Author Topic: மௌனங்கள்  (Read 1143 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
மௌனங்கள்
« on: November 08, 2018, 05:30:35 PM »


அண்ட பெருவெளியில்...
நட்சித்திரா துகள்களை...
சிதறுவதை .போல் .
என் மனம் சிதறுவதை...
கண்டும்..காணாமல்..போகிறது
உன் மௌனம்!

ஊழி காற்றிலும்...
ஓலமிடும் புயலில் ...
உன் காலடி ஓசையை ........
கேக்க துடித்து இருக்கும் ...
வேளையில்...........
உன் மௌனம்தான் கேக்கிறது...

இதயத்தின் துடிப்புகள் ....
தன் வேகத்தை ..அதிகரித்து..
உன்னிடம் பேச ....
ப்ரயத்தனப்படுகின்றன...
ஆனால்...  ரத்தத்தின் ..
அனலில் தெறிக்கிறது...
உன் மௌனம்!

ஆகாய சிறகில்..ஏறி...
உன்னிடம் போய் சேர ....
தத்தளிக்கும்..படகாய் மனம்..
பரிதவிக்கும் என்னை பார்த்து...
சிரிக்கிறது ...உன் மௌனம்!.

காய்ந்த சருகுகளுக்கு ...
காயம் படாது...என்று எவர் சொன்னது!
கானல் நீர்க்கு.......வேர் விடும் ...
என் கண்ணீரை ....
வேடிக்கை பார்க்கிறது..
உன் மௌனம்!

« Last Edit: November 08, 2018, 05:38:21 PM by RishiKa »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: மௌனங்கள்
« Reply #1 on: November 08, 2018, 05:38:39 PM »
மலைத்து போனேன் கவிதை படித்து சிலையாகி போனேன்

சில நேரம் மௌனத்தின் எதிர்வினை நம்மை காயபடுத்தும்போது திகைத்து போய் நிற்கிறோம்
மீண்டு வர  வழிதெரியாமல்

வரிகள்  வலிகள் உணர்த்தியது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Guest 2k

Re: மௌனங்கள்
« Reply #2 on: November 08, 2018, 06:59:30 PM »
மனம் விரும்புவர்களின் மௌனம் ரணம் தான் பேபி. மௌனத்தின் வலி உணர்த்தும் கவிதை  :(

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SweeTie

Re: மௌனங்கள்
« Reply #3 on: November 08, 2018, 08:46:09 PM »
அதிகமானவர்கள் மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்பதை மட்டும் அறிவார்கள்.    ஒரு சிலர்க்கு மட்டுமே   அதில் வேதனையும் உண்டு என்று புரிந்து கொள்கிறார்கள்.   ரிஷிகா  அருமை.   வாழ்த்துக்கள் 

Offline JoKe GuY

Re: மௌனங்கள்
« Reply #4 on: November 09, 2018, 07:21:47 PM »


அண்ட பெருவெளியில்...
நட்சித்திரா துகள்களை...
சிதறுவதை .போல் .
என் மனம் சிதறுவதை...
கண்டும்..காணாமல்..போகிறது
உன் மௌனம்!

மிக அழகாக  எழுதி இருக்கிறீர்கள்.உங்களுக்கு எனது பாராட்டுக்கள் .வளரட்டும் இன்னும் அதிக கவிதைகள்


உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline gab

Re: மௌனங்கள்
« Reply #5 on: November 09, 2018, 07:38:21 PM »
கவிதை அருமை . தொடர்ந்து எழுதுங்கள் ரிஷிகா.