Author Topic: என் அன்னை  (Read 479 times)

Offline SunRisE

என் அன்னை
« on: May 07, 2017, 01:34:12 AM »
என்னை ஈன்றெடுத்த தாயே
அதற்க்கான கூலி
என்னிடம் கேட்டதில்லை

கேட்டாலும் தருவதற்கு
உனக்கு நான் குடுக்க
இணையான பரிசுகள்
இவ்வுலகில் இல்லையம்மா

பத்து மாதம் கருவில்
தாங்கினாய்
பெற்றெடுத்த பின்பும்
உங்கள் இமைகள் மூடாமல்
எம் இமைகள் மூட வைத்தாய்

பல இரவுகள் தூக்கமின்றி
நான் கரைந்த போதெல்லாம்
மடி ஏந்தி பசி தீர்த்தாய்

என்ன வரம் வேண்டும்
என உன்னிடம்
என்னால் கேட்க முடியாது
நான் படைத்தவன் இல்லை

ஒருவேளை
அந்த படைத்தவன் வந்து
என்னிடம் உனக்கு
என்ன வரம் வேண்டும் கேள்
என்றால்

என் தாய் என் மடியில்
சேயாக பிறக்க வேண்டும்
அடுத்த ஏழு ஜென்மங்கள்
என்பேன் தாயே

நீ என்னை விட்டு போனாலும்
நீ என்னோடு தான் இருப்பாய்
ஏனென்றால்
உன் மனம் பித்து
தாயே

கண்களில் ஈரத்துடன் உன் நினைவின் காணிக்கை அம்மா  :'(
« Last Edit: May 07, 2017, 03:12:02 AM by SunRisE »

Offline SweeTie

Re: என் அன்னை
« Reply #1 on: May 07, 2017, 04:09:10 AM »
உங்கள்  கவிதை  வரிகளில்  மயங்கினேன்.   உங்கள் ஆசை நிறைவேறும்  அதுவரை
காத்திருங்கள்.     நயமான கவிதை.  தொடரட்டும்  உங்கள்   கவிதைகள்.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் அன்னை
« Reply #2 on: May 07, 2017, 04:15:38 AM »
வணக்கம் சகோதரா

கலங்கிய விழிகளில்
கவிதை கண்டேன்
நெஞ்சம் நெகிழ


பொங்கி பாயும் அன்பின்
தேடலில் தெய்வீகம் அன்னை


பலரை உறையச் செய்யும்
உயிருள்ள உணர்வுக் கவிதை

அம்மா
எப்போதும் எப்படியாயினும்
உன்னதம்


மறுபடியும் பிள்ளையாய் பிறக்க
வரம் கேட்கும் பலரை கண்டதுண்டு

ஆனால்
தாயை சேயாய் சுமக்க வரம் கேட்க்கும்
உங்கள் வரம் அன்பின் ஆழி


வாழ்த்துக்கள் சகோதரா சிறப்பாக
உள்ளன உங்கள் எழுத்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்


நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

Re: என் அன்னை
« Reply #3 on: May 07, 2017, 05:34:52 AM »
உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி  ஸ்வீட்டி  மற்றும் சகோ சரித்ரன்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: என் அன்னை
« Reply #4 on: May 07, 2017, 07:26:50 AM »
Hi sun bro :) annaiku eangum mahanin vali sollum kavithai :( Ungaludaya aasaiku antha kadavul sevi saayka nanum vendikiren sun bro :) always keep smiling :)

Offline MyNa

Re: என் அன்னை
« Reply #5 on: May 07, 2017, 01:04:47 PM »
Vanakam piriyan..
Thaaiyin thiyagathuku eedethu??
Manathai kanaka seitha kavithai varigal..
Vazthukal piriyan  :)

Offline SunRisE

Re: என் அன்னை
« Reply #6 on: May 07, 2017, 01:08:25 PM »
உங்களின் அன்பு நிறைந்த பாராட்டுக்கு நன்றி சகோதரி விபூர்த்தி

Offline SunRisE

Re: என் அன்னை
« Reply #7 on: May 07, 2017, 01:12:19 PM »
தாய்மைக்கு ஈடுகொடுத்து அரவணைத்து உங்களைப்போன்ற சகோதரிகளே உங்களுடைய பாராட்டும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி மைனா