Author Topic: ~ !! மயங்கினேன் உந்தன் மாய விழிகளில் !! ~  (Read 614 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

பிரம்மன் வரைந்த ஓவியம்
இவளோ ...
எந்தன் காவியமாகத் தோன்றிட
பிறந்தவள் இவளோ ....

ஒரு நொடி ஓரப்பார்வையில்
கொள்ளை கொண்டவளும்
இவளோ ...

கண நொடியில் மின்சாரம்
பாய்ச்சியவள் இவளோ ...
இமை அசைவினில் என்னை
மெய்சிலிர்க்க வைத்தவளும்
இவளோ ...

வளைந்த புருவங்கள் ...
அது வண்ணமில்லா வானவில்லோ  ...

முடி திறந்திடும் உந்தன்
இமைகள் ...
அது பூவிதழினும் மென்மை
கொண்டதோ...

வெண்மை கொண்ட மேகமோ ...
இரு கருமுத்துகளை
தாங்கிய ஆழ்கடலோ ...

முத்துக்களாய் இரு கருவிழிகள் ...
அங்கும் இங்கும்
விழிகளைச் சுழற்றுகையில்
எந்தன் பூமியும்
காலிற்கு கீழ் நழுவுகிறது
இவளாலே......
 
வசிய பார்வை
போதுமடி ...
ஒற்றைப் பார்வையில்
நெஞ்சில்
அம்பைப் பாய்த்தாயடி...

மாயவிழிகளில் மயங்கினேன்
எழுந்திட  வழியுமின்றி
வழியைத் தேட விருப்பமுமின்றி
மீண்டும் மீண்டும் மயங்கினேன் ...   


~ !! ரித்திகா !! ~
« Last Edit: March 31, 2017, 06:12:52 AM by ரித்திகா »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தங்கா.....

அழகான கவிதை.....

வாழ்த்த அதிக சிறப்புண்டு
கவிதையுள்.....

தாமதமாய் வருகின்றேன்.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ சரிதன் அண்ணா வணக்கம் ~
சிறு முயற்சியில் ஒரு கிறுக்கல்....
நேரமொதிக்கி
படித்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி அண்ணா...!!!   



~ !!! ரித்திக்கா...!!~
« Last Edit: March 30, 2017, 06:22:27 AM by ரித்திகா »


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Hi Rithi sis;) romba azhagana varigal sis;) ithu kirukal illa sis:) manathu enum kalvettil porikka pada vendiya pokkisham;) thodaratum ungal kavipayanam sis:) vazhthukkal sis;)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் தங்கா.....

மிக ஆழமான கற்பனை..... 
ரசனை மிதக்கும் நடை.....
அபாரமான வரிசை குடும்பம்.....

நிறைவான கவிதை.....

நீ செய்த இந்த கற்பனை
உன் கவிதை பயணத்தின்
மரணமில்லா ரசனை.....


வெண்மை கொண்ட மேகமோ ...
இரு கருமுத்துகளை
தாங்கிய ஆழ்கடலோ ...


வாழ்த்தி மகிழ்கின்றேன்.....
தொடர்ந்து பயணம்செய்.....
கவிதைகளில் முதிர்ச்சி காண்கின்றேன்.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....