Author Topic: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!  (Read 21326 times)

Offline சாக்ரடீஸ்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்

நாம் அறிந்த விளக்கம் :

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் என்பது இதன் உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
« Last Edit: August 13, 2018, 01:49:41 PM by Socrates »

Offline சாக்ரடீஸ்

ஏறச் சொன்னால் எருது கோபம்இ இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்

நாம் அறிந்த விளக்கம் :

கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

விளக்கம் :

ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும்இ இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்இ அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள்இ தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல்இ ஏறினால் எருதுவுக்கு வலிக்கும்இ ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம்இ நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும்இ சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

« Last Edit: August 14, 2018, 11:02:13 AM by Socrates »

Offline சாக்ரடீஸ்

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

நாம் அறிந்த விளக்கம் :

பேச்சு பெருசா இருக்கும் செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

விளக்கம் :

ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்.

« Last Edit: August 16, 2018, 10:53:55 AM by Socrates »

Offline சாக்ரடீஸ்

புல் தடுக்கிப் பயில்வான் போல

நாம் அறிந்த விளக்கம் :

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு பழமொழிகளில் கலந்து விடுகிறது. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது. வேண்டுமானால் சிலவகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் அல்ல
 


விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான். ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி - கரைத்துக் குடித்தாராம். எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. இது தான் உண்மை விளக்கம்.


Offline சாக்ரடீஸ்

பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ

நாம் அறிந்த விளக்கம் :

விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.
 


விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோஇ வாளோஇ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.


Offline சாக்ரடீஸ்

ஆறு கெட நாணல் விடுஇ ஊரு கெட நூல விடு

நாம் அறிந்த விளக்கம் :

நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். ஆனால் இந்த விளக்கம் உண்மை அல்ல.

 


விளக்கம் :

நூல் விட்ட ஊரும் நாணலற்ற ஆற்றுக்கரையும் பழுதாய் போகும் என்பதாய் அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது படிப்பறிவில்லாத அதில் ஆர்வம் காட்டாத ஊர் எந்த வித முன்னேற்றமும் அடையாது. நாணல் போன்ற தாவர வகைகள் அதிகம் அடர்ந்திருக்கும் கரைப்பகுதி பலமுள்ளதாக இருக்கும். சீக்கிரம் ஆற்றினால் அரிக்கப்பட்டு கரைகள் பாதிக்கப்படாது என்பதாய் சொல்லப்பட்ட பழமொழி முன்னுக்கு பின் மாறி மருகி இவ்விதம் வந்து விட்டது.



Offline சாக்ரடீஸ்

அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்இ வாங்கவும் மாட்டான்

நாம் அறிந்த விளக்கம் :

அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான். ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.

விளக்கம் :

அரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம்[highlight-text] அறம் படித்தவன் [/highlight-text]என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப்படும். அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம். மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை. முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரமும் செய்யவில்லை. உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களும் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணும் மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது.
[/color][/b]

Offline சாக்ரடீஸ்

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் 

நாம் அறிந்த விளக்கம் :

வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுஇ அவ்விதமே இன்று வரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.


விளக்கம் :

இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போதுஇ எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.



Offline சாக்ரடீஸ்

உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு 

நாம் அறிந்த விளக்கம் :

மிக அழகான பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல் பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள் என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி விட்டார்கள். இந்தப் பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான் என அறியும்போது இதில் உள்ள அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.


விளக்கம் :

இந்த பழமொழியின் உண்மையான வடிவம் உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என வந்திருக்க வேண்டும். பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என அறிவுறுத்தலாய் வந்துவிட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை குடல் இறக்க நோய் ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி விட்டது.




Offline சாக்ரடீஸ்

அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது 

நாம் அறிந்த விளக்கம் :

ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப்படுகிறது. அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது என்பார்கள். இன்னும் சில இடங்களில் எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப் பானைக்குள்ளே கைய விட்டாராம் என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.



விளக்கம் :

இந்த பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதாவது அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது என்பதுதான் சரியான பழமொழி. வட்டார வழக்கில் மருவி அது மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது.




Offline சாக்ரடீஸ்

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

நாம் அறிந்த விளக்கம் :

மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.

விளக்கம் :

இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது. கர்ணணை குந்தி தேவி (போர் நிகழும்போது) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தாலும் சரி அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன். இதுவே இதன் விளக்கம் ஆகும்.




Offline சாக்ரடீஸ்

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள் 

நாம் அறிந்த விளக்கம் :

மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை. மருமகளை எப்போதாவது அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.
விளக்கம் :

பழமொழியில் [highlight-text]கழுதை என்பது கயிதை [/highlight-text]என வரவேண்டும். கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது.


[/color][/b]

Offline சாக்ரடீஸ்

கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு

நாம் அறிந்த விளக்கம் :

நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும்இ அடுத்து தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :

ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை. அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும். இதுவே இதன் விளக்கம் ஆகும்.





Offline சாக்ரடீஸ்

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

நாம் அறிந்த விளக்கம் :

பழமொழி கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்க கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :

இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. [highlight-text]நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே[/highlight-text] என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவைஇ தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.



[/color][/b]

Offline சாக்ரடீஸ்

போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை.
வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை   


நாம் அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும்இ எந்தவித பின்புலமும்இ செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன் ஸ்ரீ [highlight-text]போக்கு + கற்றவன்[/highlight-text] அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் ஸ்ரீ[highlight-text] வாக்கு + கற்றவன்[/highlight-text]இ வாக்கு என்பது சத்தியம்இ அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன்இ அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.