நீங்கள் என்னை கடந்து போவதில் எனக்கு
எந்தவித வருத்தமும் இல்லை .
ஏனென்றால், நானும் அதே போல் உங்களையும்
ஏதோ ஒன்றையும் கடக்கத்தான் போகிறேன்.
அதில் எந்தவித சந்தேகமுமில்லை
ஆனால்
கடந்தும் ,விலகியும் போவதில்
யார் முந்திக்கொள்கிறார்கள் என்பதே போட்டி
முந்திக்கொள்கிறவர்களே நல்லவர்களாய்
தோற்றம் பெறுகிறார்கள் .