Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 349  (Read 4015 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 349

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 247
  • Total likes: 787
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
புல்வெளி மீது பனித்துளியாய் ..
என் பாதங்கள் படிய நடைபயின்றே,
பனி சூழ் காற்றும் எனை இழுக்க..
என் பயணம் அங்கே தொடர்கிறதே.
இயற்கை சூழல் இதமாக..
அதில் எந்தன் மனமோ பதமாக..
லயித்தே இருக்கும் நிலையினிலே..
 சுவைத்தேன் இயற்கை அழகினையே!!
ஏதோ என்னுள் ஒரு சோகம்..
என்றும் தீரா பெரும்காயம் ..
எல்லாம் அந்த ஒரு நொடியில்..
என்னை விட்டு அகன்றிடுதே.
இருபுறம் மரமும் எனை அழைக்க..
 எத்திசை நோக்கி நான் நடக்க..
ஏதும் அக்கணம்.புரியவில்லை..
அவ்வியற்கை என்னை விழுங்கியதே!!
சூழ்பனியை சுமந்த காற்றுமங்கே...
என் பயணத்தில் சற்றே குறுகிடவே..
நான் பாதை பார்த்து நடந்திருந்தேன்..
என் பார்வை அதையே ரசிக்கிறதே.!
அழகு என்னும்.சொல்லுக்கு..
உவமை எனவே பெண்ணினத்தை..
சொல்லும்.உலகம் கேட்கும்படி..
நான் சொல்ல வந்தது யாதென்றல்..
முழுதாய் அழகை தன்னகத்தே ..!!
கொண்டை ரசிக்கும் யாவரையும்..
தன்பால் ஈர்க்கும் இயற்கையுமே!!
ஒரு பாவை என்றால் மெய் தானே...
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1837
  • Total likes: 5678
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
« Last Edit: July 16, 2024, 06:12:55 PM by சாக்ரடீஸ் »

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1327
  • Total likes: 2802
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
ஒரு நாள்
சுதந்திரமாய்  வாழ ஆசை
பிறந்ததும் பெற்றோர் ஆசைக்கு...
கல்யாணம் முடிந்தபின் கணவர் ஆசைக்கு...
தாய் ஆனபின் பிள்ளைகளின் ஆசைக்கு...
வாழ்கிறாள்!
அவளுக்கும் ஆசை இருக்கும்!


அதை யார் அறிவார் ?

ஒரு நாள்
அடுத்தவர்கள் சந்தோசத்தை
மட்டும் பாராமல்
அவளின் சந்தோசத்தை முக்கியம்
என்று எண்ணவேண்டும் என்று

ஆசை

ஒரு நாள்
முழுவதும் அவளுக்கு பிடித்தது
மட்டுமே செய்வேன்றுமென்று

ஆசை

ஒரு நாள்
இரவில் கடல் அலைகள் சத்தத்தில்
பௌர்ணமி நிலவை ரசிக்கவேண்டுமென்று
 
ஆசை

பல ஆசைகளில் ஒரு ஆசை
நிறைவேறாதோ  என்று ஆசைப்பட்டே
அவளின் முழு வாழ்க்கையும் முடிகிறதே...

அவள் மனதில் பலம் கொண்டு
அவள் விரும்பின வாழ்க்கையை தேடி போனால்
அவளோடு பலமாக நிற்பார்கள் என்று நம்பின
உறவினர்களும் நண்பர்களும்
அவளின் எதிரியாக ஆனார்கள்


ஒரு நாள்
ஓடிப்போவாள் அவளுக்காக
அவள் ஆசைக்கு
அவள் சந்தோசத்திற்கு
அவள் மன அமைதிக்கு

அவளுக்கு யாருமே வேண்டாம் என்றால்
அவளை தடுக்க அந்த
கடவுளால் கூட முடியாது!

அவளுக்காக
அவள் தேடிய தனிமையை நோக்கி
ஒரு நாள்,
போவாள்
அதுவரை அவள்

போராட்டம் தொடரும்!
« Last Edit: July 17, 2024, 02:03:06 AM by Ishaa »

Offline BlueSea

  • Newbie
  • *
  • Posts: 25
  • Total likes: 66
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum




இயல் மகளோ இவள்:

                   இயற்கையின், இன்றைய காலகட்டத்தில்
இயல் சூழ் பூமியை காண்பது அரிதாகி விட்டது.... செயற்கையின் இயற்கை ஆகவே இன்று பூமி சுழன்று கொண்டுள்ளது.

                     ஆகையால், மாந்தர் தம் நிலத்தை விட்டு நிலாவிற்கு அவர்தம் வாழ்வியல் பயணத்தை தொடங்கி அங்கே வாழவும் இப்போது முற்படுகிறார்கள்....
                       
                       இந்நிலை, நீடித்தால் நம் பூமியெங்கும் வெறும் நிலையில்லா கட்டிடங்களும் காகிதங்களும் மட்டுமே காற்றில் உலாவும்.... மாந்தர், தம் ஸ்வாசம் எங்கு தேடியும் கிடைக்காது....!!

