Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 347  (Read 3631 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 347

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Lonely Warrior

  • Newbie
  • *
  • Posts: 15
  • Total likes: 58
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
நீ என்னை விட்டு நீங்கினாலும் உன் நினைவுகள் என்னும் பெருங் கடலில் கரை சேர முடியாமல் தவிக்கிறேன் சிறு படகை போல
கனவுகள் பல இருந்தும்
என் நிகழ்காலத்தை தொலைத்து
தனிமையோடும் உன் நினைவுகளோடும்
தடுமாறி கிடக்கிறேன் நான் ...

நீ இன்பத்தில் இருந்தாலும், துன்பத்தில் இருந்தாலும், பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்று நினைக்காதே! நீ நினைத்தவுடனே ஓடி வர, நானிருக்கிறேன்
உன் கண்ணீரை போல்

நீ என்னை விட்டு தூரம் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னை சூழ்ந்தே இருக்கிறது .
அலைபேசி அழைக்கும் போது, அழைப்பது நீயோ என அலைபாயும் மனதிடம் கூறுவேன் அலையாதே என்று

தாங்கி பிடிக்கும் தோளும்
சாய்ந்து படுக்கும் மடியும் எங்கே...
சிந்திய முத்தமும்
உன்  சிரித்த உதடுகளும்  எங்கே...
தேடி பார்கிறேன் என்னுள் உன்னை ......

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 860
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
[img]எத்தனை ஆவலாய் ஓடி வந்தேன்..
நீ அழைக்கின்றாய் என்ற ஆவலில்..
எத்தனை சந்தோஷ பூக்கள் பூத்தன மனதில் ..
உன்னை காணப்போகும் தருணம் நோக்கி..

அத்தனையும் தவிடு பொடி ஆனதே..
அத்தனையும் மண்ணோடு மண்ணாகிப் போனதே..
கொடுவாள் என நீ உதிர்த்த வார்த்தைகள், கண்களில் உதிரம் சிந்த வைத்ததே..
இடி என இறங்கிய உனது மொழிகள் தீப்பிழம்பென மனதை கருக்கி சென்றதே..

அன்பால் அணைப்பாய் என்ற  எனது நினைவில் நெருப்பு கங்குகளை பொழிந்தாயே..
அடிமையாய் இருக்கிறேன் என்று கெஞ்சியும் விஷ அம்புகள் கொண்டு இதயத்தை கிழித்து எறிந்தாயே...

எனக்கான பாதையில் போகவிடு என்கிறாய்..
உன்னையே என் உலகின் சாலைகளாய் மாற்றிய பின்..
போதும் இதோடு நிறுத்தி கொள்வோம் என்கிறாய்..
நீ இல்லாது எனது உலகம் நின்று விடுமென தெரிந்தும்..

உனக்காகவே உனது காதலை ஏற்றுக் கொண்டேன்..
இப்போது உனக்காகவே உன்னை பிரிக்கின்றேன்..
அன்பால் முளைத்த நமது காதல், அன்பிற்காகவே பிரியட்டும் ..

Offline PreaM

இரவோடு இரவாக
என்னை பிரிந்து செல்பவளே
உன்பிரிவை தாங்காது
 பின்தொடர்ந்து வருகின்றேன்

உன் கோபம் ஒன்றும் புதிதல்ல
நான் கொஞ்சும் கிளி நீ தானே
ஊர் உறங்கும் வேளையிலே
ஊரை விட்டு போறவளே

உன் கால்கள் நடை போட்டாலும்
உன் மனம்  பிரிய மறுக்கிறதே
பொடிநடையாய் போறவளே
போதுமடி நின்று விடு

பொல்லாத கோவத்தை நீ
விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு
பொழுது விடிந்ததுமே
புன்னகையோடு முகம் காட்டு

கோபத்தில் விட்டுச் செல்லாதே
 என் உயிரே விலகிச் செல்லாதே
விடியும் நேரம் நெருங்குதடி
உன் பிரிவால் மனசு நொருங்குதடி

கோபத்தில் தவறு செய்திருப்பின்
மன்னித்து மனசு மாறிவிடு
இப்பொழுதே என்னுடன் வந்துவிடு
விடியும் நாளை புதிதாக

வாழ்வோம் வாழ்வை வளமாக
வாழ்க்கை முழுதும் நலமாக....

