையிலோ நீயே... நீயே... நீயே.... என் தங்கமே 🫰💔... உமை என்றும் நான் மறவேன்...🫰🥹

 தீயினால் சுட்டாலும் என் கட்டை நீ இருக்கும் திசையில் மட்டுமே பயணிக்கும்.... என் அன்பே 🫰🥹
           
« Last Edit: August 06, 2024, 12:37:54 PM by BlueSea »

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 436
  • Total likes: 2015
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


காதல்

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்
பல மாற்றம் வந்தும் மாறாதது
காயம் பல உண்டென்றாலும் - காதல்
காவியம் பல படைத்தது....

ஆதாம் ஏவாள் காலம் தொட்டு
அண்மைக்காலம் வரையிலும் - இக்காதல்
அனைவரின் மனதிலும் வேரூன்றி
விருட்சமாய் வளர்ந்துள்ளது வரலாராய்...

கண் பார்வையில் தொடங்கும் காதலை
காலம் முழுவதும் தொடரவா -  இல்லை
காற்றோடு காற்றாய் தொலைக்கவா
காதலை உணர்ந்த அனைவரும் நுகரும் நிலை இதுவே....

உன்னை நான் உணர
என்னில் நீ உரைய
காதல் நம்மை ஆட்கொண்டு
கனவில் மிதக்கும் நொடிகள் பல...

என் மனதில் பல minus இருக்க
உன்னிடமும் சில minus இருக்க
இரு கோட்டையும் கொஞ்சம் மாற்றிப்போட்டு
Plus ஆக மாற்றி ஒன்றாய் வாழ்வதும்

உனக்கான வாழ்க்கை உன்னிடம்
எனக்கான பாதை என்னிடம்  - என
காதலை கற்று பிரிவதும்
காலங்காலமாய் காதலின் விதியாய் போனது...

நீயா நானா என விவாதித்து
நான் தான் என்ற கர்வம் கொண்டு
அழிப்பது காதலை என நினைத்தாலும்
அழிவதென்னவோ நீயாகத்தான் இருப்பாய்...

மனதை காயப்படுத்தும் கசப்பான விவாதங்களோ
அதன் விளைவாய் வடியும் கண்ணீரை
கட்டித்தழுவி துடைக்கும் தருணங்களோ...
இதயமாய் ஒருவர் இருக்க - என்றும்
அதன் துடிப்பாய் மற்றொருவர் இருக்க...

மனித உறவுகளை மட்டுமல்ல
உணர்வுகளையும் உணர கற்போம் -
நாம் ரசித்து வளர்த்த காதலது
தேவையா என்ற முடிவை தெளிவாக தேடுவோம்...

காதலது வேண்டாம் என்றால்
புன்னகையுடன் மனதால் ஏற்போம்...
காதலது வேண்டும் என்றால்
கைகோர்த்து ஒன்றாய் வாழ்வோம்...

நினைவில் நிறைந்த காதலை
கனவில் வாழ்ந்த வாழ்வை
உயிராய் நினைத்த உயிரை - ஒருபோதும்
காயப்படுத்தாமல்.. மனதில் ரணத்தை விதைக்காமல்.....




« Last Edit: August 07, 2024, 04:03:42 AM by VenMaThI »

Offline KS Saravanan

உதிர்ந்த இலைகளை போல
நம் கனவுகள் கலைந்தனவே..!
உதிரா நினைவுகள்
இதயத்தில் சுமக்கின்றோமே..!
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த
அன்பு எங்கே போனதடி..?
உறக்கத்திலும் உன்னை நினைத்து
உள்ளுணர்வு ஏங்குதடி..!

தீயிட்ட வார்த்தைகளெல்லாம்
கானல் நீராய் போகுதடி.!
காலை பொழுதெல்லாம்
உன் நினைவை சுமக்குதடி..!
நினைவெல்லாம் நீயிருக்க
நித்தமும் வேண்டுதடி..!
காதலித்த நேரமெல்லாம்
கனவாக மாறுதடி.!
கண் மூடி பார்த்தாலும்
உன்னுருவம் தெரியுதடி..!

என்னவென்று புரியாமல்
என்னை விட்டு சென்றாயே..!
விட்டு சென்ற இடத்திலே
வழி தெரியாமல் நிற்கிறேனே
அழைத்து போக வருவாய் என
ஜென்மம் முழுதும் காத்திருப்பேன்..!
காத்திருக்கும் காலமெல்லாம்
காதலித்துக்கொண்டே இருப்பேனடி..!

