அண்ட பெருவெளியில்...
நட்சித்திரா துகள்களை...
சிதறுவதை .போல் .
என் மனம் சிதறுவதை...
கண்டும்..காணாமல்..போகிறது
உன் மௌனம்!
ஊழி காற்றிலும்...
ஓலமிடும் புயலில் ...
உன் காலடி ஓசையை ........
கேக்க துடித்து இருக்கும் ...
வேளையில்...........
உன் மௌனம்தான் கேக்கிறது...
இதயத்தின் துடிப்புகள் ....
தன் வேகத்தை ..அதிகரித்து..
உன்னிடம் பேச ....
ப்ரயத்தனப்படுகின்றன...
ஆனால்... ரத்தத்தின் ..
அனலில் தெறிக்கிறது...
உன் மௌனம்!
ஆகாய சிறகில்..ஏறி...
உன்னிடம் போய் சேர ....
தத்தளிக்கும்..படகாய் மனம்..
பரிதவிக்கும் என்னை பார்த்து...
சிரிக்கிறது ...உன் மௌனம்!.
காய்ந்த சருகுகளுக்கு ...
காயம் படாது...என்று எவர் சொன்னது!
கானல் நீர்க்கு.......வேர் விடும் ...
என் கண்ணீரை ....
வேடிக்கை பார்க்கிறது..
உன் மௌனம்!