Author Topic: அன்பின் உச்சம் கோபம் 😤🥰😍  (Read 922 times)

Offline இளஞ்செழியன்

 
அன்பின் தீவிரத்தை ஆண்களால்
எட்டவே முடியாது அது
பெண்களுக்கே உரியது

இவளின் இத்தனை அன்பிற்கு
அப்படி என்ன செய்தேன்
என்றும் அவனுக்கு தெரியாது..

என்ன செய்யவேண்டும் என்றும்
தெரியாது போலவே
வெறுப்பின் தீவிரத்தையும்
அவளால் மட்டுமே எட்டமுடியும்

எல்லையற்ற அன்பை சொகுசாக
அனுபவித்து பழகிய ஆண்மனம்
வெறுப்பிற்கு பயந்து நடுங்கி
நடுக்கத்தை மறைக்க
அவளைத் தூற்றும், குற்றம் சொல்லும்

ஒரு பெண் விரும்பிக் கொண்டே
இருக்கவேண்டும் என்று நினைப்பது
அவளை துன்புறுத்துவதற்கு சமம்

அவளின் கோபங்களை ஏற்றுக்கொள்வதும்
வெறுக்க அனுமதிப்பதும் தானே அன்பின் படிநிலைகள்!

வெறுப்பு என்றதும்
உறவை உடைத்து பிரிதலுக்கு செல்லுதல் மட்டுமே
என்று எண்ணவேண்டாம்

இணைந்து இருக்கும் போதுமே
அவளுடைய கோபங்கள் மீது
எவ்வளவு மரியாதை தருகிறோமோ
அவ்வளவு விரும்புகிறோம் என்றர்த்தம்

அன்பிற்கு எதிர்விளைவு இல்லாதபோதுகூட
அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவள்
கோபத்திற்கு மதிப்பில்லாத போது
தன்னுடைய இருப்பு குறித்து ரொம்பவுமே
கேள்விக்குள்ளாகிறாள்

அவளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்
முதலில் அவளுடைய
வெறுப்பையும் கோபத்தையும்
புரிந்துகொள்ள வேண்டும்

அவற்றிற்கு மதிப்பளிக்காமல்
அவளை எவ்வளவு விரும்பினாலும்
போற்றினாலும் எல்லாம் வீண்

ஆசைதீர விரும்பினாய்
ஆசைதீர வெறுத்துக்கொள்
வெறுத்து முடித்ததும்
ஆசைதீர விரும்பு
ஆசைதீர வெறு  - LooP



 
« Last Edit: July 03, 2019, 01:59:38 PM by இளஞ்செழியன் »
பிழைகளோடு ஆனவன்...

Offline Guest 2k

ஆழமான கவிதை. ஒவ்வொரு முறை படிக்கும்பொழுதும் வெவ்வேறு perspective தருகிறது. எனினும் அன்பின் உச்சம் கோபமாக இருக்கலாம். ஆனால் அன்பில் வெறுப்பென்பதற்கு இடமில்லை தானே.

Also loved the loop phrase,
//ஆசைதீர விரும்பினாய்
ஆசைதீர வெறுத்துக்கொள்
வெறுத்து முடித்ததும்
ஆசைதீர விரும்பு
ஆசைதீர வெறு

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline இளஞ்செழியன்



   

//ஆனால் அன்பில் வெறுப்பென்பதற்கு இடமில்லை தானே//


வெறுப்பு என்றதும்
உறவை உடைத்து பிரிதலுக்கு செல்லுதல் மட்டுமே
என்று எண்ணவேண்டாம் - கோபத்தின் முதல் படிநிலையே வெறுத்தல் ,ஒரு மழை துளி மண்ணுல விழும்போது அது என்னவாகும்னு தெரியாது, அது போல் தான் அன்பின் வெறுபுக்கள்..






பிழைகளோடு ஆனவன்...