                       நமது, பாரத சுதந்திர போராட்ட காலங்களில் ஓர் வாசகம் நமையும் நம் ரத்தத்தையும் தூண்டி இழுத்தது....
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - என்று மடியும் இந்த அடிமையின் மோகம்"

ஆனால், இன்றோ நான் அதை மருவி கூற விழைகிறேன்....
"என்று தனியும் இயல் மகளின் தாகம்,என்று மடியும் இந்த செயற்கையின் மோகம்"

ஏன்னெனில்,  இயல் இல்லையேல் நாம் இப்பூமியில் வாழ்ந்தும் வாழா பொம்மைகளே....!!!
இயற்கை அன்னையை தேடி தேடி பச்சை பசேல் என்ற நிலத்தை நோக்கி நீண்ட பயணம் ஒன்றை மேற்கோள்கிறாள் இயல் மகளானவள்....!

அவள், இயல் சூழ் இடத்தை எங்கு தேடியும் காண கிடைக்கா எட்டா கணியா அமைகிறது.... செயற்கையின் வளம் எவ்வளவு ஆபத்து என்று இப்போது புரிகிறதா.... இயற்கையை அழித்து செயற்கையை வளப்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது என்று வெம்புகிறாள் இயல் மகள்....!

இயற்கை அன்னையின் மடியில் படுத்து உறங்க நினைக்கும் அவள் தேடி அலைந்தும் தான் உறங்கும் தருவாயில் தன்னை வருடி தன் மேல் படற ஓர் இன்பம் தரும் தென்றல் இல்லையே என்று வருந்தும் நிலையே தொடர்கிறது....!

இயலை அழித்து இயங்கும் ஓர் சாதனம் நமக்கு தேவையா.... அப்படியென்றால், நாம் அனைவரும் நம் சுயத்தை அழித்து வாழும் வெறும் சவங்களே....!!!
 
                        நம் பூமியில், இயல் மகளே இயற்கையை  தேடி அலைகின்ற அவல நிலை ஏற்பட்டடுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது...!
 
                        இயலை காப்போம்.... இயல் சூழ் பூமியை நாடுவோம்.... செயற்கை பயன்பாட்டை குறைத்து இயற்கை பயன்பாட்டில் செழித்து இன்னுயிர் காப்போம் என்று சூள்ளுரைப்போம்....!!!

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். (குறள் 636)


“புறந்தூய்மை நீரான் அமையும், அகந் தூய்மை
 வாய்மையால் காணப் படும்”  (குறள்– 298)

                     
"எங்கே பூக்கள் பூக்கின்றனவோ அங்கே நம்பிக்கையும் பூக்கும். இயற்கையுடனான ஒவ்வொரு நடையிலும், ஒருவர் தேடுவதை விட அதிகமாகப் பெறுகிறார்."
 
இயல் மகளை நம் இரு கரங்கள் விரித்து வரவேற்போம் வாருங்கள்... 🙏🙏🙏

என்று கூறி வாய்ப்பளித்த அனைத்து அன்பர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்லி விடைபெறுகிறேன் வணக்கம் 🙏🙏🙏

உங்கள் அன்பன்,
நீல கடல் எனும் Blue Sea
« Last Edit: July 17, 2024, 09:14:15 PM by BlueSea »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1438
  • Total likes: 3009
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

அழகிய பச்சாடை உடுத்தி
விண்ணையும் மண்ணையும்
இணைக்கின்ற  இதயமாய்!  மரம்
குளிர் தென்றலோடு இணைந்து
இதமாய் நாசியில் நுழைந்து
மனதை வருடும் மண்ணின்  மணம்

அட ! வேறென்ன இங்கு வேண்டும்
இந்த இயற்கையின்  இனிமையே போதும்

மனிதன் குரல் கேட்கா தூரம்
புல் தரையில் பதியும் எனதே எனதான பாதம்
செவியுனூடே நுழையும் குயில்களின் கானம்
அதற்கும் போட்டியாய் மைனாக்களின் ரீங்கராம்

அட ! வேறென்ன இங்கு வேண்டும்
இந்த இயற்கையின் தாளமே போதும்

அடிமைத்தனம் செய்ய இல்லை யாரும்
புறம் பேச இல்லை அந்த சுற்றமும்
துரோகம் இழைக்க இல்லை அந்த  நட்பும்
நிஜ உலகை மறந்த இத்தருணம்

அட ! வேறென்ன இங்கு  வேண்டும்
இந்த நிம்மதி பெருமூச்சே  போதும் 

ஆசைகள் உண்டு ஆயிரம்
இருந்தும் பற்றறற்று வாழ மனம் ஏங்கிடும்
சுதந்திரமாய்  இங்கே மகிழ்ந்திட  நானும்
என் கண்களும் எனை கண்டு நாணும்

அட ! வேறென்ன இங்கு வேண்டும்
இந்த தனிமையின் ஸ்பரிஸமே போதும் 
« Last Edit: July 18, 2024, 07:35:22 PM by Vethanisha »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 860
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எவ்வித கோட்பாடுகளும்
சட்டங்களும் கட்டுப்படுத்தாத
காட்டாற்று வெள்ளம் இவள்..

