காற்றை பிடித்து கால்களில் கட்டியே ...
காலம் தாண்டி பறந்திடுவேன்.....
நிலவில் நின்று முகம் பார்ப்பேன்...
நிலத்தை வென்றே நான் இருப்பேன்..
நித்திரையில் கவி படைப்பேன்....
வானவில்லை கையில் எடுத்தே
வாழ்கையை வரைந்திருப்பேன் ..!
தமிழ் அன்னைத் தாலாட்டில்....
தனை மறந்தே துயில்வேன் நான்..!
கவிஞன் என்று எனை சொல்வர்
கவலை இன்றி வாழ்ந்திருப்பேன்...!
உயிர் போன பின்னாலும் - கவிதையாய்
உங்கள் உள்ளத்தில் நானிருப்பேன்...!