இந்த ராச்சசியயும்
தேவதையாக பார்த்தவன் நீ
கல்லாக இருந்த என்னை
செதுக்கி சிலை செய்தவன் நீ
காகித மலராக இருந்த என்னை
நறுமணம் வீசும் மலராக
மாறியவன் நீ
தோற்றத்தில் பெண்ணாய்
குணத்தில் ஆண் மகனாய் இருந்த என்னை
என் பெண்மையை உணர வைத்தவன் நீ
என் கவிதைகள் சோகத்தை தாங்கியே
வரும்
என் சோக கவிதைகளை
படித்து விட்டால்
கோவம் சோகம் இரண்டும் கலந்து
கேள்வி கணைகளை தொடுப்பவன் நீ
இனி என் கவிதைகள் சந்தோஷத்தை
மட்டுமே சுமந்து கொண்டு வரும்
உனக்கே உனக்காக மட்டும் ........