Author Topic: பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!  (Read 33438 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது

நாம் அறிந்த விளக்கம் :

ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி (டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம்இ நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால்; ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.


விளக்கம் :

இந்த பழமொழியில் ஆமை எனும் சொல் மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது. [highlight-text]கல்லாமை இயலாமை முயலாமை.[/highlight-text] அதாவது கல்வி இல்லாதஇ சோம்பேறித்தனம் கொண்டஇ முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு முன்னேறாது என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
[/color]

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 

நாம் அறிந்த விளக்கம் :

நல்ல மனிதனாக இருந்தால் ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும்இ இந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.


விளக்கம் :

இங்கு [highlight-text]சூடு[/highlight-text] எனும் சொல் [highlight-text]சுவடு[/highlight-text] என வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

நாம் அறிந்த விளக்கம் :

உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன்இ முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டவா போகிறான் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

உடையார்பாளையம் என்பது வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?

நாம் அறிந்த விளக்கம் :

சோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண இயலாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும் என்பது நாம் அறிந்த விளக்கம்.


விளக்கம் :

சோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு. சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும்இ தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத் துன்பம். அதை முழுவதும் நீக்க வேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் உள்ள கற்களை நன்றாக பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்க வேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக் கூட நீக்காமல் சோற்றை முழுங்கும் ஒருவன்இ சோற்றில் இருக்கும் கல் போலஇ அவனது தினசரி வாழ்வில் வரவழைத்துக் கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தையும் அறிந்து அதனைத் தடுக்கும் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழி பிறக்கும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
கல மாவு இடித்தவள் பாவி கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

நாம் அறிந்த விளக்கம் :

ஒரு கலம் மாவினை ஒருவள் இடித்துச் சலிக்க மற்றொருவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்து விட்டு நல்ல பேர் வாங்கிக் கொள்கிறாள். இது நாம் அறிந்த விளக்கம்.


விளக்கம் :

தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறை தான் இது. வீட்டில் கல்யாணம் என்றால் எல்லா வேலைகளையும் செய்வது மருமகளே. ஆனால் மேம்போக்காக வேலைகளை செய்துவிட்டு தன் அம்மாவிடம்இ அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்தனார் தான். இதுவே இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
கொடுக்குறதோ உழக்குப்பால்இ உதைக்கிறதோ பல்லுப்போக 

நாம் அறிந்த விளக்கம் :

ஒரு உழக்குப்பால் மட்டுமே கொடுக்கும் பசுஇ ஆனால் அது உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானைக் குறித்து அவன் வேலையாள் சொன்னது தான் இந்த பழமொழி.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
ஒற்றைக் காலில் நிற்கிறான்

நாம் அறிந்த விளக்கம் :

விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார் 

நாம் அறிந்த விளக்கம் :

சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால்இ கிரகணத்தைக் கவனி என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

சாஸ்த்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள் - நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வதுஇ சாஸ்த்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால்இ அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது என்பது இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது

நாம் அறிந்த விளக்கம் :

இமையின் குறைபாடுகளை அதனுள் இருக்கும் கண்ணால் பார்க்க முடியாது. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும்இ அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதுபோலஇ தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. தன் முதுகு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்

நாம் அறிந்த விளக்கம் :

ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவதுஇ கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
ஒரு குருவி இரை எடுக்கஇ ஒன்பது குருவி வாய் திறக்க

நாம் அறிந்த விளக்கம் :

இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அந்த இரைக்காக ஒன்பது குருவிக் குஞ்சுகள் வாயைத் திறக்கின்றன. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்

நாம் அறிந்த விளக்கம் :

கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்லஇ அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமைஇ மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
உங்கள் உறவிலே வேகிறதைவிடஇ ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்

நாம் அறிந்த விளக்கம் :

சுற்றமும் நட்பும் தாங்க முடியாத தொல்லைகள் ஆகும் போது பாதிக்கப்பட்டவன் சொன்னதுஇ உங்கள் உறவைவிட மரணமே மேல் என்று. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

மிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்

நாம் அறிந்த விளக்கம் :

வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
« Last Edit: September 10, 2018, 11:46:45 AM by சாக்ரடீஸ் »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1836
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல

நாம் அறிந்த விளக்கம் :

கிணறே நேற்றுதான் வெட்டியதுஇ அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம். இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :

சமீபத்தில் தெரிந்து கொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவருக்காக கூறுவது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.