தினமும் உனை காதலித்து
ஆயுளை வளர்ப்பேனடி..!
காயங்களை ஆற்றவும்
கவிதைகளை படைப்பேனடி..!
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும் மீண்டும் எழுவெனடி..!
கருமேகங்கள் கலைந்த பின்னே
கண்மணியே நீ வருவாய் என
காலமெல்லாம் காத்திருப்பேன்..!

மீண்டும் ஒரு காவியத்தை
நம் காதல் படைக்குமே..!
காவியங்கள் படைக்கவே
நம் காதல் சேருமே..!
நம்பிக்கையுடன் இருக்கிறேன்
நம் காதல் உண்மையென்று..!
« Last Edit: August 07, 2024, 06:45:02 PM by KS Saravanan »

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1042
  • Total likes: 1836
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
❤️ஒருவருக்கு அடிமையகிவிட்டால் நம்மை நாமே பிரிந்து செல்லும் நாள் சீக்கிரமே வர கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்...

❤️மறக்க முடியாத நாட்களை தருவாய் என்று நினைத்தேன்... கடைசியில் என்னை விட்டு செல்லும் துயரத்தை தருவாய் என்று நினைக்கவில்லை என்னோ??

❤️நாம் யாரை உருகி உருகி நேசிக்கிறோம் என்பதை விட நம்மை நேசிக்கும் ஒருவரை விரும்புவதே சிறந்தது என புரியவெய்த்த உனக்கு நன்றிகள் பல...

❤️நிறைவேறாத கனவுகள் பல இருந்தாலும் அதை கனவுகளில் மட்டுமே நிறைவேற்ற ஆறுதல் கூறுவார்களா என்பதும் தெரியவில்லை...

❤️சில நாள் பேசாமல் இருந்தால் காதல் கூடும் என நினைத்த எமக்கு மீஞ்சியது வெறும் "வலி"... காதல் அனைவரையும் வாழ வைக்கும் என நினைத்து உன்னை காதலித்தேன் ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே..!!!
 
❤️என் கஷ்டங்களில் தோள் குடுக்க நீ இருப்பாய் என்று நினைத்தேன்... கஷ்டமே நீ ஆகி விடுவாய் என்பதை கனவிலும் நினைக்கவில்லை என் மனம்...

❤️தேடி வந்து, என்னை தேட வைத்து, இன்று நினைவுகளில் மட்டுமே வாழ வைத்து விட்டாயே என் காதலனே...நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்திருக்கலாமே என் அன்பே..!!!

❤️உனக்காக என் தூக்கத்தை தொலைத்ததால் இன்று உன்னையும் தொலைத்து
விட்டு தாங்க முடியாமல், தூங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என் காதல் மட்டுமே என்பது உனக்கு புரியவில்லையா???

❤️நேரமில்லாத நேரத்திலும் உன்னுடன் பேசினேன்! நீ நேரம் போவதற்காக, பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்! அனைவரும் அருகில் இருந்தும் யாருமே இல்லாத அளவுக்கு இருப்பதற்கு காரணம்...அதிகமாக உன்னை காதலித்தது மட்டுமே..!!!

❤️உன்னோடு விரல் கோர்த்து நடக்க வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் நினைத்து பார்க்கவில்லை, இன்று நீ விலகியதற்காக மட்டும் அல்ல அன்று உன்னை விரும்பியதற்காகவும் வருந்துகிறேன் என்று....

❤️மனம் விட்டு பேசவும் முடியவில்லை, பேசாமல் இருக்கவும் முடியவில்லை.... என்ன செய்வேன் நான்??? விளையாட்டிற்கு கூட விட்டு கொடுக்கமாட்டேன் என தெரிந்தும் .. உன்னையே விட்டு குடுக்க சொல்வது நியாயமா??

 
« Last Edit: August 08, 2024, 09:36:33 AM by Lakshya »

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 514
  • Total likes: 1325
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
சத்தமிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறாள்
எங்கோ ஒருத்தி
எனக்கு பிடிக்காத ஒரு சிரிப்பு
உன் நினைவுகளை தூண்டிச் செல்லும் சிரிப்பு அது
நீ அப்படி சிரிப்பவள் இல்லை
மென் சிரிப்பு கொண்டவள்
கண்களை இறுக்கி
சின்னஞ் சிறிய முத்துப் பற்கள்
சிறிதளவே தெரியும்படி
நீ சிதறிய புன்னகைகளை
இன்னும் பொத்தி வைத்திருக்கிறேன்
மன அடுக்குகளில்

அழகானது உன் சிரிப்பு..
என்னை சந்திக்க விரும்பாத
உன்  கோபங்களும் அழகானது தான்,
உன் கர்வமும் அழகானது தான்
ஆனால் எல்லா சிரிப்பொலிகளும்
உன்னையே நினைவூட்டுகின்றன
உன்னடமிருந்து விலகி
ஓட யத்தனிக்கும் ஒவ்வொரு முறையும்
இந்த சிரிப்பொலிகள்
மீண்டுமொருமுறை
உன் சிரிப்பிற்கும், உன் கோபங்களுக்கும்,
உன் கர்வத்திற்கும் அருகில்
மீளா சுழலாய் என்னை இழுத்து வருகிறது.

