Author Topic: என்னைப் பற்றி…  (Read 1111 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
என்னைப் பற்றி…
« on: February 21, 2012, 07:32:04 PM »
காற்றை பிடித்து கால்களில் கட்டியே ...
காலம் தாண்டி பறந்திடுவேன்.....
நிலவில் நின்று முகம் பார்ப்பேன்...
நிலத்தை வென்றே நான் இருப்பேன்..
நித்திரையில் கவி படைப்பேன்....
வானவில்லை கையில் எடுத்தே
வாழ்கையை வரைந்திருப்பேன் ..!
தமிழ் அன்னைத் தாலாட்டில்....
தனை மறந்தே துயில்வேன் நான்..!
கவிஞன் என்று எனை சொல்வர்
கவலை இன்றி வாழ்ந்திருப்பேன்...!
உயிர் போன பின்னாலும் - கவிதையாய்
உங்கள் உள்ளத்தில் நானிருப்பேன்...!

Offline Yousuf

Re: என்னைப் பற்றி…
« Reply #1 on: February 21, 2012, 07:50:43 PM »
என்றும் எங்கள் உள்ளத்தில் நீங்கள் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும் கூட!

உங்களை பற்றிய கவிதை மிகவும் நன்று!

தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் ஜாவா!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: என்னைப் பற்றி…
« Reply #2 on: February 23, 2012, 02:33:10 AM »
என்னமோ மிஸ் ஆகிறதே...  ஹ்ம்ம் ... ஆ மணலை கயிறாக திரிப்பேன் .... இதையும் சேர்த்து சொல்லி இருக்கலாமே ஜாவா .... நல்ல கவிதை  கவிதையாக நல்ல தோழராக நீங்க இடம் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்