Author Topic: தினம் ஒரு நகைச்சுவை  (Read 13773 times)

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 91
« Reply #90 on: December 02, 2021, 11:54:49 PM »

பெண் 1 : ரேசன் கடைக்காரரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சு . குழந்தை பொறந்ததுலேர்ந்து சந்தேகப்பட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றாருடி.

பெண் 2 : அப்படி என்ன கேட்குறார்?

பெண் 1 : குழந்தை எப்படி எடை குறையாம பொறந்துச்சுன்னுதான்.





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 92
« Reply #91 on: December 03, 2021, 09:20:24 AM »


நண்பன் 1 : டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....

நண்பன் 2 : அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 93
« Reply #92 on: December 05, 2021, 10:24:15 AM »

ஜில்லு: நம்ம கட்சி தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."

தில்லு : "எப்படி...?"

ஜில்லு: "மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"






தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 94
« Reply #93 on: December 06, 2021, 10:45:05 AM »

டாக்டர் : ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!






தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 95
« Reply #94 on: December 08, 2021, 08:13:53 AM »

ஒருவர்: ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னைபோன என் பையன் சொன்னமாதிரியே செஞ்சுகிட்டு இருக்கான்.

மற்றவர்: அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?

ஒருவர்: நீங்கவேற.....பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 96
« Reply #95 on: December 09, 2021, 08:28:02 AM »
டீச்சர் : ஏன்டா லேட்டு??

ஆனந்த் : பள்ளிகூட போர்டை படித்ததால் தான் லேட்டாயிருச்சு டீச்சர்.

டீச்சர் : என்னது பள்ளிகூட போர்டை படித்ததால் லேட்டா??

ஆனந்த் : பள்ளிபகுதி மெதுவாக செல்லவும் என்று போர்டு வைத்திருக்கிறீர்களே அதனால் மெதுவாக வந்தேன்..





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 97
« Reply #96 on: December 10, 2021, 04:44:22 PM »
மனிதன்: ச்சே! இந்த புது செறுப்பு ரொம்ப தான் கடிக்குது!

செறுப்பு: இவன் கடிக்கிறதுக்கு நான் எவ்வளவோ மேல்!





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 98
« Reply #97 on: December 11, 2021, 09:06:21 AM »

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 99
« Reply #98 on: December 12, 2021, 05:58:11 PM »

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை

நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

Re: தினம் ஒரு நகைச்சுவை - 💯
« Reply #99 on: December 13, 2021, 08:07:29 AM »

தோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே?

தோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி?

தோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்
.




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்