என்னிடமிருந்தது வெற்றிடம் மட்டுமே
மொத்தமாய் அதை நிரப்பிச் சென்றிருக்கிறாய்
மீண்டும் வெற்றிடத்திற்கே செல்ல போகும் மனதை எதை கொண்டு நிரப்புவது?
உன்னை பற்றிக் கொள்ளச்
சொல்கிறது இந்த கைகள்.
உன் சிரிப்புகளையும்,
அணைப்புகளையும்
உன் ஆதூரத்தையும்
பற்றிக் கொள்ளச் சொல்கிறது
இந்த பாழும் மனது.
இருந்தும், எதற்கும் திராணியற்றவனாய் திரிகிறேன்.

இந்த தனியறையின் சுவர்களில்
நாம் பேசிய சொற்கள்
சிதறி ஒலிக்கின்றன.
சிதறும் ஒவ்வொரு சொல்லும் உன் பெயரை கூறி என்னையும்
சிதறடிக்கின்றது.
நான் வான் இழந்த பறவையா இல்லை
சிறகிழந்த பறவையா
என்பதை அறியாமல்
கண்ணீர் பொழுதுகளில்
மூழ்கியிருக்கிறேன்.
இந்த பறவை பற்றிக் கொள்ள சிறு துளி வானமாய் நீ இருக்க போவதில்லை,
நீ எடுத்துச் சென்ற என் சிறகுகளெல்லாம் உன் வானத்தை
மட்டுமாவது அலங்கரிக்கட்டும்.

ஒரு விளையாட்டை போல
சொற்களை எய்து கொண்டே இருந்து விட்டோம்.
புன்னகையை இழந்து சொற்களுடன் நின்றோம்
சொற்களை இழந்து
மௌனத்தோடு நின்றோம்.
ஒரு விளையாட்டை போல எல்லாவற்றையுமே இழந்துவிட்டோம்.
நிலம் தேடும் பறவையைப் போல
கடல் தேடும் நதியை போல
சொற்களை தேடும்
புன்னகையை தேடும்
தனியனாகிவிட்டேன்.

என்னிடமே நான் சண்டையிட்டுக் கொள்கிறேன்
உன்னை இழந்ததற்காக
என்னையே சமாதானம் செய்து கொள்கிறேன்
உன்னை உன்னிடமே திருப்பிக் கொடுத்ததற்காக
உன் சொற்கள் உன்னிடம்,
உன் கனவுகள் உன்னிடம்,
உன் புன்னகைகள் உன்னிடம்,
இருப்பினும்
உன் புன்னகைகளை மட்டுமாவது என்னுள் இருந்து மீட்டுக்கொள்கிறேன்.
தத்தளிக்கும் மனதிற்கு
பற்றிக்கொள்ளும் துடுப்பாயவது
இருந்துவிட்டு போகட்டும்
உன் புன்னகைகள்.

Offline Tea Master

  • Newbie
  • *
  • Posts: 6
  • Total likes: 16
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
பிரிந்தாய் என்னை விட்டு, வாடினேன் உன்னை மருந்து
போவேனோ உன்னை விட்டு, என் உயிர் பிரிந்தாலும் நாம் வாழும் நாட்கள் மறவாது..
என்னை நீதான் புரியவைத்தாய்
என்னுள் இருக்கும் திறமையை நீதான் ரசித்தாய், நீ இல்லை என்றால் நான் எங்கே...உன்னில் துலைந்தானே
உன்னை என்றும் ரசிப்பனே..
மறவாதே என் கண்மனியேய. என் இதயத்தில் என்றும் நீயடி...
நான் வாழ்ந்த நாட்களை விட, உன்னுடன் பழகிய நாட்கள் சந்தோஷம்டி..
நீ என்னுடன் இருந்தால் நரகம் கூட ஸ்வர்கமாய் மாறும்..
நீ என்னை விட்டு விலகி இருந்தால் பூ கூட ஆணியாய் என் இதயத்தில் குத்துமடி...
தாய்க்கு பின்னால் தாரம் என்பார்கள் தாயை போல என்னை பார்த்து கொண்டாலே.
நீ நண்பனாய், தோழியாய், காதலியாய், என் உயிராய் இருந்தாய்.
நீ போனாலோ என் இதயம் சுக்குநூறாய் போகுமடி..
கலங்கிறேன் நான், என்னை கலங்கடிக்காதடி நீ
கடவுளை பார்க்கவில்லை, தாயின் அன்பை ரசித்துருக்கேன், தாயை பிறகு உன் அன்பை ஏங்குகிறேன், என்னை ஏமாற்றாதே, என்னை ஏளனம் செய்யாதே...
நீ போகாதே என்னை விட்டு போவனே இந்த மண்ணை விட்டு...
நான் வாழ்ந்த நாட்களை விட, உன்னுடன் வாழும் அந்த நாட்களக்குக்காக.. காத்து இருக்கிறேன், உன்னை எதிர்பார்த்துரிக்கேன்...
என் அன்பே.. என் ஆறு உயிரே.. என் தோழிய...