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 236
  • Total likes: 779
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
வழமைக்கு மீறி விரைவில் பொழுது சாய்ந்த வெள்ளிக்கிழமை நாளொன்றில்..
நேரம் பிந்தி வேலை வாங்கிய மேலதிகாரியை உள்ளுக்குள் வைதபடி வீடு செல்ல..
உள்ளுணர்வு தந்தியடிக்க.. தலை திருப்பி பார்த்தேன்..
ஆளே இல்ல தெருவில் ஒரு கரிய நெடிய உருவம் தொடர்ந்தது என் பின்னே..

உள்ளூர் பத்திரிகை தலைப்பு செய்தி முதல்..
பெண் வன்முறைகள் பேசும் facebook வீடியோக்களும்..
கண் முன்னே தோன்றி கரைந்துகொண்டிருந்தது  என் மனதைரியம் ..
ஆபத்தில் உதவும் என பார்த்து வைத்திருந்த youtube தற்காப்புக்கலைகள் காணொளிகளும்
அவசியத்திற்கு நினைவுக்கு வராமல் முரண்டுபிடித்தது..

சில்லிட்ட நெஞ்சம் பதற.. நடுக்கத்தில் கால்கள் பின்ன..
கைகளோ கைத்தொலைபேசி தேடி பைக்குள் துழாவ..
தேடியெடுத்த கைபேசியோ இருமுறை கண்சிமிட்டி உறக்க நிலைக்கு போனது..
சார்ஜ் போட மறந்த என் முட்டாள்தனத்தை நினைந்து நொந்தபடி..
நடையின் வேகத்தை மெல்ல கூட்டினேன்..

கரிய நெடிய அந்த உருவமோ  என் நான்கு அடிக்கு சமனான தன்
நெடிய கால்களின் இரண்டு அடியால் எனை நெருங்க..
பௌதீகவியல் சார்புவேக கோட்பாடுகள் என் மனக்கண்ணில் தோன்றி
ஆர்முடுகிக்கொண்டிருந்தேன் என் வீடு நோக்கிய பாதையில்..

எட்டிப்பிடிக்கும் தூரத்தை அவன் என் அருகில் எட்டிவிட..
மிச்சமிருந்த பலத்தை திரட்டி அடித்தொண்டையிலிருந்து கத்த நான் தயாராக ..
மது அக்கா நீங்கதானே நான் உங்கள் தம்பி சதீஷின் நண்பன் என வாய் திறந்தது அந்த உருவம்..
மலங்க விழித்த என் விழிகளில் பயம் மறைய அசட்டுபுன்னகை ஒன்றை வீசினேன் அவனிடத்தில்..

அன்று முதல் குடியேறியது pepper ஸ்பிரேயும்
எப்போதும் முழு சார்ஜ் இல்  இருக்கும் பவர் bankum என் கைப்பையில்..
பல சமயங்களில் பாடப்புத்தகம் சொல்லித்தரும் பாடங்களை விட பயம் கற்றுத்தரும் வாழ்க்கை பாடங்கள்  அதிகம்....
« Last Edit: July 02, 2024, 03:48:58 PM by Madhurangi »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1443
  • Total likes: 3050
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

மீண்டும் ஒரு சந்திப்பு

இரண்டாம் முறை
இன்று  மீண்டும் நீ விலகி செல்ல
திரும்பி பார்க்கிறேன் நானும் மெல்ல

இம்முறை என்   
கண்களில் இல்லை கண்ணீர்
வார்த்தைகளில் இல்லை குளறல்
நடையில் இல்லை தடுமாற்றம்
உள்ளம் மட்டும் தெளிவாய்
அதன் காரணம்  நீயும் அறிவாய் !

முதல் முறை அன்று விலகியது
காலத்தின் சதி என்றிருந்தேன்
 நித்திரை இன்றி தவித்திருந்தேன்
நிம்மதி இன்றி வாடியிருந்தேன்
துயரத்தின் பிடியில் சிக்குண்டேன்
மரணமும் முடிவாக துணிந்திருந்தேன் !

வலிகள் இல்லா வாழ்வு - அந்த
இறைவனுக்கும் வாய்த்ததில்லை
இதில் நான்(ம்) என்ன விதிவிலக்கா!

உடன் இருந்த நட்பு
உணர்த்தியது எனக்கு ..
எத்துணை துன்பங்களுக்கும்
மரணம் என்றும் முடிவல்ல
எத்துணை வலிகளும்
காலத்தால் ஆராததும் அல்ல


இதயத்தை அறுக்கும் உறவுகள்
காயத்த்தை விதைக்கும் பந்தங்கள்
இவற்றை விட்டு விலகுதலும்
வீரத்தின் வெளிப்பாடே!
 

