« Reply #45 on: July 02, 2021, 11:32:48 PM »
சட்டைல என்ன? பூனை சார்.. அதிலென்ன அவ்வளவு பெருமை??
அமெரிக்காவின் சி.ஐ.ஏ, கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஒரு பூனையை சீக்ரட் ஏஜண்ட்டாக தயார் செய்தது. கரெக்ட்டு..பூனை தான். பூனையை எல்லோரும் செல்லப்பிராணியாகவே பார்க்கும் மனோபாவம் இருப்பதால், அதன் மேல் யாருக்கும் அவ்வளவு எளிதில் சந்தேகம் வராது என்று நினைத்த சி.ஐ.ஏ, 1960ஆம் ஆண்டு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டது. ஒரு பெண் பூனையின் காதில் சிறிய மைக்கையும், அதன் உடலில் ஒரு ட்ரான்ஸ்மிட்டரையும் பொருத்தி அதை ஒரு சீக்ரெட் ஏஜண்ட்டாகத் தயார் செய்தது சி.ஐ.ஏ.. பூனையின் உருவ அளவைக் கணக்கில் கொண்டு, சிறிய உரையாடல்களை மட்டுமே பதிவுசெய்யக்கூடிய திறன் கொண்ட சின்ன பேட்டரியும் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டது.
இவை அனைத்தையும் விட, பூனைக்கு பயிற்சி கொடுப்பதுதான் சி.ஐ.ஏவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தன் மீது பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளை, பூனை மறந்தும்(!) வீணாக்கிவிடக்கூடாது, கருவிகள் வெளியில் தெரியக்கூடாது, குறித்த நேரத்தில் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும்; இதெல்லாம் தான் சி.ஐ.ஏ கொடுத்த பயிற்சிகள். ஐந்து வருட பயிற்சிக்குப் பின், பூனை எப்படி வேலை செய்கிறது என்று சோதித்துப் பார்க்க விரும்பிய சி.ஐ.ஏ அதிகாரிகள், சாலையில் மறுபக்கம் இருந்த ஒரு பார்க் பென்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவர்களை நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டு பூனையை கீழே விட்டனர். வேகமாக சாலையைக் கடந்த 20 மில்லியன் டாலர் ஏஜண்ட், டாக்ஸி ஒன்றில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனது. அதோடு சி.ஐ.ஏவின் “பூனை சீக்ரெட் ஏஜண்ட்” முயற்சியும் முடிந்துபோனது.
« Last Edit: July 02, 2021, 11:41:16 PM by எஸ்கே »

Logged
