மண்ணுக்குள் விழுந்த விதை
முளைத்து மரமாகவில்லையெனில்
விழுந்த விதையால்
எந்த ஒருபயனும் இல்லை
அதுபோலே
உனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை
வெளிக்கொணரவில்லையெனில்
உனக்குள்ளே திறமைகள் இருந்தும்
ஏதும் பலனில்லை
தோழனே
அலட்சியங்களை தூக்கி பரண்மேல் போடு
லட்சியங்களை தட்டி எழுப்பு
உறங்கிக்கிடக்கும் உன் திறமைகளுக்கு
புத்துயிர் கொடு
நாளைய உலகம் நிச்சயம் உன்னை
திரும்பிப் பார்க்கும்
தன்னம்பிக்கை அதிகம் வை
நான் தான் என்ற நம்பிக்கை வைக்காதே
ஆணவம் அழித்துவிடும்
உனக்குள் இருக்கும் திறமைகளை அனைத்தையும்