Author Topic: என் 'அவன்'  (Read 880 times)

Offline SwarNa

என் 'அவன்'
« on: March 23, 2017, 10:53:00 PM »
தந்தையின் கண்டிப்பும்
தமையனின் பாசமும்
தாயின் ஆதுரமும்
தோழியின் அண்மையும்
சகோதரியின் சீண்டலும்
ஒருசேர உருக்கொண்டவன் நீ     
உடனிருக்கையில் கவலைகளின்றியும்
நீயில்லாத நேரம்     
நகர மறுக்கும் சண்டிக்குதிரையாய்   
 எனை தாக்குகையில்
 கனன்றுகொண்டிருக்கும் நெருப்பும்
 வெறுப்பினை என்னில் உமிழ   
தாயைத் தேடும் பிள்ளையாய்
கலக்கமுற்ற மனதுடன்
அமைதியாய் ஓரிடத்தில் வீற்றிருக்கும் நான் .                                                                             

நீ
பாசமாய் பேசுகையில் நெகிழ்ந்தும்
கண்டிககையில் பயந்துமே
உன்னுடனான என் நாட்கள் போயினும்
நின் கைத்தலம் பற்றி
பற்றுடன் நீங்கிடாது       
யாவும்   நீயாய்     
வாழ்ந்திட சித்தம்  <3 <3 <3

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் 'அவன்'
« Reply #1 on: March 24, 2017, 02:31:04 AM »
உறவுகள் :) :) பாவம் 

கவிதைக்கும்
காதலுக்கும்
பெருமை தரும் வரிகள்


உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SwarNa

Re: என் 'அவன்'
« Reply #2 on: March 24, 2017, 12:01:06 PM »
sari anna  :D
nandri na
ama
en anna uravugal  pavam ?
puriyalaye na    ::)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: என் 'அவன்'
« Reply #3 on: March 25, 2017, 12:53:20 AM »
Swar sis :) hi kavithai super sis ;) en vazhthukkal sis;)

Offline SwarNa

Re: என் 'அவன்'
« Reply #4 on: March 25, 2017, 03:04:14 PM »
ty vipu sis :)

Offline Maran

Re: என் 'அவன்'
« Reply #5 on: March 25, 2017, 08:34:08 PM »




அழகான காதல் கவிதை தோழி ஸ்வர்ணா...  :) உங்களுக்கு என்னுடைய இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி கலக்குங்க..!  :)





Offline SwarNa

Re: என் 'அவன்'
« Reply #6 on: March 25, 2017, 09:25:53 PM »
  மாறன்  அவர்களுக்கு என் மனமார்ந்த  நன்றிகள் :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் 'அவன்'
« Reply #7 on: March 25, 2017, 09:59:08 PM »
தங்கையே கிண்டல் செய்தேன்.....

காதல் எனும் உயிர் வருகையில்
அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் உறவுகள் = காதலன்
அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் உறவுகள் = காதலி


எனவே தான் சொன்னேன் உறவுகள் பாவம் என்று

உனது கவிதை காதலின் பெருமையை
சொல்லியது..... அழகான கவிதை.....
வாழ்த்துக்கள் தங்கையே..... கவிதைக்கு.
  :)
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SwarNa

Re: என் 'அவன்'
« Reply #8 on: March 25, 2017, 10:07:18 PM »
சரி அண்ணா
  நன்றி :)