Author Topic: தினம் ஒரு நகைச்சுவை  (Read 13772 times)

Offline எஸ்கே

தினம் ஒரு நகைச்சுவை
« on: August 28, 2021, 01:05:23 AM »
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

« Last Edit: August 28, 2021, 01:16:25 AM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 02
« Reply #1 on: August 29, 2021, 10:30:01 AM »
ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்.

« Last Edit: August 29, 2021, 10:30:47 AM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 03
« Reply #2 on: August 30, 2021, 09:15:02 AM »
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"

« Last Edit: August 30, 2021, 09:15:34 AM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 04
« Reply #3 on: August 31, 2021, 09:35:44 AM »
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

« Last Edit: September 01, 2021, 07:25:52 PM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை -05
« Reply #4 on: September 01, 2021, 07:25:25 PM »
"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"

"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"

« Last Edit: September 01, 2021, 07:26:05 PM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 06
« Reply #5 on: September 02, 2021, 01:36:21 PM »

"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"

"பெண் அவ்வளவு அழகா?" "இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

« Last Edit: September 02, 2021, 01:36:39 PM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 07
« Reply #6 on: September 03, 2021, 08:00:36 AM »

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 08
« Reply #7 on: September 04, 2021, 07:28:53 PM »

என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 09
« Reply #8 on: September 05, 2021, 10:59:02 AM »

கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்.

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 10
« Reply #9 on: September 06, 2021, 03:33:16 PM »

"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"

"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"

« Last Edit: September 06, 2021, 03:33:43 PM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 11
« Reply #10 on: September 07, 2021, 02:59:15 PM »

என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.."

"அப்படி என்ன பண்ணிட்டான்..?"

"என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 12
« Reply #11 on: September 08, 2021, 09:12:04 AM »

"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"

"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 13
« Reply #12 on: September 10, 2021, 10:28:40 AM »

ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 14
« Reply #13 on: September 11, 2021, 11:49:07 PM »

நீதிபதி : பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி : ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

« Last Edit: September 11, 2021, 11:49:26 PM by எஸ்கே »

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 15
« Reply #14 on: September 12, 2021, 06:37:41 PM »

காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.

காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்