« Reply #33 on: June 20, 2021, 07:50:25 PM »
700% அதிகமான பென்சில் விற்பனை?
2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் உலகப்புகழ் பெறத்துவங்கி, இன்று எல்லா பத்திரிக்கைகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் சுடோக்கு(Sudoku) புதிருக்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் “Number Place”. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இந்தவகையான புதிர்கள் மக்களிடையே பழக்கத்தில் இருந்தாலும், இந்த மார்டன் சுடோக்கு 74 வயதான Howard Garns என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு(வடிவமைக்கப்பட்டு?) 1976ஆம் ஆண்டு Dell Magazines என்ற பத்திரிக்கையில் ”Number Place” என்ற பெயரில் முதன்முதலில் வெளியானது. தான் கண்டுபிடித்த சுடோக்கு பிரபலமாவதைப் பார்க்காமலேயெ 1989ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார் Howard.
1984ஆம் ஆண்டு ஜப்பானில் Monthly Nikolist என்ற பேப்பரில் வெளியாகத் தொடங்கிய சுடோகுவிற்கு, Sūji wa dokushin ni kagiru என்று ஒரு வழவழா கொழகொழா பெயர் வைக்கப்பட்டிருக்க (அப்படியென்றால் “the digits must be single” என்று அர்த்தமாம்), பின் ஒரு நாள் Maki Kaji என்பவரால் சுடொகு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டில் உலகமெங்கும் பிரபலமாகத் தொடங்கியது இந்தப்புதிர் குடும்பத்தில் மினி சுடோகு, cross sum sudoku, hypersudoku, killer sudoku என்று ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன.
மொத்தமே 5,472,730,538 சுடோகு புதிர்கள் தான் உள்ளன. பேப்பரும் பென்சிலுமாக மக்களை கிறுக்குப்பிடித்து அலையவைத்த சுடோகு தான், 2006ஆம் ஆண்டு பென்சில் விற்பனை முந்தைய ஆண்டைவிட 700% அதிகரித்ததற்குக் காரணம் என்று ”The Independent of London” பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது..
« Last Edit: June 20, 2021, 07:55:26 PM by எஸ்கே »

Logged
