பொறுமை என்பது கசப்பானது
உண்மை தன் ஒப்புகொள்கிறேன்
கசப்பான உண்மை தான். ஏனெனில்
உண்மையும் உண்மையில் கசப்பானது
அதனால் தான் பலரும் அதை சுவைப்பதில்லை .
பொறுமை கசப்பானது தான்
அது காக்கப்படும் பொது மட்டும்
கட்டி காக்கபட்டுவிட்டால் அதன் பலனோ
எண்ணிடமுடியாதபடி எண்ணில்லா இனிமையானது .
உட்கொள்ளப்படும்போது கசப்பாய் இருந்தாலும்
கட்டுப்பாட்டுடன் உட்கொண்டுவிட்டால் பிணிபோக்கி
உடல் நிலையை இனிதாக்கும் மருந்தோ போல .
பொறுமையை பெருமையாய் கருதி கடைபிடிக்காமல்
வெறும் வறுமையாய் கடைப்பிடித்து அதன் வெறுமையை
வெறுமையாய் வரியிடும் இசையின் பரிணாமமே !
பொறுமையை கடைபிடி !
அருமையாய், பெருமையாய்,சீறும் சிறப்புமாய்
இருப்பாய் என , உரிமை இருக்கிறதோ இல்லையோ?
இருந்தும் உரிமையை சொல்கிறேன்
இனிமை என்பதும் இன்பம் என்பதும்
இருக்கின்ற இடத்தை பொருத்தது இல்லை
இதயத்தை பொருத்தது !
ஆகையால்
பொறுமையை கடை பிடி !