விழிகளிரண்டும்
உரசிக்கொண்ட பொழுதுகளில்
வெளிவந்த வார்த்தைகள் - இப்படி
என்னை மௌனங்களில்
புதைத்து விடுமென எண்ணவில்லை
என்றுமே
தொலைதூரம் இனணந்து வந்து
சிறு நொடியில் பிளவுபடும் எம்
நகர வீதிகள் போல
நகர்கிறது எம் வாழ்வும்
அழகான வார்த்தைகள்
யாரும் அறிய பார்வைகள்
விரல் தீண்டும் ஸ்பரிசங்கள்
விழிமூடும் கனவுகள்
எதுவும் இருந்ததில்லை
எங்கும் உனக்கும் இடையில்
ஆனாலும் நிஜமாவே
கனவுகளில் பயணித்த என்னை
நிஜங்களின் நடுவே
இழுத்து வந்தது நீ தான்
பிரியாவிடை நாளில் போடும்
ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் - போல
கனக்கிறது மனம்
காரணம் தெரிந்தால் சொல்லிவிடு
இல்லையேல் காலத்தை கனவுகளின்
பாதையில் செல்லவிடு