பூட்டிய மனக்கதவு திறந்து
புகுந்து விட்ட உனக்கோ
எங்கு வந்தோம் எப்படி வந்தோம்
என்று புரிவதில்லை
நீ புகுந்ததினாலோ அந்த
இதயம் கொண்ட துடிப்பு
சொல்லொன்னா தவிப்பு
சொல்லிக்கொண்டு வெளியேறவா
சொல்லாமல் உள்நுழைந்தாய் துரோகியே
உன் அவசர உள்நுழைவு
விதைக்கும் வலிகளை என்றுமே
உன் காலம் வரும் வரை
காத்திரு ஏனெனில்
காத்திருப்பு வீன்போனதில்லை
ஏனோ விரும்பும் காதல்
அமைவதில்லை
மனமோ அமையும் காதலை
விரும்புவதில்லை
மனித மனமே நீ மாறிடு என்றேனும்
ஒரு நாளாய்
என்றும் வாழ் நாள் மாறுமே உன் சரிபாதியுடன்
இனிய நாளாய்
**விபு**