வானவெளியில் சுதந்திரமாய் சுற்றித் திரியும் சுதந்திர பறவை இவள்..

காதல் என்ற போதையும் இவளுக்கில்லை..
கல்யாணம் என்ற கால் கட்டும் இவளுக்கில்லை..

ஆசை வார்த்தைகளால் அணை போட்டு அடக்கிட முடியாத கங்கை இவள்..
அன்பின் பெயரால்
மடக்கி விட முடியாத புயல் காற்றும் இவள்..

தன் பாதையில் தனியாய்
பயணிக்கும் ஒற்றை நிலவு இவள்..
தனது போக்கில் நீந்திச் செல்லும் கற்றை மேகம் இவள்..

உறவுக்கூட்டை புறந்தள்ளி,
பாசவலையை விட்டு வெளியேறிய சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி இவள்..

இவளுக்கு பாசமும் தேவையில்லை..
நேசமும் தேவையில்லை..
தேவையானது என்னமோ தனித்திருக்கும் சுதந்திரமே..
சிறகை விரிக்கும் சுதந்திரமே..

Offline SweeTie

இருளது விலகும்  வேளை
மல்லிகை  மலரும் தருணம்
நறுமணம்  நிரம்பும்  பொழுது
இசைக்குயில்களின்  கானஇசையில் 
கண் மலரும்  புவிமகள்

வெண்பஞ்சு பனிப்படலம்   அவள்
தேகமதை  மூடி நிற்க
ஆங்காங்கே  சிறு பனித்துளிகள்  போர்த்திய
ஆடைமேல்  பூத்து நிற்க 
வைகறையில் நீராடும்   இளமங்கைபோல்  இவள்

பளிங்கு  சிலைபோல  பவ்வியமாக நிற்பவளை
சுற்றி நிற்கும்   காவலராய் உயர் மரங்கள்
கொள்ளை அழகில் குலுங்கி நிற்கும்
புவிமகளை  ரசிப்பவளும் 
ஒரு பெண் அன்றோ !
 
காதல் எனும்   போர்வையின் காமத்தீயில் 
சுட்டுப்பொசுங்கும்  மானிட பெண்களும்
காடையரால்   அழிந்துபோகும் பூமகளும்
காலையில்  பூத்து மாலையில் கருகும்
மலர்கள் போன்றவர் அன்றோ !

மலர் போன்ற  பெண்களை 
மனம்  சோராமல்   பார்க்கவேண்டாமா
ஒன்றே ஒன்றுதானே கேட்கிறார்கள் 
அவர்களை  வாழவிடுங்கள்  என்பதே !


 
« Last Edit: July 19, 2024, 04:20:05 AM by SweeTie »

Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 417
  • Total likes: 1931
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


வா பெண்ணே!


கட்டுக்கடங்கா கவலைகள்
நித்தம் நித்தம் உடைத்தாலும் - உன்னை
அரவணைக்க இந்த இயற்கை உண்டு
கவலை எல்லாம் அழித்திட வா .

மாறும் காலம் என்னை
மாய்த்து விட நினைத்தாலும்
மனதில் நான் துவண்டே தான் போனாலும்
மழிச்சியாய் என்னை மாற்ற தோழமை பல உண்டு

நான் அழும் காலம் தனில் - நட்பான
மழை என் கண்ணீரை மறைப்பதும்
கால்கள் தடுமாறும் வேளை தனில் - நட்பான
காற்று  என்னை இதமாய் மண்ணோடு சாய்ப்பதும்

தனிமை என்னை சீண்டும் வேளையில்
பறவைகளின் ரீங்காரமும் விலங்குகளின் நடமாட்டமும்
கொட்டும் அருவியின் இசைச்சாரலும்
என் தனிமையை போக்கும் பொக்கிஷங்கள் ...

மானுடர் நிறைந்த உலகில்
நீ துலைத்த மகிழ்ச்சியை - குறைவின்றி
வாரி வழங்க துடிக்கும்
ஐந்தறிவு ஜீவன் நாங்கள்

போட்டியும் பொறாமையும் இல்லை
நான் தான் என்ற கர்வமும் இல்லை
எம்முள் ஒருவராய் கலந்திட உம்மை
இரு கரம் நீட்டி அழைக்கிறோம் வா ...

இயற்கையின் தோழமையில்
காற்றை நேசிக்க கற்பாய் நீ
இயற்கையின் அழகை ரசிப்பாய் நீ
மனதின் ரணங்களை அழிப்பாய் நீ
கடந்த காலத்தையும் மறப்பாய் நீ ..

மனதில் என்றுமே மகிழ்ச்சி பொங்கட்டும்
முகத்தில் என்றுமே சிரிப்பு தங்கட்டும்
வாழ்வில் என்றுமே வெற்றி நிலைக்கட்டும்
வாழும் காலம் என்றும் உனதாய் இருக்கட்டும்

இப்படிக்கு
இயற்கை