உடன் இருந்து ஒன்றாய் வாழ்ந்து
சுகப்படுவது மட்டும் அல்ல
தூரம் நின்று நீ வாழ்வதை கண்டு
இரசிப்பதும் காதல் தான்

எனக்கென்ற புது வாழ்வின்  பாவனையாய் இனி நான்
உனக்கென்ற தனி பாதையில் வேதமாய்  நீ
சென்று வா அன்பனே ..


VethaNisha

« Last Edit: July 03, 2024, 06:32:00 AM by Vethanisha »

Offline Kavii

போகிறாய் நீ, என் காதலே,
நிழலாக நீ எங்கிருந்தாலும்,
உன் நினைவுகள் மட்டும்,
என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.

நடந்து சென்ற உன் அடிகளின் ஒலி,
என் இதயம் சிதறிய குரல்,
நீ தொலைவுக்கு சென்றாலும்,
உன் சுவடு என்னை விட்டு போகவில்லை.

உன்னின் முகம், என் கண்களில்,
விலகும் போது கண்ணீர் வழியும்,
நம்மிடையே இருந்த உறவுகள்,
உறங்காத இரவுகள் ஆகின்றன.

நினைவுகள் மட்டும் நீளும்
நாம் சேர்ந்து கொண்ட தருணங்கள்,
அருகில் இல்லாத உன்னை,
நான் தாங்க முடியாமல் தவிக்கின்றேன்.

விலகிப் போகும் உன்னைக் கண்டு   ,
என் விழிகள் ததும்பி நிற்கின்றன,
உன் புன்னகை என் நினைவில் வந்து 
கண்ணீர் துளிகளாய் வழிகின்றன.
உன் கைகள் என்னை விட்டுச் சென்றவுடன்,
என் உயிர் ஒரு தனிமையில் விழுந்தது,
விதியால் பிரிந்தாலும்,
உன் நினைவுகள் என்னை சுற்றிக் கொள்கின்றன.

காதல் என்னும் வார்த்தை,
உன் பெயரில் எழுந்தது,
என் நெஞ்சில் நீ வாழ்ந்தால்,
நான் உயிரோடு வாழ்வேன்.

நினைத்தால் நிமிடம் நிற்கும்,
நம் சந்திப்பு ஏன் கண்ணீரில் முடிந்தது?
விண்ணின் மேகங்கள் கூட,
என் துயரை உணர்ந்தன.

ஏன் என்னை விட்டுச் சென்றாய் உறவே
கண்ணிமை போல சேராயோ பிரிவே’
நீ சென்ற வழியில்,
நிழலாய் நான் பின்தொடர்கிறேன்,
உன் கால் அடிகளின் தடங்களில்,
என் காதலின் அடையாளம்.

காலம் இப்போது நின்று,
என் கண்ணீரை பார்த்து சிரிக்கிறது,
உன்னை இழந்து விட்டேன் என்று,
என் மனம் குமுறி அழுகிறது.
நீ திரும்பி வரும் நாளை,
என் நெஞ்சம் காத்திருக்கிறது,

காதல் அழியாததாம்
அது உண்மை எனில் மீண்டும் சேர்வோம்
என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன் என் பாதையில் !


Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 419
  • Total likes: 1954
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


கருவிலே இருப்பது ஆணா பெண்ணா
ஆணா இருந்தா பொறந்து ஆளட்டும்
பொண்ணா இருந்தா கருமத்த கருவுலயே கலச்சுடு
கலையாட்டிகூட பரவால்ல கல்லிப்பாலாச்சும் கொடுத்துடு ....

பக்கத்து வீட்டு பாப்பாவை பாத்துக்க சொல்லிட்டு
பட்டணம் வர போனாங்க பெத்தவங்க
பச்சப்புள்ளன்னு பாக்கமா நம்பித்தானா விட்டாங்கன்னும் நினைக்காம
காமப்பசியை தீத்துக்கலாம் வாடா மச்சினு சொல்லவும் .....

மாமா மடில ஒக்காரு பாப்பா
முட்டாயி வேணுமான்னு கேட்டு
முதலிரவு நடத்திடவும்
இங்கு மாப்பிள்ளைக பலர் உண்டு....

பால்மணம் மாறாக்குழந்தை முதல் பருவமெய்திய மங்கை வரை
துரத்தித்துரத்தி துன்பறுத்தவும்
பிறர் அழுகையில் இன்பம் காணவும்
மனித உருவ மிருகங்களும் பலருண்டு

இச்சைப்பார்வையால் இம்சை படுத்தி..
கொச்சை வார்த்தைகளால் கொடூரமாய் தாக்கி...
வாய்க்கு வந்தபடி வீண் பழி போட்டு
தொடாமலே கற்பழிக்கும் பாவிகளும் பலர் உண்டு....