Offline MyNa

நிழற்படத்தில் விரிசல் விட்ட மனதை
பலரும் விமர்சிக்க
என் எண்ண நினைவலைகள் ஏனோ
விரிசலிலும் இணைய துடிக்கும்
இரு மனங்களை எண்ணியே
இப்பதிவை கிறுக்கிய வண்ணமாய்..


நீ என்ற ஓரெழுத்து
நாம் என்ற ஈரெழுத்தாய் மாறிட
நீ மூன்று முடிச்சிட்டு
நான்கு வேதங்கள் சாட்சியாய்
ஐந்தெழுத்து திருமணத்தில்
தொடங்கியது இந்த இல்லற உறவு..

அறுசுவையும் நிறைந்த
நம் திருமண வாழ்வு
ஏழேழுஜென்மமும் இவ்வாறே தொடர்ந்திட
எட்டு திசையிலிருந்தும்
நவதுர்கைகள் வாழ்த்திட
பத்து மாதத்தில் தாய் தகப்பனாய்
நாம் உலாவரவே..

இந்த சின்ன சின்ன விரிசல்களும்
செல்ல சண்டைகளும்
பேசாத நாட்களும்
பேசிய வார்த்தைகளும்
சொல்லாத மௌனமும்
சொல்லிட முடியாத வலியும்
நமக்காக நம் இரு இதயம் இணைந்து
உயிர்பெற்ற அந்த சிறு இதயத்தின்
கரம் பிடித்த கணமே மறந்து மறைகையில்..

நீ நான் என்ற அகம்பாவம் துறந்து
நாம் என்று இன்றும் இனி என்றென்றும்
ஒன்றாய் இணைந்து இம்மனம் துடிக்கட்டும்.


~தமிழ் பிரியை மைனா~

Offline TiNu



பிரிவுகள்.. பிளவுகள்... ஏன் வருகின்றது? நம்மிடையே...
அதை தடுக்க முடியாதா? அதன் காரணம் தான் என்ன?..

காதல் மலரும் தருணம் யாரும் அறிவதில்லை  - ஆனால்,
பிரிவின் காரணம்... அறியாதவர் யாருமில்லை..

ஒருவர் மீதான... அதீத நம்பிக்கையில் மலரும் காதல்..
அவரின் மீதான.. அவநம்பிக்கையில் உடையும் அதே காதல்.. 

சட்டென...  துளிர்க்கும் அதீத பாசத்தில்..  பிணையும் மனங்கள்..
பட்டென.. சரியும்..  சந்தேக புத்தியால்.  உடையும் அதே மனங்கள்..

தோற்றம் பார்த்து தோன்றும்.. அன்புகள்.. முதலில்..  இனிக்கும்..
தோல்சுருங்கும்.. தருவாயில்.. அதுவே.. இறுதியில்.. கசக்கும்..

பண்பால் பாசத்தால் நன்கு புரிந்து.. இணைந்த இரு இதயங்கள்..
சூழ்நிலை கைதிகளாய், தன்னையே மாய்த்துக்கொள்ளும் சில நேரம்..    .   

உறுதியான உள்ளமே.. வலிமையான உறவுகளை உருவாக்குகிறது...
உறுதியற்ற சந்தேக மனப்போக்கே.. பிரிவின் அஸ்திவாரமாகுமே...

அவநம்பிக்கையோ.. இல்லை.. உறுதியில்லா தடுமாற்ற மனமோ..
 காரணங்கள்.. இங்கே.. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை...

அன்பால்.. ஒன்று பட்ட இதயங்களின் இடையில்..
பிரிவுகள் வரலாம்.. ஆனால்.. பிளவுகள் வர கூடாது..

பிரிவுகள் நாளை தெளிந்து.. புரிந்து.. ஒன்றினையலாம்.. ஆனால்..
பிளவு பட்ட இரட்டை மனங்களை பிணைத்து கடினமே.....



« Last Edit: August 10, 2024, 10:47:58 PM by TiNu »