காரணத்தையே கூறிடாமல் செய்த
காரியத்தை மட்டும் கூறுகிறாய்
காரணமே அப்படி ஏதும் இருந்தாலும்
அது, தேரா காரணமாய் ஈறாது.
மாறாது ,ஒப்புக்கொள்கிறேன் உன் நிலை
படு மோசமான நிலைதான் என்பதை ...
அப்படியே, விட்டுப்ப் போக வேண்டும்
என்ற இக்கட்டான கடும் சமயமெனில்
வருத்தபடவேண்டியது நீ மட்டும் அன்று
உன் அலுவலக மேஜைகள் , நாற்காலிகள் .
குளிரூட்டிய குளிசாதன பெட்டி .
நீ தொட்டு பயன்படுத்திய தொலைபேசி .
உன் பட்டுப்பாதம் பட்டுப்பட்டு பதிந்து போன
உன் அலுவலக மின் தூக்கி (லிப்ட்).
உன் இரு சக்கர வாகனம் நிறுத்தா
வாசல் வழியில் இருக்கும் அவ்வாகன நிறுத்தம் .
மதிய வேளையில், உணவு இடைவேளையில்
உன் சக ஊழியரோடு அரட்டையில் நீ அடிக்கும்
ஒவ்வொரு நகைச்சுவை துணுக்குகளையும்
ஒருமுறையும் கேட்காத எனையே இப்படி வருத்துகிறதே ?
நிதமும் அதை கேட்டு, ரசித்து, சிரித்து ஆயுள்கூடிய
அந்த உணவு கூடத்தின் நிலை என்ன ?
அன்றாடம் நீ சுமந்து சென்ற கோப்புகள் ,
அழகாய் , மிக அழகாய் நித்தம் நீ குடிக்க ,
தேநீரும், தண்ணீரும் உனக்காய் சுமந்த கோப்பைகள்
இவை அனைத்தயும் விட, தன் வருகையின்
அர்த்தத்தை அர்த்தப்பட்டு ,அர்த்தப்படுத்தும் ,
ஒவ்வொரு நாளும் உன் வருகையை பதிவு செய்யும்
வருகை பதிவேடு ,
இப்படி ஒவ்வொன்றும்
தன் உயர் பங்கிற்கு வருந்துமே ?
இதற்கென்ன பதில் சொல்ல போகிறாய் ??