பருவம் எதுவாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தால் போதும்
கற்பு என்னும் சொல்லை வைத்து
பெண்ணை சித்தரித்து சிதைக்கவும் பலருண்டு....

கருவில் தொடங்கிய பயணம்
கல்லறை வரை தொடருமோ??
இப்புவியில் பிறந்ததே தவறா... இல்லை
பிறப்பிலே பெண்ணானது தான் தவறா????....

மனதில் தோன்றிய கேள்விக்கு
ஏற்ற பதில் யாரிடம் உள்ளதோ
என்னை படைத்த இறைவனிடமா.. இல்லை
உயிர் கொடுத்து வளர்த்த பெற்றோரிடமா..
பதில் அறிந்தால் யாரும் கூறுங்களேன்....



ஏமாற்றி ஏய்ப்பவனை எதிர்த்து நின்று எரித்திடவும்
காமப்பிசாசை கழுத்தை அறுத்து கொன்றிடவும்
ஆணென்ற அகந்தையை அணு அணுவாய் வெட்டி
அழித்திடவும் அலைபாயுது இந்த நெஞ்சம்...

பிறப்பு முதல் இறப்பு வரை  பாகுபாடு ஏதுமின்றி
பெண்களை சிதைக்க எண்ணும் கயவரே..
ஒன்று மட்டும் சொல்கிறேன் கேளும்.. நாங்கள்
பயந்து ஓடிய காலமும் ஒருநாள் மாறும்...

உயிர் கொடுக்கும் பெண்ணிற்கு
உயிரை எடுக்கவும் தெரியுமென்பதை நினைவிற்கொண்டு
மனிதனாய் மாறுங்கள்...
மாதரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.



« Last Edit: July 03, 2024, 02:33:46 PM by VenMaThI »

Offline SweeTie

அது பக்கத்துவீட்டு பொன்னம்பலத்தின் ஆவியாய் இருக்குமோ?
எதற்கு  நான்  போகுமிடமெல்லாம்  துரத்துகிறான் ?
என்னை  காதலிப்பதாக   சொன்னான்  நானோ  ஏற்றுக்கொள்ளவில்லை
தூக்கிட்டு    இறந்துபோனான் என்றல்லவா  சொன்னார்கள்

அவன் கால்களை உற்று  நோக்குகிறேன்   
பேய்களுக்கு  கால்க்கள்  நிலத்தில்   இருக்காது அல்லவா?
இவன் கால்களும் அந்தரத்தில்  நிற்பதுபோல்தான் தெரிகிறது
கண்டிப்பாக இவன்  பொன்னம்பலத்தின்  ஆவிதான் என உறுதிசெய்தேன்

இரவில்  என்னால் எங்கும்  போகமுடியவில்லையே 
பயத்தில்  என் கால்கள்   நடுங்க   ஓட்டம் பிடித்தேன்   
சிறிது தூரம்  சென்று  திரும்பி பார்க்கிறேன்     
அந்த உருவம்  திரும்பி எதிர் திசையில்  போகிறது   

ஆஹா    என்னோடு ஓட்டத்தில் ஜெயிக்க முடியாமல் திரும்பிவிட்டானா ?
எனக்குள்ளே   சந்தோசத்தின்   எல்லையை காண்கிறேன் 
பேய்களுக்கு  இரவில்தான்  கண்  தெரியுமாம்  என் நண்பி கூறியது ஞாபகம்
எனது வாய்   கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது
சீக்கிரமே வீடுசென்று  கட்டிலில் தொப்  என விழுந்தேன் 

முதல்நாள்  படித்த  The Haunting Hour.  என்ற  பயங்கர நாவல்
கட்டிலில்  விரித்தபடியே  கிடந்தது. 
படிக்க படிக்க    ஒரு பக்கம்  பயம் இருந்தாலும்   
புத்தகத்தை  மூடி வைக்க  முடியவில்லை   ....ஆர்வக்கோளாறு
கடைசி பக்கம்  படித்து முடிக்கவும்  மணி இரவு 12 அடிக்கவும் சரியாக இருந்தது

கதையின்  பிரதி பலிப்பா  இந்த   ஆவி  என
 என்னை நானே தேற்றிக்கொண்டேன்
பயம்  நம்முள்   ஏற்படும்  பலவீனம் அன்றி வேறில்லை
கண்களை இறுக  மூடிக்கொண்ட என்னை 
நித்திராதேவி  அனைத்த்துக்கொண்டாள்.
 
« Last Edit: July 04, 2024, 01:17:31 AM by SweeTie »