உன்னுடன் பேச நினைக்கும்
அனைத்தையும்
சத்தமின்றி பேசும் மொழி
முத்த மொழி
வலிமையானவனை மென்மையானவனாக
மாற்றும் மொழி
முத்த மொழி
சுறா மீனையும்
சிறு தூண்டிலுக்குள்
பிடித்து விடும் அதிசய மொழி
முத்த மொழி
கொடுப்பவர் பெறுபவர் இருவருக்கும்
பொதுவான மொழி
ஜாதி மத பேதம் இல்லாமல் பேசும் மொழி
முத்த மொழி
மனதை ஒரு நிலை படுத்துவது
தியானம்
இரு மனதை ஒரு நிலை படுத்துவது
முத்த மொழி